சரசரன்னு இறங்கப்போகும் கார்களின் விலை! கொஞ்சம் வெயிட் பண்ணா கம்மி ரேட்ல காரை வாங்கலாம்!
இந்திய ஆட்டோமொபைல் துறை கார்கள் விற்பனை வீழ்ச்சியால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது, இதன் விளைவாக டீலர்களிடம் கணிசமான அளவு சரக்குகள் ஸ்டாக்கில் குவிந்துள்ளன. இருப்பினும், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றன, இது கார்களின் விலையை குறைக்க வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாடு முழுவதும் டீலர்கள், குடோன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் சுமார் 7.25 லட்சம் விற்பனையாகாத கார்கள், ரூ.75,000 கோடி மதிப்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் டீலர்களின் கூட்டமைப்பு (FADA) நிதியாளர்களை அணுகி டீலர்களுக்கு அதிகளவில் கடன் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் உடனடியாக தங்கள் உற்பத்தியை மறுசீரமைத்து நுகர்வோர் தேவைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று FADA தலைவர் மனீஷ் ராஜ் சிங்ஹானியா கூறியுள்ளார்.

ஆட்டோமொபைல் டீலர்களின் கூட்டமைப்பு (FADA) கார்கள் விற்பனையில் 3-4% உயர்வை எதிர்பார்த்தது, ஆனால் அதற்கு பதிலாக 10% உற்பத்தி திறன் அதிகரிப்பு ஏற்பட்டது. FADA இன் தலைமை நிர்வாக அதிகாரி சஹர்ஷ் தாமனி, ஸ்டாக் காலம் 30-32 நாட்களில் இருந்து 67-72 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். கொரோனா காலத்திற்குப் பிறகு சராசரி கார் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் விற்பனை அதற்கு ஏற்ப வளரவில்லை.
தற்போது, சுமார் 7.25 லட்சம் விற்பனையாகாத கார்கள் நாடு முழுவதும் சுமார் 15,000 டீலர்கள் மற்றும் அவர்களின் குடோன்களில் உள்ளன. இந்த கார்கள் ஒவ்வொன்றும் சராசரியாக ரூ.10 லட்சம் என்ற விலையில் இருந்தால், மொத்த ஸ்டாக் ரூ.75,000 கோடியாக இதன் மதிப்பு இருக்கும். கூடுதலாக, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தினமும் புதிய கார்களை தயாரித்து அனுப்பி வருகின்றன.

மாரூதி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க ரூ.60,000 முதல் ரூ.2.5 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. டீலர்களும் கமிஷன்களை குறைத்து வருகிறார்கள், ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களின் பற்றாக்குறை உள்ளது. சில மாடல்களைத் தவிர, பெரும்பாலான கார்கள் நீண்ட காத்திருப்பு காலம் இல்லாமல் கிடைக்கின்றன.
அதிக புழக்கத்தில் உள்ள கார்கள் விற்பனை சமீபத்தில் அதிகரித்துள்ளது, குறிப்பாக டெல்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற பெரிய நகரங்களில். ஜூலை மாதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பயணிகள் கார் விற்பனையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது, மாத விற்பனையின் போது விற்பனை வருடாந்திர அடிப்படையில் 2.5% குறைந்து 3,41,000 கார்கள் விற்பனையாகியுள்ளது.

மஹிந்திரா, டொயோட்டா மற்றும் கியா தவிர பெரும்பாலான கார் நிறுவனங்கள் ஜூலை 2024-ல் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. மாரூதி சுசுகியின் விற்பனை 9.65% குறைந்தது, அதே நேரத்தில் ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கடந்த ஆண்டை விட ஜூலை மாதத்தில் 21% குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
விற்பனையாகாத கார்கள் டீலர்களிடம் பெரிய அளவில் சரக்கு ஸ்டாக்கில் உள்ளன, இதனால் உற்பத்தியாளர்கள் விற்பனையாகததாக கருதப்படும் காரை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மந்தநிலை இந்த ஆண்டு லோக் சபா தேர்தலின் போது தொடங்கி கனமழை, கடும் வெப்பம் என பல கால சூழ்நிலைகளையும் தாண்டி தற்போதும் அதிகரித்து வருகிறது.
பினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கைகளின்படி, மாரூதி சுசுகி இந்தியா லிமிடெட் விற்பனை குறைந்ததைத் தொடர்ந்து உற்பத்தியை குறைத்துள்ளது. சரக்குகளை திறம்பட சமநிலைப்படுத்த உற்பத்தியை சரிசெய்வது அவசியமாகும். மற்ற நிறுவனங்களுக்கும் இதற்கான முயற்சியில் இறங்கும் என எதிர்பார்க்கலாம். பயணிகள் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி டீலர்கள் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ள, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை குறைப்பது மட்டுமல்லாமல், அதிக தள்ளுபடிகளை வழங்கவும் முயற்சிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களுக்கான தேவை குறைவதால் இந்திய ஆட்டோமொபைல் துறை பல சவால்களை எதிர்கொள்கிறது. இந்த மந்தநிலை இந்த ஆண்டு லோக் சபா தேர்தலின் போது தொடங்கி தீவிர காலநிலை நிலைமைகளால் மேலும் பாதிக்கப்பட்டது. தற்போது இது நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலைமை உற்பத்தியாளர்கள் தங்கள் யுத்திகளை மறுசீரமைத்து உண்மையான சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தியை சீரமைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









