கொடி பறக்குதா... ஜப்பானை பொடணியில் தட்டி மூலையில் உக்கார வைத்த இந்தியா... இனி பேச்சுலாம் இல்ல வீச்சுதான்!

உலகில் கடந்த 2023ம் ஆண்டு அதிக கார்களை விற்பனை செய்த நாடுகளின் பட்டியலில் ஜப்பானை மீண்டும் ஒரு முறை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளது இந்தியா. கடந்த 2023ம் ஆண்டு உலகில் அதிக கார்களை விற்பனை செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் கடந்த 2022ம் ஆண்டிலும் இந்தியா 3வது இடத்தில்தான் இருந்தது. 2023ம் ஆண்டில் இந்த இடத்தை விட்டு கொடுக்காமல், இந்தியா தக்க வைத்து கொண்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இந்தியா 4.11 மில்லியன் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் ஜப்பானோ 4 மில்லியனுக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில்தான் கார்களை விற்பனை செய்திருக்கிறது.

Cars

எனினும் இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. இந்தியாவிற்கும், ஜப்பானிற்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது என்பதுதான் அது. கடந்த 2022ம் ஆண்டில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இடைவெளி 3.44 லட்சம் கார்களாக இருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டில் வெறும் 1.15 லட்சமாக குறைந்துள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே வரும் காலங்களில் இந்தியா தனது இடத்தை தக்க வைத்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Tata Nexon EV

இங்கே நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கார் விற்பனையில் இந்தியா வெறும் 8 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் ஜப்பானோ கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

எனவே கடந்த 2023ம் ஆண்டில் இந்தியா போராடிதான் 3வது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது என்று சொல்லலாம். இந்தியாவில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா (Tata), மஹிந்திரா (Mahindra), கியா (Kia) மற்றும் டொயோட்டா (Toyota) போன்ற நிறுவனங்கள் அதிக அளவிலான கார்களை விற்பனை செய்து வருகின்றன.

இதுதவிர ஹோண்டா (Honda), ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), ஸ்கோடா (Skoda) மற்றும் எம்ஜி (MG) போன்ற நிறுவனங்களின் கார் விற்பனையும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, சொகுசு கார் நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி கொண்டுள்ளன.

சொகுசு கார் நிறுவனங்களை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi), ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) மற்றும் வால்வோ (Volvo) போன்றவை குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. திரைப்பட நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் போன்றவர்களின் தேர்வாக இந்த சொகுசு கார் நிறுவனங்கள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் காலங்களில் கார் விற்பனையில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டுமென்றால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் ஏற்றுமதி முக்கியமான காரணியாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். மேட்-இன்-இந்தியா கார்களின் ஏற்றுமதி, எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்பதே எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, January 19, 2024, 14:31 [IST]
English summary
India beats japan in global car sales all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+