தீபாவளிக்கு எல்லாரும் இந்த காரை வாங்கி குவிக்க போறாங்க! இந்த ரேட்டுக்கு இவ்ளோ வசதிகளை வாரி வழங்கறாங்களா!
இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்கள் ஃபுல்-சைஸ் எஸ்யூவி மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களை போல் அல்லாமல், ஓரளவிற்கு குறைவான விலையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கிடைப்பது, இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் இந்த ரக கார்களின் அளவு பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருப்பதால், ஓட்டுவதற்கும் எளிமையாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்திய சந்தையை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இருப்பது ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.

இதன்படி ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10,259 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12,204 ஆக இருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனம் 1,945 வெனியூ கார்களை குறைவாக விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திந்தாலும் கூட, நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் வெனியூ கார் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,085 ஹூண்டாய் வெனியூ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன்பின் வந்த செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 10,259 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 1,174 ஹூண்டாய் வெனியூ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான ஹூண்டாய் வெனியூ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் வரும் நவம்பர் மாதம் வெளியாகும்.
அப்போது ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை மேலும் உயர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் தற்போது தீபாவளி (Diwali) பண்டிகை காலம் ஆகும். எனவே அதிகம் பேர் ஹூண்டாய் வெனியூ காரை வாங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.
அவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். வசதிகளை (Features) பொறுத்தவரையில், அடாஸ், 6 ஏர்பேக்குகள், சன்ரூஃப், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 7.94 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.53 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஸ்டாண்டர்டு வெனியூ தவிர, இதன் ஸ்போர்ட்டியர் வெர்ஷனான வெனியூ என் லைன் (N Line) மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப விலை 12.08 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.90 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய சப்-4 மீட்டர் கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் வெனியூ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








