இந்தியர்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஆஸ்திரேலிய ஸ்விஃப்ட் கார் மொத்தமா வேற மாதிரி இருக்கு!!
ஸ்விஃப்ட் (Swift), உலகின் பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் சிறிய அளவிலான ஜப்பானிய கார். கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்பட்ட டாப்-50 கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகின. அதில், இந்தியாவிலும் விற்பனை செய்யப்படும் காராக முன்னிலையில் இருப்பது சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். நம் நாட்டில் கடந்த மே மாதத்தில் புதிய ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எனவும், ஆஸ்திரேலியாவில் வெறும் சுஸுகி ஸ்விஃப்ட் எனவும் விற்பனை செய்யப்படுகிறது. நம் இந்திய ஸ்விஃப்ட்டை விட, ஆஸ்திரேலிய ஸ்விஃப்ட் எந்த அளவிற்கு சிறந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.
நிறங்கள்: ஆஸ்திரேலிய ஸ்விஃப்ட் கார் மிக முக்கியமாக, கவர்ச்சிக்கரமான கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் ஸ்விஃப்ட் காரில் கருப்பு நிற பெயிண்ட் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை. ஆனால், இந்திய ஸ்விஃப்ட் கார் அதிக எண்ணிக்கையில் ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

அதேபோல், ஆஸ்திரேலியாவில் சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விலையுயர்ந்த வேரியண்ட்களில் 16 இன்ச்சிலும், விலை குறைவான வேரியண்ட்களில் 15 இன்ச்சிலும் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் ஸ்விஃப்ட் காரில் அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாக 15-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.
தொழிற்நுட்ப வசதிகள்: இந்திய ஸ்விஃப்ட் காரில் வயர்லெஸ் போன் சார்ஜர், 9-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை புதிய அம்சங்களாக சமீபத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால், ஆஸ்திரேலிய சுஸுகி ஸ்விஃப்ட் ஹைப்ரீட் காரில் ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிபக்க கண்ணாடிகள் போன்றவை கூடுதலாக வழங்கப்படுகின்றன.

அதேபோல், ஆஸ்திரேலிய ஸ்விஃப்ட் காரின் உட்புறம் ஆனது கருப்பு மற்றும் வெள்ளை என இரட்டை நிறங்களில் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் முழுவதுமாக கருப்பு நிறத்தில் மட்டுமே ஸ்விஃப்ட் காரின் உட்பக்கம் கொடுக்கப்படுகிறது. சில்வர் நிற ஹைலைட்கள் மட்டும் ஆங்காங்கே வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த இரு ஸ்விஃப்ட் கார்களிலும் இருக்கைகளின் தரம் ஒரே மாதிரியாக உள்ளது.
அடாஸ் (ADAS): இன்றைய கால மாடர்ன் கார்களில் அடாஸ் ஆனது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவருகிறது. ஆஸ்திரேலிய ஸ்விஃப்ட்டில் அடாஸின் மூலமாக, மோதல் ஏற்பட போவதை எச்சரிக்கும் வசதி, பாதையில் இருந்து கார் விலகுவதை எச்சரிக்கும் வசதி மற்றும் தேவைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோலை பெற முடிகிறது. ஆனால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் காரில் இந்த அட்வான்ஸ்டு தொழிற்நுட்பம் வழங்கப்படுவதில்லை.

என்ஜின்: இந்தியாவில் ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎஸ் மற்றும் மற்றும் 112 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆஸ்திரேலிய ஸ்விஃப்ட் கார் ஹைப்ரீட் காராக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த காரில் இந்தியாவில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 12 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. இருப்பினும், பவர் அவுட்-புட்டில் இரு கார்களுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.
விலை: ஆஸ்திரேலியாவில் 24,490 டாலர்களில் இருந்து 30,135 டாலர்கள் வரையிலான விலைகளில் சுஸுகி ஸ்விஃப்ட் ஹைப்ரீட் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.13.51 லட்சம் - ரூ.16.62 லட்சம் ஆகும். ஆனால், இந்தியாவில் ஸ்விஃப்ட் காரின் விலைகள் வெறும் ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.60 லட்சம் வரையில் மட்டுமே உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலைகளில் இந்த அளவிற்கு வித்தியாசம் இருப்பதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலியாவில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, அடாஸ் போன்ற அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்கள் அங்கு வழங்கப்படுகின்றன. அதுவே, இந்தியாவில் பட்ஜெட் விலையில் கார் வாங்குபவர்களே அதிகமாக உள்ளதால், ஸ்விஃப்ட் காரை முடிந்தவரையில் குறைந்த விலையில் விற்பனை செய்ய மாருதி சுஸுகி முயற்சிக்கிறது.


Click it and Unblock the Notifications









