இந்தியர்களின் ஃபேவரிட் அம்பாசடர் காரா இது? விலை உயர்ந்த பிக்-அப் டிரக்குக்கே சவால் விடுமளவிற்கு மாத்திட்டாங்க!

ஒரு காலத்தில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador) கார் வகித்து வந்த இடத்தைதான் இன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் இன்னோவா (Innova) போன்ற கார்கள் வகித்து வருகின்றன. அதாவது, அரசியல்வாதிகள் பலரின் பிரியமான மற்றும் அதிகாரப்பூர்வ வாகனமாக அம்பாசடர் காரே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இந்த காரின் விற்பனை நிறுத்தத்தினால் அதன் இடத்தை வேறு சில கார் மாடல்கள் வகித்து வருகின்றன. மேலும், இப்போது பெரிய அளவில் அம்பாசிடர் கார் பயன்பாட்டில் இல்லாத நிலையே உருவெடுத்திருக்கின்றது.

இருப்பினும், ஒரு சில அம்பாசடர் இப்போதும் இந்திய சாலைகளில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த காரை அதிகம் நேசிக்கும் சிலர் அதனை புதிதுபோல் மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையிலேயே ஓர் நபர் அம்பாசிடர் காரை பிக்-அப் டிரக்கைப் போல மாற்றி பயன்படுத்தி வருகின்றார்.

Ambassador converted into pickup truck

பஞ்சாப் மாநிலத்திலேயே இந்த அம்பாசிடர் கார் மாடிஃபிகேஷன் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. பிக்-அப் டிரக் (pickup truck)-காக அம்பாசிடரை மாற்றுவதற்காக அக்காரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார். குறிப்பாக, மேற்கூரையின் ஒரு பாதி முழுமையாக அகற்றப்பட்டு இருக்கின்றது. இதனால் பின்னிருக்கையின் மேல் பகுதியில் கூரை இல்லாத திறந்தவெளியாக மாறி இருக்கின்றது.

அதுதவிர, இருக்கையும் அகற்றப்பட்டு இருக்கின்றது. இதனால்தான் அம்பாசிடர் ஓர் பிக்-அப் டிரக்காக தற்போது மாறி இருக்கின்றது. இதுதவிர, இன்னும் சில மாற்றங்கள் அம்பாசிடரில் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த காரின் கவர்ச்சியை கூட்டுகின்ற வகையிலான மாற்றங்களே செய்யப்பட்டு உள்ளன. கிரில் மாற்றப்பட்டு உள்ளது.

முகப்பு மின் விளக்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. மேலும், காரின் நிறமும் மாற்றப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்களே அம்பாசிடரை மேலும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட வாகனமாக மாற்றியுள்ளது. இந்த காரில் தற்போது சந்தைக்குப்பிறகான புரொஜெக்டர் வகை எல்இடி ஹெட்லைட்டே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. நிறுவனத்தால் வழங்கப்பட்ட கிரில் குரோம் பூச்சால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், இப்போது வழங்கப்பட்டு இருக்கும் கிரில் உலோகத்தால் தயார் செய்யப்பட்டதைப் போல் இருக்கின்றது. மேலும், இதன் மையப்பகுதியில் அம்பாசிடர் எனும் பிராண்ட் இடம் பெற்றுள்ளது. இதேபோல், இன்னும் பல மாற்றங்களை இந்த காரில் செய்திருக்கின்றனர். இருப்பினும், இதன் ரெட்ரோ லுக் அப்படியே இருக்கின்றது.

இந்த குறிப்பிட்ட அம்பாசிடர் கார் மாடல் 2010 மாடல் என கூறப்படுகின்றது. இதனை இரண்டு பைக்குகளைக் கொண்டு செல்ல ஏதுவாகவே மாற்றி இருக்கின்றார். இதற்கேற்பவே காரின் பின் பக்க உடல் அமைப்பை அவர் மாற்றி இருக்கின்றார். பின்புறத்தில் மர துண்டுகளை அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

குறிப்பாக, டிரைவர் பகுதியை தனிமைக் கொண்டதாக மாற்ற அவர் மர பலகைகளை பயன்படுத்தி இருக்கின்றார். எனவே அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறி இருக்கின்றது. இந்த காருக்கு கவர்ச்சியைச் சேர்க்கும் விதமாக ஆர்மி க்ரீன் நிறத்தைப் பயன்படுத்தி இருக்கின்றார். தொடர்ந்து, ஸ்டீயரிங் வீல், ஏர் கண்டிஷனிங் மற்றும் புதிய இருக்கைகள் ஆகியவற்றையும் அவர் சேர்த்திருக்கின்றார்.

இதைத்தொடர்ந்து, சக்கரங்களில் சிறிய கிண்ணங்களைப் போன்ற குரோம் அலங்கரிக்கப்பட்ட மூடிகளை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இது காரின் பின்பக்கத்திற்கு மிகப் பெரிய அழகை சேர்க்கும் வகையில் உள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக தனித்துவமான தோற்றத்தைக் கொண்ட காராக இந்த அம்பாசடர் மாறி பலரின் மனதைக் கவரக் கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அம்பாசிடர் பார்க்க மிகவும் அழகாகவும், மனம் கவரக் கூடியதாக இருக்கலாம். ஆனால், இது போலீஸாரின் கண்களில் சிக்கும் எனில் உடனடியாக அது பறிமுதல் செய்யப்பட நேரிடலாம். இந்தியாவில் இதுபோன்று உருவத்தை மாற்றும் அளவிற்கு செய்யப்படும் மாற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையில் இதற்கு முன்னதாக பல வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 21, 2024, 22:00 [IST]
English summary
Iconic hindustan ambassador converted into pickup truck
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+