உபி-தான் முதல் இடத்துல இருக்கு.. ரெண்டாவது, மூனாவது இடத்தகூட தமிழ்நாடு பிடிக்கல.. ஆந்திரா லிஸ்டுலையே இல்ல!!
வேற ஒன்னும் இல்லைங்க மின்சார வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் மாநிலங்களின் வரிசையிலேயே உத்தரப்பிரதேசம் மாநிலம் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை மஹராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை கர்நாடகாவும் பிடித்திருக்கின்றன. இவர்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்திலேயே தமிழ்நாடு உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், சமீபத்தில் மாநிலம் வாரியாக விற்பனையான வாகனங்கள் பற்றிய புள்ளி விபரங்களை வெளியிட்டது. 1 ஏப்ரல் 2019 தொடங்கி 31 மார்ச் 2024 வரையில் விற்பனையான புள்ளி விபரங்களையே அமைச்சகம் வெளியிட்டது.
இந்த புள்ளி விபரங்கள் வாயிலாகவே தமிழகம் மின்சார வாகன விற்பனையில் கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் உபி ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் பின்தங்கியிருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. மின்சார வாகன விற்பனையில் மட்டும் அல்ல புதிய வாகன விற்பனையிலேயே அது பின்தங்கிதான் இருக்கின்றது.

கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தமாக 84 லட்சத்து 76 ஆயிரத்து 042 யூனிட்டுகள் புதிய வாகனங்களே விற்பனையாகி இருக்கின்றன. இதில் 2.7 சதவீத பங்களிப்பையே எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்டிருக்கின்றன. அதாவது, இந்த ஒட்டுமொத்த விற்பனையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 850 யூனிட்டுகளே மின்சார வாகனங்கள் ஆகும் ஆகும்.
ஆனால், அமைச்சகம் குறிப்பிட்டு இருக்கும் அதே அந்த ஐந்தாண்டுகளில் உபி-யில் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 53 லட்சத்து 17 ஆயிரத்து 699 யூனிட் புதிய வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் மின்சார வாகனங்கள் மட்டும் 6 லட்சத்து 65 ஆயிரத்து 247 யூனிட்டுகள் ஆகும்.

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. இதனால்தான் மொத்தமாகவே வாகன விற்பனையில் இந்தியாவின் முதல் மாநிலமாக உபி மாறி இருக்கின்றது. மின்சார வாகனம் மற்றும் புதிய வாகன விற்பனை என இரண்டிலும் அது முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. சதவீதத்தின்படி பார்த்தால் ஒட்டுமொத்த புதிய வாகன விற்பனையில் 4.34 சதவீத பங்களிப்பை மின்சார வாகனங்கள் பிடித்திருக்கின்றன.
இதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத்திலும் கடந்த ஐந்தாண்டுகளில் கோடிக் கணக்கிலேயே புதிய வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. 1,10,55,082 யூனிட்டுகள் புதிய வாகனங்களே விற்பனையாகி இருக்கின்றன. இதில் 3.97 சதவீதம் பங்களிப்பை மின்சார வாகனங்கள் கொண்டிருக்கின்றன. அதாவது, 43,39,358 யூனிட்டுகள் வரையில் மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
வாகன விற்பனையில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் கர்நாடகாவில் 73,15,250 யூனிட்டுகள் புதிய வாகனங்களே விற்பனையாகி இருக்கின்றன. இதில் 3,50,810 யூனிட்டுகள் பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாகவே இந்திய மற்ற மாநிலங்கள் இருக்கின்றன. அதேவேளையில், முதல் பத்து மாநிலங்களின் பட்டியில் ஆந்திரா மற்றும் தெலங்கானா இந்த இரண்டு மாநிலங்களும் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை.
சொல்லப்போனால், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான், ஆறாவது இடத்தில் பீஹார் மற்றும் ஏழாவது இடத்தில் டெல்லி ஆகியவை இருக்கின்றன. இதேபோல், எட்டாவது இடத்தை குஜராத்தும், எட்டாவது இடத்தை மத்தியபிரதேசமும் மற்றும் பத்தாவது இடத்தை கேரளாவும் பிடித்திருக்கின்றது. மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் நாடு முழுக்க முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும், ஆமை வேகத்திலேயே எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உள்ளது என்பது இந்த புள்ளி விபரங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. ஆகையால், அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் இப்போது 2 சதவீதம் மற்றும் 3 சதவீதம் என குறைவான பங்களிப்பைக் கொண்டிருக்கும் இ-வாகனங்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் 10 சதவீதம், 20 சதவீதம் என அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு சற்றே அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாகவே தற்போது அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரங்கள் அமைந்திருக்கின்றன. அமைச்சகம் குறிப்பிட்டிருக்கும் ஐந்தாண்டுகளில் 36.39 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. விரைவிலேயே பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இவற்றின் விற்பனை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








