இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் எது தெரியுமா? இதோ டாப்5 பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களின் லிஸ்ட்!

நாடு முழுவதும் சென்ற பிப்ரவரி மாதத்தில் 3,72,178 யூனிட்டுகள் பயணிகள் வாகனங்கள் வாகனங்கள் விற்பனையாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. இது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக விற்பனையாகும். இதே மாதம் 2023 ஆம் ஆண்டில் 3,34,245 மட்டுமே பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனுடன் ஒப்பிடுகையில் 2024 பிப்ரவரியில் சுமார் 11.3 சதவீதம் விற்பனை வளர்ச்சியையே இந்திய பயணிகள் வாகன பிரிவுப் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அதிக விற்பனையில் எந்த கார் மாடல் மிக மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றது என்கிற கேள்வி நம்மில் பலருக்கு எழும்பி இருக்கக் கூடும்.

India s best selling top 5 car models

இதற்கான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, 2024 பிப்ரவரியில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிய டாப் 5 கார் மாடல்கள் எவை என்கிற விபரங்களையே விலை மற்றும் எத்தனை யூனிட்டுகள் பிப்ரவரி மாதத்தில் விற்பனையாகின என்கிற தகவலுடன் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti WagonR): எப்போதும்போல் இப்போதும் இந்த காரே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களின் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2024 பிப்ரவரியில் 19,412 யூனிட்டுகள் விற்பனையைப் பெற்று, வேகன்ஆர் முதல் இடத்தை தக்க வைத்திருக்கின்றது. 2023 பிப்ரவரியைக் காட்டிலும் இது 15 சதவீதம் அதிகம் விற்பனையாகும். 16,889 யூனிட்டுகள் மட்டுமே அப்போது விற்பனையாகி இருந்தது.

இந்தியர்கள் இந்த காரை டால்-பாய் (உயரமான பையன்) என செல்லமாக அழைக்கின்றனர். இந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ரூ. 5.54 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த ஹேட்ச்பேக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டாடா பஞ்ச் (Tata Punch): டாடா மோட்டார்ஸின் விலை குறைவான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதுவே தற்போது இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். அதேவேளையில் பாதுகாப்பை வழங்குவதில் மிக உயர்ந்த காராகவும் இது காட்சியளிக்கின்றது.

பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவையே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. 2024 பிப்ரவரி மாதத்தில் மட்டும் 18,438 யூனிட்டுகள் பஞ்ச் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

பஞ்ச் கார் தற்போது மின்சார அவதாரத்திலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பஞ்ச் இவி ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுதவிர, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 6.12 லட்சம் என்கிற தொடக்க விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி பலினோ (Maruti Baleno): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களின் பட்டியலில் இது 3வது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் ரூ. 6.66 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

சென்ற ஆண்டு பிப்ரவரியைக் காட்டிலும் நடப்பாண்டு பிப்ரவரியில் இந்த கார் மாடல் விற்பனைச் சரிவைச் சந்தித்து இருக்கின்றது. இருப்பினும், அது மூன்றாவது இடத்தை தக்க வைத்திருக்கின்றது. 2024 பிப்ரவரியில் 17,517 யூனிட்டுகள் பலினோ கார்களே விற்பனையாகி இருக்கின்றன. அதுவே சென்ற ஆண்டு பிப்ரவரியில் பார்த்தோமேயானால் இதே கார் மாடல் 18,592 யூனிட்டுகள் விற்பனையாகின.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Dzire): இந்த பட்டியலில் நான்காவது இடத்தையும் மாருதி சுஸுகியின் தயாரிப்பே பிடித்திருக்கின்றது. 15,837 யூனிட்டுகள் விற்பனையைப் பெற்று இந்த இடத்தை அது பிடித்திருக்கின்றது. இது சென்ற ஆண்டு பிப்ரவரியைக் காட்டிலும் 6 சதவீதம் அதிக விற்பனை ஆகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 6.56 லட்சம் தொடங்கி ரூ. 9.39 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Brezza): நமது இந்த பட்டியலின் கடைசி இடத்தையும் மாருதி சுஸுகியின் தயாரிப்பே ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது. 15,765 யூனிட்டுகள் வரை இந்த பிரெஸ்ஸா நாட்டில் விற்பனையாகி இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 8.34 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் டாப் 5 பெஸ்ட் செல்லிங் கார் மாடல்கள் இவைதான். இதில் மிக அதிக பாதுகாப்பு வசதிகளைத் தாங்கிய கார் மாடலாக பஞ்ச் காட்சியளிக்கின்றது. மேலும், அது ஓர் எஸ்யூவி ரக கார் என்பதாலும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2024, 11:38 [IST]
English summary
India s best selling top 5 car models wagonr sits top in list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+