ஹூண்டாய் கிட்ட இப்படி ஒரு கார் இருக்குறதே பாதி பேருக்கு தெரியாது! எத்தனை பேர் வாங்குனாங்க தெரியுமா?

இந்தியாவின் மிகச் சிறந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹுண்டாய் நிறுவனம் தான் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் இந்த கார் வெறும் 110 கார்கள்தான் விற்பனையாகி உள்ளன. இது 81% விற்பனை வீழ்ச்சியாகவும் இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய நல்ல பெயர் இருக்கிறது. ஹூண்டாய் கிரெட்டா கார் மிட் சைஸ் செக்மெண்டிலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களும் நன்றாக விற்பனையாகி வருகின்றன. ஹூண்டாய் கிரெட்டா காரை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் மொத்தம் 16, 458 கார்கள் விற்பனையாகியுள்ளன.

hyundai tucson sales march 2024

இதில் ஹூண்டாய் நிறுவனம் கிரெக்டா கார் விற்பனையில் மட்டும் 17 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஹூண்டாய் டுஸான் கார் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவு விற்பனை வீழ்ச்சியையும் பெற்றுள்ளது. இந்தியாவின் டாப் 10 கார் தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் ஒரு கார் ஒரு மாதத்தில் வெறும் 110 கார்கள் தான் விற்பனையாகியுள்ளன என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

ஆம் ஹூண்டாய் நிறுவனத்தின் டுஸான் கார் கடந்த மார்ச் மாதம் வெறும் 110 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனையான 581 என்ற விற்பனையை ஒப்பிடும்போது சுமார் 81% வீழ்ச்சியடைந்து அடைந்துள்ளது. இந்த ஹூண்டாய் டுஸான் கார் ஏன் வீழ்ச்சி அடைந்தது. இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன இந்த காரின் விலை என்ன என்ற விபரங்களை பார்ப்போம்.

hyundai tucson sales march 2024

இன்ஜினை பொறுத்தவரை இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் முதல் இன்ஜின் ஆப்ஷனாக இருக்கிறது. இது 186 பிஎச்பி பவரையும் 416 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இன்ஜின் ஆப்ஷன் போக பெட்ரோலியம் ஆப்ஷனும் இருக்கிறது.

பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 156 பிஎச்பி பவரையும் 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு கடந்த மாதம் ரூபாய் 2 லட்சம் வரை தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

hyundai tucson sales march 2024

இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25 இன்ச் டிரைவர் டிஸ்பிளே, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் பேனரோமிக் மற்றும் டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹீட்டர் மற்றும் வென்டிலேஷன் ஆப்ஷன் கொண்ட முன்பக்க சீட்டுகள், வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா உள்ளீட்டு அம்சங்கள் இருக்கிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 29.02 லட்சம் முதல் ரூபாய் 35.94 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் விற்பனை சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது இதன் விலை தான். இந்த காரின் விலைக்கு போட்டியாக மார்க்கெட்டில் உள்ள கார்கள் இதைவிட அதிக அம்சங்கள் மற்றும் கொண்டதாக இருக்கிறது. அதனால் மக்கள் பலர் இவ்வளவு அதிகமான விலை கொடுத்து இந்த காரை வாங்க தயாராக இல்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் டுஸான் காரை வாங்க வெகு சில மக்களே தயாராக இருக்கிறார்கள். அதுவும் ஹூண்டாய் நிறுவனத்தின் பெயருக்காக தான் இந்த காரை வாங்குகிறார்கள். ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் பல்வேறு அம்சங்களை அப்டேட் செய்து காரின் லுக்கையும் மாற்றினால் நிச்சயம் இந்த காரின் விற்பனை அதிகமாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2024, 16:15 [IST]
English summary
Hyundai tucson sales only 110 units sold in march 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X