சன்ரூஃப் வச்ச கார் இவ்வளவு கம்மி விலையா? சேல்ஸ் சும்மா பிச்சுக்கப்போகுது!
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ எஸ் பிளஸ் என்ற வேரியண்டில் சன்ரூஃப் ஆப்ஷன் உடன் அப்டேட் செய்த அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வேரியன்ட் தற்போது 1.2 லிட்டருக்கு கப்பா பெட்ரோல் இன்ஜின் என்ற ஒரே பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் தற்போது தனது வென்யூ எஸ்+ வேரியண்ட் காரில் இந்திய மார்க்கெட்டிற்காக எலெக்ட்ரானிக் சன்ரூஃப் பொருத்தப்பட்ட புதிய ஆப்ஷன் கொண்ட காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 9,35,800 என்ற ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த மாதத்தின் துவக்கத்தில் எஸ்(ஓ) பிளஸ் வேரியண்டில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் பொருத்தப்பட்ட கார் ரூபாய் 9,99,900 என்ற விலையில் அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலர் சன்ரூஃப் பொருத்தப்பட்ட காரை அதிகம் விரும்புவதால், இப்படியாக ஏற்கனவே விற்பனையாகி வரும் வென்யூ காரின் வேரியண்டில் சன்ரூஃப் ஆப்ஷனையும் பொருத்தி அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே எக்ஸிக்யூடிவ் டர்போ எம்டி என்ற வேரியண்டில் இந்த ஆண்டு துவக்கத்தில் சன்ரூஃப் பொருத்தப்பட்ட ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது.
தற்போது புதிதாக வென்யூ எஸ் பிளஸ் வேரியண்டிலும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் பொருத்தப்பட்ட ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வேரியண்டில் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் கொண்ட கார் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 83 பிஎஸ் பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் ஏற்கனவே சொன்னது படி மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வருகிறது. இந்த வேரியண்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் கலர் டிஎஃப்டி ஸ்க்ரீன் டிஸ்ப்ளேயாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 8 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியுடன் விற்பனையாகிறது.
மேலும் இந்த காரில் பின்பக்க சீட்டுக்கான தனி ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக ரூஃப் ரெயில்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இந்த காரின் விலையை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் வென்யூ எஸ் (ஓ) பிளஸ் என்ற எலெக்ட்ரிக் சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட் காரின் விலையை விட ரூபாய் 64,000 குறைவாக விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள், டயர் பிரஷர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹூண்டாய் வென்யூ கார் நிறுவனத்தின் சிறப்பான விற்பனைக்கு மிக முக்கியமான காராக இருக்கிறது. இந்த கார் அதிக எண்ணிக்கையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் வென்யூ கார் தற்போது விற்பனைக்காக தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த அப்டேட்டில் காரின் உட்பக்கமும் வெளிப்பக்கமும் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இதன் மீதான எதிர்பார்ப்பு மாறியுள்ளது.
இன்று இந்திய மக்கள் மத்தியில் சன்ரூஃப் ஆப்ஷன் மிக முக்கியமான ஆப்ஷனாக தேவைப்படுவதால் மக்கள் மத்தியில் இந்த ஆப்ஷன் கொண்ட கார்கள் மீதான மோகம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இப்படியாக தங்கள் வேரியண்ட்களில் ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் சன்ரூஃப் பொருத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாடுகளில் சன்ரூஃப் வாகனங்களுக்கான தேவை மிக குறைவாக தான் இருக்கிறது. இதனால் உங்களுக்கு கட்டாயம் சென்று தேவை என்றால் மட்டுமே சன்ரூஃப் பொருத்தப்பட்ட வாகனங்களை தேர்வு செய்யவும். ஹூண்டாய் நிறுவனத்தின் பொருத்தப்பட்டது பல்வேறு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









