ஹூண்டாய் இத்தனை கார்களை விற்றுள்ளது என சொன்னால் டாடாவுக்கு பொறாமையா இருக்கும்!! ஹூண்டாயில் கஸ்டமர்களின் சாய்ஸ்

ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இந்த 2வது இடத்திற்கு ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இடையே கடந்த சில வருடங்களாக பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில் சில மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது என்றாலும், பெரும்பாலான மாதங்களில் 2வது இடம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு தான் சொந்தமாகி உள்ளது. இந்த நிலையில், கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் எத்தனை ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அவை எவ்வளவு அதிகம் என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 49,525 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 ஆகஸ்ட்டில் ஹூண்டாய் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 50 ஆயிரத்தை கடந்து 53,830 ஆக பதிவாகி இருந்தது. இதன்படி பார்க்கும்போது, ஹூண்டாய் கார்களின் விற்பனை ஆனது 4,305 யூனிட்கள் குறைந்துள்ளது.

hyundai sold 49525 cars

ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 49,013 கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. 2024 ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 512 ஹூண்டாய் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல், கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக முதலிடத்தை கிரெட்டா பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 16,762 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2023 ஆகஸ்ட்டில் 13,832 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 2,930 ஹூண்டாய் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் 17,350 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கை 588 குறைவாகும்.

hyundai sold 49525 cars

இந்தியாவில் ஹூண்டாய் காரை வாங்கும் 3இல் ஒருவரது தேர்வு நிச்சயமாக கிரெட்டாவாக உள்ளது. கிரெட்டாவுக்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக 2வது இடத்தில் வென்யூ உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 9,085 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட்டில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இந்த ஆண்டு ஜூலையில் 8,840 வென்யூ கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது.

இதற்கடுத்து 3வது இடத்தில் ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி காரான எக்ஸ்டர் 6,632 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2023 ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் 10.74% அதிகமாக 7,430 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 9.86% குறைவாக 6,037 எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 4வது இடத்தை விலை குறைவான ஹூண்டாய் காரான கிராண்ட் ஐ10 நியோஸ் பிடித்துள்ளது.

hyundai sold 49525 cars

கடந்த மாதத்தில் 5,365 ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்டரை போன்று, இந்த காரின் விற்பனை எண்ணிக்கையும் 2023 ஆகஸ்ட்டில் 7 ஆயிரத்தை கடந்திருந்தது. இதற்கடுத்து 5வது இடத்தில் ஐ20 கார் உள்ளது. ஹூண்டாயின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான ஐ20 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4,913 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, அவ்ரா செடான் காரையும் கடந்த மாதத்தில் 4,304 யூனிட்கள் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ள ஹூண்டாய் கார்களாவன வெர்னா மற்றும் அல்கஸார் ஆகும். இவை இரண்டும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முறையே 1,194 மற்றும் 1,105 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 9வது மற்றும் 10 வது இடங்களில் டக்ஸன் (125) மற்றும் ஐயோனிக் 5 (40) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 10 கார்கள் இல்லாமல், கோனா இவி என்கிற எலக்ட்ரிக் காரையும் இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் விற்பனை செய்கிறது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கோனா எலக்ட்ரிக் கார் கூட விற்பனை செய்யப்படவில்லை. இந்த செப்டம்பர் மாதத்தில் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படுவதால், இன்னும் சில மாதங்களுக்கு அல்கஸார் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 14, 2024, 8:00 [IST]
English summary
Hyundai sold 49525 cars in august 2024 check all details here
மேலும்... #hyundai #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X