டாடா சோலியை முடிக்க செம பிளான் போட்ட ஹூண்டாய்! இந்த காரெல்லாம் இவி வெர்ஷன்ல வருதா?
ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 5 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரும் என்ற பேச்சு தற்போது நிலவி வருகிறது. ஹுண்டாய் நிறுவனமும் தற்போது எலெக்ட்ரிக் காரை தயாரிக்க தீவிரமாகி உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹுண்டாய் நிறுவனத்தில் கடந்த 23ம் தேதி நடந்த டவுன்ஹால் மீட்டிங்கில் அந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான பிரத்தியேக தயாரிப்பு லைனை உருவாக்க முடிவு செய்துள்ளது குறித்த தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் கோனா இவி மற்றும் அயானிக் 5 ஆகிய கார்களை பிரிமியம் எலெக்ட்ரிக் கார்களாக விற்பனை செய்து வருகின்றன.

இந்நிறுவனம் மாஸ் மார்க்கெட்டிற்கான எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தற்போது திட்டமிட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மாஸ் மார்க்கெட்டிற்கான முதல் எலெக்ட்ரிக் காராக ஹூண்டாய் கிரெட்டா இவி கார் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இதன்படிக்க 2025-ம் ஆண்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் ஆகும்போது ஒரு தடவை சார்ஜ் போட்டால் 400 முதல் 450 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையிலான பேட்டரி மற்றும் மோட்டார் அம்சங்கள் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டிற்கு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாட்டா கர்வ் இவி, மாருதி இவிஎக்ஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இந்த கார் களமிறங்க வாய்ப்புகள் உள்ளன.

கிரெட்டா இவி காரை தொடர்ந்து வென்யூ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த வென்யூ எலெக்ட்ரிக் காரும் 2025-ம் ஆண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன இந்த வென்யூ கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் டாடா நெக்ஸான் இவி காருக்கு போட்டியாக இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளன.
ஹூண்டாய் கிரெட்டா காரின் மூன்று வரிசை சீட்டர் கொண்ட காரிலும் எலெக்ட்ரிக் வெர்ஷனை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காரில் ஹுண்டாய் கிரெக்டா இவியில் உள்ள அதே அம்சங்கள் பகிரப்பட்டு இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் வரவுள்ள ஃபேஸ்லிஃப்ட் மாடலை மையப்படுத்தி இவி கார் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக ஹுண்டாய் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் காராக தனது எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மார்க்கெட்டில் உள்ள பஞ்ச் இவி மற்றும் எம்ஜி கோமெட் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ரூபாய் 10-12 லட்சம் என்ற நிலையில் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இறுதியாக ஏற்கனவே விற்பனையாகி வரும் அயானிக் 5 காரை ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை காராக அப்டேட் செய்து 2030-ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு அறிமுகப்படுத்த அதிகமான வாய்ப்பு உள்ளது. இப்படியாக இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாகும் போது முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காராக இது விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்படி வந்தால் இதன் விலை குறைய ஏராளமான வாய்ப்பு இருக்கிறது .
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தனி தயாரிப்பு லைனை உருவாக்கிய அங்கு ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகும் என்ற பேச்சு நிலவி வரும் நிலையில், அந்த மார்கெட்டையும் பிடிக்க தற்போது இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் இரண்டு அதிகமானால் அந்த மார்க்கெட்டை தாங்கள் இறந்து விடக்கூடாது என மாருதி ஹூண்டாய் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. அதற்காக பல்வேறு விதமான முயற்சியில் இறங்கியுள்ளது. ஹூண்டாய், மாருதி போன்ற நிறுவனங்களை எலெக்ட்ரிக் கார்களை தயாரித்தால் தற்போது அதில் கிங்காக இருக்கும் டாடா நிறுவனத்திற்கு தலைவலி தான்.


Click it and Unblock the Notifications









