என்னங்க இந்த காரை தேனு மிட்டாய் கணக்கா வாங்கிட்டு இருக்காங்க! போன மாசம் கிரெட்டா இவ்ளோ சேலாகியிருக்கா!
இந்தியர்களின் பிரியமான எஸ்யூவி ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyndai Creta) இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி கார் மாடல் என்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது. அந்தவகையில் நடந்து முடிந்த 2024 மே மாதத்தில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை அந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே 49 ஆயிரத்து 151 யூனிட்டுகள் கார்களையே ஹூண்டாய் விற்றிருக்கின்றது. அதில் கிரெட்டா மட்டும் 14 ஆயிரத்து 662 யூனிட்டுகள் ஆகும்.
இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் தோராயமாக 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மாபெரும் விற்பனையை ஒற்றை கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா பெற்றிருக்கின்றது. சென்ற மே மாதத்தில் மட்டுமில்லைங்க இதற்கு முந்த மாதத்திலும் கிரெட்டா மிக சிறப்பான விற்பனையையே பெற்றிருக்கின்றது.

அந்தவகையில், இந்த ஆண்டு ஜனவரியில் 13,212 யூனிட்டுகளும், பிப்ரவரி மாதத்தில் 15,276 யூனிட்டுகளும், மார்ச் மாதத்தில் 16,458 யூனிட்டுகளும் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 15,447 யூனிட்டுகளும் விற்பனையாகி இருக்கின்றது. இவை அனைத்தும் மிக மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கை கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இப்போதைய நிலவரப்படி ஹூண்டாய் நிறுவனத்தின்கீழ் கிராண்ட் ஐ10, நியோஸ், ஐ20, ஐ20 என் லைன், அவுரா, வெர்னா, கிரெட்டா, கிரெட்டா என் லைன், வென்யூ, வென்யூ என் லைன், எக்ஸ்டர், அல்கஸார், டக்சன் ஆகிய கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இதேபோல், ஐயோனிக் 5 மற்றும் கோனா எலெக்ட்ரிக் ஆகிய மின்சார கார்களையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பை கிரெட்டா பெற்றுக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவே சேல்ஸில் இந்த கார் மாடல் சரவெடி வெடித்துக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.
விற்பனையில் மட்டுமல்ல பெண்டிங் ஆர்டர்களைக் கொண்டிருப்பதிலும் இந்த கார் மாடலே முன்னணியில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்போதைய நிலவரப்படி 65 யூனிட்டுகளுக்கான பெண்டிங் ஆர்டர்கள் உள்ளன. இதில் பாதி கிரெட்டாவிற்கானது என கூறப்படுகின்றது. இதை நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கிரெட்டா (2024 Hyundai Creta Facelift)-வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இ, இஎக்ஸ், எஸ், எஸ்(ஓ), எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் டெக் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை இந்த காரில் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வெளி மற்றும் உள் பக்கத்தில் அது கணிசமான மாற்றங்களைச் செய்தே விற்பனைக்குக் கொண்டு வந்தது.
இந்த மாற்றமே அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை தற்போது மேலும் அதிகரித்து வழங்கிக் கொண்டிருக்கின்றது. புதிய கிரில் மற்றும் முழு நீள எல்இடி லைட்டுகள் என பல தனித்துவமான அம்சங்கள் புதுப்பித்தலின்கீழ் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, புத்தம் புதிய டேஷ்போர்டு, டச் கன்ட்ரோல் வசதி திரை ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், டேஷ்போர்டில் மெல்லிய ஏசி வெண்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக, ஆம்பியன்ட் லைட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், அடாஸ் அம்சம், 360 டிகிரி கேமிரா, டைப் சி வகை யுஎஸ்பி சார்ஜர், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கத்தில்), பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவில் வழங்கப்பட்டு உள்ளன.
இதேபோல் பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாக இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ ஹோல்டு மற்றும் முன்-பின் பக்க பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதிரியான அம்சங்களும், கவர்ச்சியான தோற்றமுமே கிரெட்டாவின் இந்தியர்கள் ஈ போல் மொய்க்க காரணமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிரெட்டாவிற்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதை தற்போதைய விற்பனை புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்த டிமாண்ட் அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் நிலவும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதற்குள்ள பெண்டிங் ஆர்டர்கள் இருக்கின்றன. சுமார் 32,500 பெண்டிங் ஆர்டர்களை கிரெட்டா கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








