குடும்பங்கள் விரும்பும் சன்ரூஃப் கொடுத்தும் இவ்ளோ கம்மி விலையில் விற்க போறாங்களா! கெத்து காட்டும் ஹூண்டாய்!
இந்தியர்கள் மத்தியில் சன்ரூஃப் (SunRoof) வச்ச கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) தன்னுடைய அதிகம் விற்பனையாகும் மற்றும் விலை குறைவான கார் மாடல்களில் ஒன்றான வென்யூ (Venue)-வில் புதிய தேர்வை சன்ரூஃப் வசதியுடன் கம்மியான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதிய தேர்வானது வென்யூ இ பிளஸ் (Venue E+) எனும் பெயரிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 8.23 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். குறிப்பாக சன்ரூஃப் வச்ச கார்களுக்கு குடும்பஸ்தர்கள் மத்தியிலேயே நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இளைஞர்கள் மத்தியிலும், குழைந்தகள் இருக்கும் வீட்டிலும் சன்ரூஃப் கொண்ட கார்களுக்கு சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

இவர்களைக் கவரும் நோக்கிலேயே ஹூண்டாய் நிறுவனம் வென்யூவில் புதிய சன்ரூஃப் கொண்ட விலை குறைவான வேரியண்டை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. சமீபத்தில் இதே கார் மாடலில் வென்யூ எஸ்(ஓ) பிளஸ் எனும் புதிய வேரியண்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவும் சன்ரூஃப் கொண்ட மாடலே ஆகும்.
இதுதவிர, எஸ் பிளஸ் எனும் ஆப்ஷனையும் சில வாரங்களுக்கு முன்னர் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியுடன் ஹூண்டாய் விற்பனைக்குக் களமிறக்கியது. இதுதவிர, இதற்கு முன்னதாகவும் இதுபோன்று புதிய தேர்வுகளை வென்யூவில் ஹூண்டாய் இணைத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது மேலும் ஓர் தேர்வை புதிதாக தற்போது அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த புதிய தேர்வானது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஆரம் நிலை தேர்வான இ-க்கு மேல் இடத்திலும், எஸ்-க்கு கீழ் இடத்திலும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த புதிய தேர்வில் சன்ரூஃப் மட்டுமல்ல இன்னும் பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்களையும் ஹூண்டாய் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், வண்ண டிஎஃப்டி எம்ஐடி ஸ்கிரீன் உடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வென்யூ இ பிளஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஹெட்ரெஸ்ட் முன் மற்றும் பின் பக்கங்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக கூடுதல் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்குவதை இந்த தேர்வில் ஹூண்டாய் உறுதி செய்திருக்கின்றது.
இத்துடன், 2 படிநிலைகளில் சாய்த்துக் கொள்ளும் மற்றும் 60:40 வசதிக் கொண்ட பின் பக்க இருக்கைகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, நீண்ட தூர டிராவலுக்கும் ஏற்ற காராக இது இருக்கும் என தெரிகின்றது. தொடர்ந்து, இந்த காரை குடும்பங்களுக்கான பாதுகாப்பான பயணத்தை தரும் நோக்கில் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், பகல் மற்றும் இரவு நேரத்தில் ஒளிரும் வசதிக் கொண்ட ஐஆர்விஎம், 3 முனைகளைக் கொண்ட சீட் பெல்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுபோன்று பலதரப்பட்ட அம்சங்களை இந்த காரில் வழங்குவதனால்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக வென்யூ காட்சியளிக்கின்றது. இதில் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களை ஹூண்டாய் வழங்குகின்றது. அந்தவகையில், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களிலேயே வென்யூ விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஆனால், புதிய வேரியண்டான இ பிளஸ்-ஸை 1.2 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே வாங்கிக்க முடியும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த காரில் ஐந்து பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆகையால், சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற கார் மாடலாக வென்யூ இருக்கின்றது. இதன் பக்கமே கூடுதல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஹூண்டாய் புதிய தேர்வுகளை அவ்வப்போது விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது. எனவே வரும் நாட்களிலும் இந்த கார் மாடல் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் பேர் சொல்லும் கார் மாடலான கிரெட்டா மற்றும் ஐ10 போன்ற கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். அந்த அளவிற்கே இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த காராக இது மாறியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









