இந்தியா ஏழை நாடுனு யாருங்க சொன்னது?.. இங்க பாருங்க போன ஜூன் மாசத்துல மட்டும் எத்தன கார்கள் விற்பனையாகிருக்கு!

இந்தியா ஒரு ஏழை நாடுனு யாருங்க சொன்னது. போன ஜூன் மாதம் ஆன கார் விற்பனையை வச்சு பார்த்தா யாருமே இந்தியாவை ஏழை நாடுனு சொல்ல மாட்டாங்க. அந்த அளவிற்கு நாட்டில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 3.40 லட்சம் யூனிட் கார்கள் விற்பனையாகி இருப்பது தெரிய வந்துள்ளது. பழைய கார்கள் கிடையாதுங்க, அனைத்தும் பிராண்டு நியூ கார்கள் ஆகும். இதன் வாயிலாக இந்தியா வளர்ந்த நாடுகளுக்கே சவால் விடும் வகையில் கார் விற்பனையில் வளர்ந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra), டொயோட்டா (Toyota) மற்றும் கியா (Kia) என இவர்கள் அனைவரும் சேர்ந்தே அத்தனை லட்சம் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றனர். இது கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் மிக மிக அதிகம் ஆகும்.

Car sales

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 2023 ஜூன் மாதத்தைக் காட்டிலும் 2024 ஜூன் மாதத்தில் 4 சதவீதம் அதிகம் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. அதாவது, சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் 3.28 யூனிட்டுகள் வாகனங்களே விற்பனையாகின. ஆனால், 2024 ஜூன் மாதத்திலோ 3.40 லட்சம் வரையிலான வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

மாருதி சுஸுகி கார்கள் மட்டும் 2024 ஜூன் மாதத்தில் 1,37,160 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. அதேவேளையில், 2023 ஜூனிலோ அதன் தயாரிப்புகள் வெறும் 1,33,027 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. இதைவிட இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனையாகி இருப்பது 3.1 சதவீதம் அதிகம் விற்பனை ஆகும்.

மாருதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் உள்ளது. 2023 ஜூனில் 50,001 யூனிட்டுகள் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், 2024 ஜூனிலோ அது 50,103 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது 0.2 சதவீதம் அதிகம் விற்பனை ஆகும். டாடா மோட்டார்ஸ் இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

அது ஆண்டு-டூ-ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் வரை விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இருப்பினும், 2024 ஜூன் மாத விற்பனையில் அது மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. 43,524 யூனிட்டுகள் டாடா கார்கள் போன மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன. டாடாவிற்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் உள்ளது.

அது அதிகபட்சமாக 2023 ஜூன் மாதத்தைக் காட்டிலும் 2024 ஜூன் மாதத்தில் 23 சதவீதம் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து உள்ளது. 32,588 யூனிட்டுகள் சென்ற ஆண்டு ஜூனில் விற்பனையாகிய நிலையில், இந்த ஆண்டு ஜூனில் 40,022 யூனிட்டுகளாக அது அதிகரித்துள்ளது. மஹிந்திராவிற்கு அடுத்தபடியாக டொயோட்டாவும், இதற்கு அடுத்தபடியாக கியாவும் உள்ளன.

டொயோட்டா கார்கள் 25,752 யூனிட்டுகளும், கியா நிறுவனத்தின் கார்கள் 21,300 யூனிட்டுகளும் 2024 ஜூனில் விற்பனையாகி உள்ளன. இதில் டொயோட்டா பெற்றிருப்பது 41 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும். அதேபோல் கியா பெற்றிருப்பது 10 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இதுபோன்று பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்தன் விளைவாகவே இந்தியாவில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 3.40 லட்சத்தை ஜூன் மாதத்தில் தொட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் விற்பனை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துக் காணப்படுகின்றது. இந்தியர்கள் மத்தியில் கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதன் விளைவாகவே சந்தை முன்பைவிட இப்போது இன்னும் பலமடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையாலேயே பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவை மையமாகக் கொண்டு களமிறங்கிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 19:00 [IST]
English summary
Indian car sales june analysis here is more details
மேலும்... #car sales #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+