புதுசா கார் வாங்க கஸ்டமர்ஸ் வர மாட்றாங்க!! இந்தியாவில் நிலைமை என்ன இப்படி மாறிடுச்சு!

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations - FADA), இந்தியாவில் எத்தனை வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்கிற விபரங்களை சேகரித்து வெளியிடும் ஓர் கூட்டமைப்பாகும். ஒவ்வொரு மாதமும் இந்திய மார்க்கெட்டில் எத்தனை கார்கள் மற்றும் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன என்கிற விபரங்களை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள கடந்த செப்டம்பர் மாத தரவுகளின்படி பார்க்கும்போது, இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 19% குறைந்துள்ளது.

பயணிகள் வாகனங்கள் என்பன மக்கள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் கார் மற்றும் சிறிய ரக வேன்கள் ஆகும். பேருந்து, வேன் போன்ற கமர்ஷியல் வாகனங்கள் இதில் அடங்காது. சிறிய ரக வேன்களை பொறுத்தவரையில், மாருதி சுஸுகியில் இருந்து ஈக்கோ என்கிற வேன் விற்பனை செய்யப்படுகிறது. மற்றப்படி, வேறெந்த நிறுவனத்தில் இருந்தும் அவ்வாறான வேன்கள் அதிகமாக விற்பனையாகுவதில்லை.

india s passenger vehicles sales decline

ஆகையால், பயணிகள் வாகனங்கள் என்பன கார்கள் ஆகும். சில்லறையாக விற்பனை செய்யப்படும் கார்களின் எண்ணிக்கையை மட்டுமே FADA வெளியிடுகிறது. வேறு கார்ப்பிரேட் நிறுவனங்கள் அல்லது அரசாங்கத்தால் மொத்தமாக ஆர்டர் கொடுக்கப்பட்டு வாங்கப்படும் கார்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளாது. இந்த வகையில், நடந்து முடிந்த கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 75,681 பயணிகள் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் மாதத்தில் 3 லட்சத்து 39,543 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பார்த்தால், கடந்த மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 18.81% குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பரை காட்டிலும் இந்த ஆண்டு செப்டம்பரில் 63,862 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

india s passenger vehicles sales decline

வழக்கம்போல், கடந்த செப்டம்பர் மாதத்திலும் இந்தியாவில் பயணிகள் வாகனங்கள் விற்பனையில் மாருதி சுஸுகி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13,560 ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த எண்ணிக்கையில் ஈக்கோ வேன்களின் எண்ணிக்கையும் அடங்குகிறது. மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் உள்ளது.

ஹூண்டாயில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 37,973 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2023 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்திருந்தது. இதற்கடுத்து 3வது இடத்தில் மஹிந்திரா 34,607 பயணிகள் வாகனங்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 செப்டம்பரிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பயணிகள் வாகனங்களையே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

india s passenger vehicles sales decline

இதற்கடுத்து 4வது இடத்தில் டாடா மோட்டார்ஸ் 31,947 பயணிகள் வாகனங்கள் விற்பனை உடன் உள்ளது. வழக்கமாக 3வது இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை டாடாவை மஹிந்திரா முந்தியுள்ளது. டாடாவுக்கு அடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் டொயோட்டா மற்றும் கியா உள்ளன. இவற்றின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 19,660 மற்றும் 15,521 ஆகும்.

இந்த வரிசையில் 7வது இடத்தை பெரிய இடைவெளி உடன் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் க்ரூப் பிடித்துள்ளது. இந்த க்ரூப்பில் இருந்து 5,192 கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8வது இடத்தில் ஹோண்டா நிறுவனம் 3,893 பயணிகள் வாகனங்கள் விற்பனை உடன் உள்ளது. இந்த லிஸ்ட்டில் 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே எம்ஜி மோட்டார் (2,966) மற்றும் ரெனால்ட் (2,706) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: FADA வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, இந்தியாவில் பயணிகள் வாகனங்களை வாங்குவோரில் 41% பேரது விருப்பம் மாருதி சுஸுகியாக உள்ளது. அதாவது, 3இல் ஒருவர் நிச்சயமாக மாருதி சுஸுகியை தேர்வு செய்கிறார். இருப்பினும், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை குறைந்திருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, October 19, 2024, 8:00 [IST]
English summary
India passenger vehicles sales decline in 2024 september check all details here
மேலும்... #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X