இன்னும் ஒரு வருஷம் தான் ஹூண்டாய் செய்யப்போகும் அதிரடி மாற்றம்! இதுக்காக தான் உலகமே வெயிட்டு பண்ணுது

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 2025-ம் ஆண்டுக்குள் RE 100 என்ற நிலையை எட்டிப் பிடிப்பதற்கான முயற்சியில் புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன்படி அந்நிறுவனம் இன்னும் ஓராண்டில் 100% புதுப்பிக்கத்தக்க எது சக்தியை பயன்படுத்த துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது உலகம் முழுவதும் மாசு வெளியேற்றம் என்பது மிக முக்கியமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அதிகமான மாசு வெளியேறுவதால் உலகம் அதிக வெப்பமயமாகி பனிப்பாறைகள் உருகி புவி வெப்பமயமாதல் என்பது நடந்து கொண்டிருக்கிறது. இது தடுப்பதற்காக உலகம் முழுவதும் இயங்கும் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாசுகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

hyundai re100 Target

அதன் ஒரு பகுதிதான் RE 100 எனப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 100 சதவீதம் பயன்படுத்துவது. அது என்ன புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீங்கள் கேட்கலாம். நாம் உதாரணத்திற்கு மின்சாரத்தை எடுத்துக் கொண்டோமானால் அதை நிலக்கரி மூலமும் பெற முடிகிறது, அதேநேரம் காற்றாலைகள் மூலமும் பெற முடிகிறது.

நிலக்கரி மூலம் பெறும்போது பூமியின் வளம் என்பது அளிக்கப்படுகிறது. ஆனால் காற்றாலை மூலம் பெறும்போது பூமியில் வளம் எதுவும் அழிக்கப்படாமல் இருக்கிறது. இப்படியாக பூமியின் வழக்கை அழிக்காமல் பெறப்படும் ஆற்றல் தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என அழைக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூமிக்கு எந்த வித கேடையும் ஏற்படுத்தாது.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் இந்த RE 100 எனப்படும் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் கொள்கையில் இணைந்துள்ளது இதன்படி 2025-ம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் முழுவதுமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது வரை அந்நிறுவனம் 64% புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இதை விரைவில் 100% மாற்ற பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

இது குறித்த நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறும்போது: "நாம் சுற்றுச்சூழலுக்கும் நமது சமூகத்திற்கும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் உறுதி மொழியை ஏற்றுள்ளோம். இதனால் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் வகையிலான வாய்ப்புகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாசு வெளியேற்றப்படாத ஆற்றல்களை பயன்படுத்தவும் மாசில்லாத தொழில்நுட்ப தயாரிப்பு, சேவைகளை கொண்டு வரவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நாம் நமது பணிகளை மாற்றிக் கொள்ளவும் நாம் பல்வேறு முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ளோம்" என்று கூறினார்.

ஹூண்டாய் நிறுவனம் ரோபோஸ்ட் மற்றும் இன்னவேடிவ் எனர்ஜி மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற புதிய தொழில்நுட்பத்தை தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதன்படி அந்நிறுவனம் தனது செயல்பாடுகளில் குறைவான கார்பன் வெளியேற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதே நேரம் மாசுவின் அளவை வெளியேற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலில் நிறுவனத்தால் ஏற்படும் தீங்கு என்பது குறையும்.

ஹுண்டாய் நிறுவனம் கார்பன் வெளியேற்றம் என்பதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இதை இரண்டாக பிரித்துள்ளது. நேரடி கார்பன் வெளியேற்றம் மற்றும் மறைமுக கார்பன் வெளியேற்றம் என பிரித்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கார்களை தயாரிக்கும் போது ஏற்படும் மாசு வெளியேற்றத்தை குறைப்பதை நேரடி கார்பன் வெளியேற்றமாகவும் தன் தயாரிப்புகள் மூலம் எதிர்காலத்தில் நடக்க போகும் மாசு வெளியேற்றத்தை குறைப்பதில் மறைமுக மாசு வெளியேற்றமாகவும் பிரித்துள்ளது.

நேரடியாக ஆலையில் இருந்து வெளியேற்றும் மாசுவை குறைப்பதற்காக தன் நிறுவனம் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது, மேலும் எரிபொருளுக்காக நீராக மாற்றப்பட்ட நேச்சுரல் கேஸ்களை பயன்படுத்துவதுல உள்ளிட்ட செயல்களை அந்நிறுவனம் செய்து வருகிறது. இது மாசு வெளியேற்றத்தை பெறும் அளவிற்கு குறைக்கிறது.

நீர் மேலாண்மையை பொறுத்தவரை அந்நிறுவனம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தனது ஆலைக்குள்ளேயே ஆறு விதமான நீர் சேமிப்பு மையங்களை வைத்து 3.5 லட்சம் மெட்ரிக் டன் கொண்ட நீர்களை பயன்படுத்தி வருகிறது. மேலும் மழை நீரை சேமித்து அதை பயன்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் பயன்படுத்தும் 80 சதவீதமான நீர்கள் மீண்டும் சுத்திகரிக்கப்பட்ட நீர்களாக இருக்கின்றன. இதனால் தண்ணீர் செலவும் குறைகிறது.

ஹூண்டாய் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறது அல்லது குறைத்து வருகிறது. இந்நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் இயக்கங்களை சட்டரீதியிலாகவும் சர்வதேச தரத்திலும் கையாண்டு மிகக் குறைவான வகையில் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அன் நிறுவனம் 19. 4 சதவீதம் அபாயகரமான கழிவுகளையும், 14.3% அபாயம் இல்லாத கழிவுகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் மாசு இல்லாத வாகனங்களை தயாரிக்கவும் அதேநேரம் தங்களது தயாரிப்பு செயலின் போது மாசு வெளியேறுவதை குறைப்பதற்காகவும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இப்படியான நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் இந்தியாவில் மாசு என்பது மிகப்பெரிய அளவில் குறையும். மற்ற நிறுவனங்களும் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2024, 13:45 [IST]
English summary
Hyundai re100 target 100 percent renewable energy by 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+