ரூ1.87 லட்சம் கம்மியான விலையில் இந்த காரை வாங்க இப்படி ஒரு வழி இருக்குதா?

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரை இந்திய ராணுவ கேண்டீன் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ராணுவ கேண்டீனில் இந்த காரை ஜிஎஸ்டி வரி இல்லாமல் வாங்க முடியும் ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு இப்படியான வாய்ப்பு இருக்கிறது இப்படியாக வெளிமார்க்கெட்டில் இந்த காரை வாங்குபவர்களுக்கும் ராணுவ கேண்டில் இந்த காரை வாங்குபவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரை பொருத்தவரை மொத்தம் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷனும் ராணுவ கேண்டீனில் விற்பனையாகி வருகிறது. அதில் குறிப்பிட்ட சில வேரியண்ட்கள் மட்டும் ராணுவ கேண்டீனில் கிடைப்பதில்லை. வெளிமார்க்கெட்டில் மட்டுமே கிடைக்கிறது.

hyundai venue csd price

இதில் முதலாவதாக 1.2லிட்டர் பெட்ரோல் மேனுவல் இன்ஜினை பொறுத்தவரை இ வேரியன்ட் வெளிமார்க்கெட்டில் ரூ7.94 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டீனில் ரூ6.61 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது இதன் வித்தியாசம் ரூ1.33 லட்சம் ஆகும் எஸ் வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ9.10 லட்சம் என்ற விலையிலும் ராணுவ கேண்டீனில் ரூ 7.77 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசமும் ரூ 1.33 லட்சம் ஆகும்.

அடுத்ததாக எஸ்ஓ வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ9.88 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. ராணுவ கேண்டினில் ரூ8.29 லட்சம் தான் இதன் வித்தியாசம் ரூ1.58 லட்சம் ஆகும் எஸ்இஎக்ஸ் வேரியண்டை பொறுத்தவரை வெளி மார்க்கெட்டில் ரூ11.05 லட்சம் என்ற விலையிலும் ராணுவ கேண்டீனில் ரூ 9.36 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.69 லட்சம் ஆகும்.

hyundai venue csd price

மேலும் இந்த இன்ஜின் ஆப்ஷனில் எஸ் ஓ நைட், எஸ் எக்ஸ் டூயல் டோன், எஸ்இஎக்ஸ் நைட், எக்ஸ் எக்ஸ் டிடி நைட், ராணுவ கேண்டினில் விற்பனைக்கு இல்லை அடுத்ததாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட இன்ஜின் ஆப்ஷன் கொண்ட வாகனங்களின் வேரியண்ட் குறித்த விவரங்களை காணலாம் வாருங்கள்.

இதில் எஸ்ஓ வேரியண்ட் வெளிமார்க்கெட்டில் ரூ10.75 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூ 9.15 லட்சம் என்ற வெளியிடும் விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ 1.61 லட்சம் சேமிப்பு செய்ய முடியும். மார்க்கெட்டில் ரூ 12.44 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூ10.75 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ1.69 லட்சம் மிச்சம் ஆகும்.

hyundai venue csd price

இந்த இன்ஜின் ஆப்ஷனில் இந்த இரண்டு வேரியண்ட்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. மற்ற வேரியண்ட் எஸ்எக்ஸ் டூயல் டோன், எஸ் எக்ஸ் ஒ நைட், எஸ் எக்ஸ் ஒ டிடி நைட் ஆகிய வேரியண்ட்கள் ராணுவ மார்க்கெட்டில் விற்பனைக்கு இல்லை. அடுத்ததாக இதே இன்ஜின் ஆப்ஷனில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட வேரியண்ட்களாக விற்பனையாகி வருகின்றன.

இதில் எஸ் ஓ வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ11.85 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூ10.13 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. எஸ்இஎக்ஸ் பொறுத்தவரை ரூ 13.23 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூ11.36 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டீனிலும் விற்பனையாகிறது. இதன் மூலம் முறையே ரூ1.72 லட்சமும் , ரூ1.87 லட்சமும் மிச்சமாகும் மற்ற வேரியண்ட்கள் எதுவும் ராணுவ மார்க்கெட்டில் விற்பனைக்கு இல்லை.

அடுத்ததாக 1.5 லிட்டர் டர்போர்ட் டீசல் மேனுவல் வேரியன்டை பொறுத்தவரை எஸ் பிளஸ் என்ற வேரியன்ட் வெளி மார்க்கெட்டில் ரூ10.70 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் 9.42 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ1.29 லட்சம் மிச்சமாகும், எஸ்இஎக்ஸ் வேரியண்ட் வெளி மார்க்கெட்டில் ரூ12.37 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூ10.9 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது.

இதன் மூலம் 1.37 மிச்சமாகும் எஸ்இஎக்ஸ் பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ 13.28 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூ 11.80 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.47 லட்சம் ஆகும் மற்ற வேரியண்ட்கள் எதுவும் ராணுவ மார்க்கெட்டில் விற்பனைக்கு இல்லை.

இந்தியாவில் வெளி மார்க்கெட்டில் விற்பனையாகும் விலைகளை விட ராணுவ கேண்டீனில் விற்பனையாகும் பொருட்களின் விலை மிக குறைவாக இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் ராணுவ கேண்டீனில் ஜிஎஸ்டி வரி கிடையாது. வெளிமார்க்கெட்டில் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த ராணுவ கேண்டீனில் ராணுவ வீரர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இந்த கார்களையும் ராணுவ வீரர்கள் மட்டுமே வாங்க முடியும்.

இதுவும் குறிப்பிட்ட ராணுவ வீரர்களுக்கான அளவுகள் இருக்கிறது. அந்த அளவுகளை வைத்து தான் அவர்கள் கார் பைக் போன்ற விஷயங்களை வாங்க முடியும். இப்படியாக வாங்கப்படும் வாகனங்கள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யவும் பல்வேறு விதமான தடைகள் இருக்கிறது. ராணுவ கேண்டீனில் வாங்கப்பட்ட வாகனத்தை வெளிமாக்கெட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தான் விற்பனை செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராணுவ கேண்டீனில் மூலம் கார்களை வாங்க விரும்பும் ராணுவ வீரர்கள் இந்த தகவலை பயன்படுத்தி குறைந்த விலையில் ராணுவ கேன்டினில் அவர்கள் விரும்பும் காரை வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக இந்த வென்யூ கார் தற்போது குடும்பங்கள் பயன்படுத்தும் காராக இருப்பதால் ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்திற்காக இந்த காரை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் இந்த தகவலை வழங்கியுள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2024, 16:13 [IST]
English summary
Hyundai venue csd price vs ex showroom 2024 comparison details
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X