இந்திய ராணுவம் வாங்கிய சூப்பர் பஸ், டீசல், பெட்ரோல், பேட்டரி எதுவுமே கிடையாது! வெறும் காத்துலயே ஓடும்!
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக மாசுவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளன. அதன்படி இந்திய ராணுவமும் இந்த முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. இதையடுத்து இந்திய ராணுவத்திற்காக மாசு உமிழ்வு இல்லாத பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக யூனிட் வைத்து இந்திய ராணுவத்திற்கு என வாகனங்களை தயாரித்து வருகின்றன. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் அதில் என்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற அனைத்து தகவலையும் இந்திய ராணுவம் வழங்கி அதற்கு ஏற்ற வாகனங்களை தான் வாகனத்தை ஏற்ப நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் மாசு உணர்வு குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மாசு இல்லாத பசுமை வாகனங்களை பயன்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் இந்திய ராணுவமும் பங்களிக்கும் வகையில் தற்போது இந்திய ராணுவம் மாசு உமிழ்வு இல்லாத வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளது.
இந்திய ராணுவம் தனது பயன்பாட்டுக்காக தற்போது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பஸ்களை வாங்கி உள்ளது. இந்தியன்ஆயில் நிறுவனம் தான் இந்த ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பஸ்களை இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இந்திய ராணுவ தலைமை அதிகாரி மனோஜ் பாண்டே மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய ராணுவத்திற்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்த இந்த ஹைட்ரஜன் பஸ்ஸில் மொத்தம் 37 பயணிகள் பயணம் செய்ய முடியும். இதில் 30 கிலோ வரை ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த முடியும். இந்த 30 கிலோ ஹைட்ரஜன் மூலம் இந்த பஸ் 2050 முதல் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்திய ராணுவம் என்டிபிசி நிறுவனத்துடன் ஹைட்ரஜன் பஸ்களுக்கான ஒப்பந்தத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்து விட்டது. அதன்படி இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள எல்லையில் பயன்படுத்துவதற்காக இந்த பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் 200 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் குறித்த முழுமையான தொழில்நுட்ப தகவல்கள் வெளியாகவில்லை. இது இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால் இந்த பஸ்களின் ஒவ்வொரு சின்ன தகவல்களும் எதிரிகளுக்கு இந்த பஸ் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால் இதன் தகவல்கள் எல்லாம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
மத்திய அரசு மாசு உமிழ்வு இல்லாத வாகனங்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜன் பவரில் இயங்கும் காரை பயன்படுத்தி வந்தது. சமூக வலைதளங்களில் வெளியாகியது தற்போது டாடா மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பஸ்களை தயாரித்து வருகின்றன.
எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை விட ஹைட்ரஜன் வாகனங்களுக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹைட்ரஜன் தயாரிப்பு குறைவாக இருப்பதால் மக்களுக்கு இதன் மீது பெரிய மவுசு இல்லை. இப்படியான வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டாலும் அதை பெரிய அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது கடினம் தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலங்களில் மிகப்பெரிய அளவில் ஹைட்ரஜன் உற்பத்தி என்பது நடைபெற்றால், ஹைட்ரஜன் வாகனங்கள் உலகை புரட்டி போடும் அளவிற்கு திறன் கொண்டதாக இருக்கும். ஹைட்ரஜன் வாகனங்கள் மாசு உமிழாமல் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான கேடும் விளைவிக்காமல் இயங்கும் வாகனமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









