டாடா, மாருதி எல்லாம் ஓரமா போ! ஹூண்டாய் செய்த சாதனையை தான் ஊரே பேசுது!
ஹூண்டாய் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மற்றும் கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான விற்பனை விபரங்களை எல்லாம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் மற்றும் கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் எவ்வளவு விற்பனை பெற்றுள்ளது என்ற விபரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
ஏப்ரல் மாதம் பிறந்துவிட்ட நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த மார்ச் மாத விற்பனை மற்றும் கடந்த 2023-24-ம் நிதியாண்டிற்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளன. அதன் படி ஹூண்டாய் நிறுவனமும் இந்த விற்பனை விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது நமக்கு தெரிகிறது. முதலில் மார்ச் மாத விற்பனை விபரங்களை பார்ப்போம்.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மொத்தமாக 65,601 வாகனங்களை விற்பனை செய்துள்ளது இதில் 53,001 வாகனங்கள் உள்நாட்டிலும், 12,600 வாகனங்கள் வெளிநாட்டிலும் ஏற்றுமதியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக விற்பனையை பார்க்கும் போது கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாத விற்பனையை விட 7சதவீதம் அதிகமாக இருக்கிறது.
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹூண்டாய் நிறுவனம் மொத்தமாக 695,00 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதில் உள்நாட்டில் 50,600 வாகனங்களையும் ஏற்றுமதிக்கு 10,900 வாகனங்களையும் ஏற்றுமதி செய்திருந்தது. இதில் உள்நாட்டு விற்பனையில் 5% ஏற்றுமதியில் 16 சதவீதமும் வளர்ச்சியடைந்து ஒட்டுமொத்தமாக 7 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

கடந்த 2023-24 ஆம் நிதியாண்டின் விற்பனை விவரங்களை பொருத்தவரை ஹூண்டாய் நிறுவனம் மொத்தமாக 7,776 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இதில் உள்நாட்டில் மட்டும் 6,14,721 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. 1,63,155 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்திருந்தது. நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 8 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
கடந்த 2022-23 நிதி ஆண்டு விற்பனையை பார்க்கும்போது ஹுண்டாய் நிறுவனம் மொத்தமாக 7,20,565 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. உள்நாட்டில் 5,67,546 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதியில் 1,53,019 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. உள்நாட்டில் 8.3 சதவீத வளர்ச்சியும், ஏற்றுமதியில் 6.7 சதவீத வளர்ச்சியும் இந்நிறுவனம் பெற்றிருந்தது.

ஹூண்டாய் நிறுவனத்தைப் பொறுத்தவரை தற்போது கிராண்ட் ஐ10 நியோஸ், ஆரா, ஐ20, வென்யூல எக்ஸ்டர், வெர்னா, அல்கஸார், டுஸான் ஆகிய கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களின் விற்பனையை பொருத்தே மேலே சொல்லப்பட்ட விற்பனை விபரம் என்பது நமக்கு கிடைத்துள்ளது. இதில் ஒவ்வொரு வாகனமும் எவ்வளவு விற்பனையை பெற்றுள்ளது என்ற விபரம் பின்னர் வெளியிடப்படும்.
கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் ஹூண்டாய் நிறுவனம் புதிதாக எக்ஸ்டர், கிரெக்டா,கிரெட்டா என்-லைன், புதிய ஐ20 ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியது. இது மட்டுமல்லாமல் வென்யூ மற்றும் வென்யூ என்-லைன் ஆகிய கார்களில் அடார்ஸ் தொழில்நுட்பத்தை உட்பகுத்தி அறிமுகப்படுத்தியிருந்தது. இதுதான் இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்திய கார்களின் விபரம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்த 2024-25ம் நிதியாண்டிலும் தொடர்ந்து இதே போன்ற வளர்ச்சியை பெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இதற்காக புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது. ஏற்கனவே விற்பனையாகி வரும் தயாரிப்புகளை அப்டேட் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்ய திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









