இருட்டுகடை அல்வா மாதிரி பிப்ரவரி மாதத்தில் வாகனங்களை லைன் கட்டி வாங்கிய மக்கள்! எவ்வளவு சேல்ஸ் தெரியுமா?
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனையான ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனை 20 லட்சம் என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இது கடந்தாண்டு விற்பனை ஒப்பிடும்போது 13 சதவீதம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை நாம் காண்போம் வாருங்கள்.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக ஆட்டோமொபைல் செக்டார் என்பது மிகச் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. மக்கள் பலர் வாகனங்களை வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டனர். பல புதிய தலைமுறை வாகனங்களை வாங்கி வருவதால் இந்தியா முழுவதும் ஆட்டோமொபைல் துறை என்பது வளர்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதமும் சிறப்பான வளர்ச்சியை ஆட்டோமொபைல் செக்டார் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 20,29,541 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,94,866 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 13.07% வளர்ச்சியாகும். ஒவ்வொரு செக்டாரிலும் வளர்ச்சி என்பது ஏற்பட்டுள்ளது. ஹெவி கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இனி செக்டார் வாரியான விற்பனை விபரங்களை காணலாம்.
டூவீலரை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் 14,39,523 டூவீலர்கள் விற்பனையாக இருந்தன. இதில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,71,703 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இது 13.25% விற்பனை வளர்ச்சியாகும். மூன்று சக்கர வாகனத்தை பொறுத்தவரை 94,918 வாகனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 76,619 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. இது 23.88% வளர்ச்சியாகும்.

பயணிகள் வாகனத்தை பொருத்தவரை 3,30,107 வாகனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2,93,803 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இது 12.36% வளர்ச்சியாகும். கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரை 88,367 வாகனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகி இருந்தன. இதுவே 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 84,337 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. இது 4.78 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
இலகுரக கமர்சியல் வாகனங்களை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் 48,594 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 47,551 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இது 2.19% விற்பனை வளர்ச்சியாகும். மத்தி ரக கமர்சியல் வாகனங்களை பொருத்தவரை, கடந்த பிப்ரவரி மாதம் 6,457 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 5,001 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகிகிறது. தற்போது 29.05 சதவீதம் விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளது.

அடுத்ததாக ஹெவி கமர்ஷியல் வாகனத்தை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 28,271 வாகனங்கள் விற்பனையாக இருந்தன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28,359 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. தற்போது 0.31% விற்பனை வீழ்ச்சி என்பது ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செக்டாரிலேயே இந்த ஒரு செக்டாரில் மட்டும் தான் விற்பனை வீழ்ச்சி என்பது ஏற்பட்டுள்ளது.
இது போக எலெக்ட்ரிக் ரிக்ஷாவை பொருத்தவரை 36,579 என்ற எண்ணிக்கையிலும், கார்ட்டுடன் கூடிய எலக்ட்ரிக் ரிக்ஷாவை பொறுத்தவரை 4435 என்ற எண்ணிக்கையிலும், சரக்கை ஏற்றி செல்லும் மூன்று சக்கர வாகனத்தை பொறுத்தவரை 10,768 என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகியுள்ளன. இது சிறப்பான விற்பனையாக உள்ளது.
| CATEGORY | FEB’24 | FEB’23 | YoY % |
| 2W | 14,39,523 | 12,71,073 | 13.25% |
| 3W | 94,918 | 76,619 | 23.88% |
| E-RICKSHAW(P) | 36,579 | 30,736 | 19.01% |
| E-RICKSHAW WITH CART (G) | 4,435 | 2,446 | 81.32% |
| THREE-WHEELER (GOODS) | 10,768 | 8,305 | 29.66% |
| THREE-WHEELER (PASSENGER) | 43,065 | 35,076 | 22.78% |
| THREE-WHEELER (PERSONAL) | 71 | 56 | 26.79% |
| PV | 3,30,107 | 2,93,803 | 12.36% |
| TRAC | 76,626 | 69,034 | 11.00% |
| CV | 88,367 | 84,337 | 4.78% |
| LCV | 48,594 | 47,551 | 2.19% |
| MCV | 6,454 | 5,001 | 29.05% |
| HCV | 28,271 | 28,359 | -0.31% |
| Others | 5,048 | 3,426 | 47.34% |
| Total | 20,29,541 | 17,94,866 | 13.07% |
பயணிகளை ஏற்றி செல்லும் மூன்று சக்கர வாகனங்களில் விற்பனை பொறுத்தவரை 4365 என்ற எண்ணிக்கையிலும், தனி நபர்களுக்கான மூன்று சக்கர வாகனத்தை பொறுத்த வரை 71 என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகியுள்ளன. இந்த அனைத்தும் சேர்ந்துதான் மூன்று சக்கர வாகன விற்பனை என கணக்கிடப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பான எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. வாகன விற்பனை சந்தையில் நல்ல வருமானம் கடந்த பிப்ரவரி மாதம் கிடைத்துள்ளது. உற்பத்தியாளர்களும், டீலர்களும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த டிரெண்ட் அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. தற்போது பல இளைஞர்கள் புதிதாக வாகனம் வாங்க துவங்கி விட்டார்கள். மேலும் பலர் புதிதாக தொழில் துவங்க துவங்கியுள்ளதால், வாகனங்களின் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கமர்சியல் ரக வாகனங்களும் சிறப்பாக விற்பனை ஆகியுள்ளன. அடுத்த சில மாதங்களுக்கு வாகனம் விற்பனை சிறப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









