நம்ப முடியாத குறைவான விலையில் களமிறங்கும் எலெக்ட்ரிக் கார்! டாடா பொருளை எடுத்து டாடாவையே போட போறாங்க!

இந்திய சந்தையில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் தற்போதைய நிலையில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் காரை (Electric Car) மட்டும்தான் விற்பனை செய்து வருகிறது. அது ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகும். 46.05 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மிகவும் விலை உயர்ந்த காராக இருப்பதால், வசதி படைத்தவர்களால் மட்டுமே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும் என்ற சூழல் உள்ளது.

முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் மற்றொரு எலெக்ட்ரிக் காரையும் விற்பனை செய்து வந்தது. அது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகும். இந்த காரின் விற்பனை சமீபத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரும் கூட சற்று அதிகமான விலையில்தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Hyundai Exter

எனவே ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து சற்று விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக 4 புத்தம் புதிய 'மாஸ் மார்க்கெட்' எலெக்ட்ரிக் கார்களை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதில் முதலில் விற்பனைக்கு வரவிருப்பது ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி, வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

Hyundai Grand i10 Nios Side Design

சுமார் 18 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ஹூண்டாய் க்ரெட்டா இவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது ஹூண்டாய் எக்ஸ்டர் இவி (Hyundai Exter EV) என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் கார் வெறும் 10 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 2026ம் ஆண்டின் 2வது பாதியில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர மேலும் 2 எலெக்ட்ரிக் கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கவுள்ளது.

இதில், ஹூண்டாய் வெனியூ இவி (Hyundai Venue EV) ஒன்றாகும். சுமார் 12 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ஹூண்டாய் வெனியூ இவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இதுதவிர ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் இவி (Hyundai Grand i10 Nios EV) எலெக்ட்ரிக் காரையும், ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் கார், வெறும் 8 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் எக்ஸ்டர், ஹூண்டாய் வெனியூ மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய 4 கார்களும் தற்போது விற்பனையில் உள்ள மாடல்கள் ஆகும்.

இவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களைதான், ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது தற்போது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கையாண்டு வரும் யுக்தி ஆகும். ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்வதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் யுக்தி.

அதே யுக்தியை கையாண்டு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆம், ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரானது, (Tata Curvv EV) எலெக்ட்ரிக் காருடன் போட்டியிடும். மறுபக்கம் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரானது, டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காருடன் போட்டியிடும்.

அதே நேரத்தில் ஹூண்டாய் வெனியூ இவி எலெக்ட்ரிக் காரானது, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) உடனும், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் இவி எலெக்ட்ரிக் காரானது, டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காருடனும் போட்டியிடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 8, 10, 12 மற்றும் 18 லட்ச ரூபாய் என ஓரளவிற்கு குறைவான ஆரம்ப விலைகளில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஆனால் இவை அனைத்தும் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 16, 2024, 23:56 [IST]
English summary
Hyundai to launch 4 new affordable electric cars in india all details here
மேலும்... #hyundai #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+