போன வருஷ விற்பனையை கள்ள காப்பி அடிச்சிட்டாங்களா? ஜூன் மாதம் ஹூண்டாய் விற்பனையில் அதிசயம்!
ஜூலை மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட துவங்கி விட்டன. அதன்படி ஹுண்டாய் நிறுவனம் தற்போது கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களையும் 2024ம் ஆண்டு முதல் அரையாண்iடிற்கான விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் இந்நிறுவனம் உள்நாட்டில் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது? வெளிநாட்டில் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 64,083 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. அதில் உள்நாட்டில் மட்டும் 50,103 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 14,700 வாகனங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டு விற்பனையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஒரே அளவிலான விற்பனை இருக்கிறது. வெளிநாட்டு ஏற்றுமதியில் விற்பனை சரிவு என்பது ஏற்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் உள்நாட்டில் மட்டும் மொத்தம் 50,103 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 50,001 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது வெறும் 102 வாகனங்கள் தான் விற்பனையாகி உள்ளன. இது 0.2 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 49,151 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது கடந்த ஜூன் மாதம் மொத்தம் 952 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 1.94 சதவீதம் அளவிற்கு உள்நாட்டு விற்பனை ஒரே மாதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்ன சொல்லலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த ஜூன் மாதம் மொத்தம் 16,700 வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 17,600 வாகனங்கள் ஏற்றுமதி செய்துள்ளது. அதை ஒப்பிடும்போது கடந்த ஜூன் மாதம் 900 வாகனங்கள் குறைவாக ஏற்றுமதியாகியுள்ளது. இது 5.77% அளவிற்கு ஏற்றுமதியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனையாக இரண்டையும் பார்க்கும்போது ஹுண்டாய் நிறுவனம் மொத்தமாக 64,083 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 65,061 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்திருந்தது. இது 798 வாகனங்கள் அரையாண்டில் விற்பனையில் சரிவே ஏற்படுத்தி 1.22 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இந்த 2024ம் ஆண்டு காலண்டர் ஆண்டிற்கான முதல் அரையாண்டு விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளன. அதன்படி இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் உள்நாட்டு விற்பனைக்காக 3,00,972 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது.
இதுவே கடந்த 2023ம் ஆண்டு இதே காலகட்டத்தில் உள் நாட்டு விற்பனையை பொருத்தவரை 2,96,010 வாகனங்களை தான் தயாரித்து விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 13,762 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. இது 4.65 சதவீதம் அளவிற்கு நிறுவனத்திற்கு வளர்ச்சியை கொடுத்துள்ளது.
அடுத்ததாக ஏற்றுமதியை பொருத்தவரை மொத்தம் 76,000 வாகனங்களை கடந்த ஆறு மாதத்தில் இந்நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே 2023ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 69,020 வாகனங்களை தான் இந்நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது 6980 வாகனங்கள் கூடுதலாக ஏற்றுமதி ஆகியுள்ளன. இது 10.11% அளவிற்கு ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.
முதல் அரையாண்டு நடந்த விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் 91,348 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இந்த ஆறு மாதத்தில் இத்தனை கார்கள் தயாரித்து விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்ட விற்பனையை ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகமாகும். இந்நிறுவனத்தின் எஸ்யூவி கார் தான் அதிக அளவிலான விற்பனையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் சிறப்பான எண்ணிக்கையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. தொடர்ந்து இந்நிறுவனம் வளர்ச்சியை பெற்று வரும் நிலையில் கடந்த ஜூன் மாதமும் விற்பனையை பார்க்கும் போது பெரிய அளவில் வளர்ச்சியும் இல்லை. பெரிய அளவில் வீழ்ச்சியும் இல்லை. நிதானமாக விற்பனையை பெற்றுள்ளது என சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









