பின் பக்கத்துல ஸ்பாய்ளர் என்ன, புதிய கலர் ஆப்ஷன் என்ன.. ஸ்போர்ட்ஸ் காரைபோல காட்சியளிக்கும் ஹூண்டாய் கார்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் புகழ்பெற்ற வெர்னா (Verna) கார் மாடலை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு கவர்ச்சிகரமான மற்றும் முக்கிய அம்சங்களை இந்த கார் மாடலில் ஹூண்டாய் சேர்த்திருக்கின்றது. புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த வேலையை வெர்னாவில் ஹூண்டாய் பார்த்திருக்கின்றது. மிக முக்கியமாக இந்த காரின் பின் பக்கத்தில் ஸ்பாய்ளர் (Spoiler) சேர்க்கப்பட்டு இருப்பது அக்காருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்து இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, புதிய அட்டகாசமான வண்ண தேர்வையும் இந்த கார் மாடலில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது சேர்த்துள்ளது.
வரவேற்கதக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது. வெர்னா ஓர் மிட்-சைஸ் செடான் ரக கார் (Mid-Size Sedan) மாடல் ஆகும். அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை குவித்து அசத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய காருக்கே தற்போது சிறப்பு சேர்த்திருக்கின்றது ஹூண்டாய். புதுப்பிக்கப்பட்ட வெர்னா இந்தியாவில் ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இதன் அதிகபட்ச விலை ரூ. 17.47 லட்சமாக உள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
புதிய அம்சங்கள் சேர்ப்பால் இந்த கார் மாடலின் சில வேரியண்டுகளின் விலை மட்டுமே உயர்ந்துள்ளது. அந்தவகையில், ஆரம்ப நிலை வேரியண்டைத் தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளும் ரூ. 4 ஆயிரம் விலை உயர்வை கண்டிருக்கின்றன. ஹூண்டாய் வெர்னா மொத்தமாக ஆறு விமான வேரியண்டுகளில், இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இஎக்ஸ் (EX), எஸ் (S), எஸ்எக்ஸ் (SX), எஸ்எக்ஸ் டிடி (SX DT), எஸ்எக்ஸ் (ஓ) (SX O) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) டிடி (SX (O) DT), ஆகிய வேரியண்டுகளிலேயே புதிய வெர்னா விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகிய ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன.
இத்துடன், 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மோட்டார்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, இந்த காரில் சிறப்பம்சங்களையும் மிக தாராளமாக ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில் 10.25 தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர் இணைப்பு தேவைப்படா ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேட் மற்றும் ஹீட்டாகும் திறன் கொண்ட இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.
மிக முக்கியமாக 64 வண்ணங்களில் ஒளிரும் திறன் கொண்ட ஆம்பியன்ட் லைட், எட்டு ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் இந்த வாகனத்தில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. புதிய நிற தேர்வாக அமேசான் கிரே எனும் வண்ணமும் இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர, முன்னதாக வழங்கப்பட்ட நிற தேர்வுகளும் இந்த காரில் அப்படியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரில் புதிதாக ஸ்பாய்ளர் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருப்பது, அதற்கு, ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இது வாகனத்தின் அதிக திறன் வெளிப்பாட்டிற்கு உதவும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பின் வீல் மிக சிறந்த பிடிமானத்தைப் பெற இந்த ஸ்பாய்ளர் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. புதுப்பித்தல்களுடன் சேர்த்து இந்த அம்சத்தை வழங்கி இருப்பதனால் புதிய வெர்னா செடான் காருக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








