22 வருஷம் கடந்து போயாச்சு... இன்னமும் நின்னு பேசும் மஹிந்திரா கார்!! போட்ட உழைப்பு அனைத்தும் இலாபம் தான்!
இந்தியாவில் எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான அளவுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. 4 மீட்டர்களுக்குள் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என்றும், 4.2 மீட்டர்களில் இருந்து 4.4 மீட்டர்கள் வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது, மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும். இவை 4.4 மீட்டர்களில் இருந்து 4.7 மீட்டர்கள் வரையில் நீளம் கொண்டவை ஆகும். இந்த எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் எவ்வாறு இருந்தது? என்பதை பற்றி விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போதைக்கு 10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை மொத்தமாக கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் 30,035 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 ஆகஸ்ட் மாதத்தில் 23,173 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் மிட்-சைஸ் கார்கள் விற்பனை ஆனது 29.61% அதிகரித்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 6,862 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 ஜூலை மாதத்திலும் 26,890 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் ஜூலையில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை 11.70% குறைந்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவது மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 13,787 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 ஆகஸ்ட்டில் 9,898 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஸ்கார்பியோ கார்கள் விற்பனை ஆனது 3,889 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

2024 ஜூலை மாதத்திலும் 12,237 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், ஸ்கார்பியோ கார்கள் விற்பனை ஆனது 12.94% அதிகரித்துள்ளது. ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்திலும் மஹிந்திரா காராக எக்ஸ்யூவி700 உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை எண்ணிக்கை 9,007 ஆகும். 2023 ஆகஸ்ட்டில் 6,512 எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இதன்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 2,495 எக்ஸ்யூவி700 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து, 3வது மற்றும் 4வது இடங்களில் டாடா மோட்டார்ஸின் சஃபாரி மற்றும் ஹெரியர் கார்கள் உள்ளன. கடந்த மாதத்தில் 1,951 சஃபாரி கார்களும், 1,892 ஹெரியர் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2023 ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் 200 ஹெரியர் கார்கள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மாதத்தில் 1,019 ஹெரியர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த டாடா கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் கார்கள் இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 1,814 எம்ஜி ஹெரியர்/ பிளஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்ற ஹூண்டாய் அல்கஸார் இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட அல்கஸார் கார்களின் எண்ணிக்கை 1,105 ஆகும். இவை இல்லாமல், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 280 ஜீப் காம்பஸ் கார்கள், 125 ஹூண்டாய் டக்ஸன் கார்கள், 73 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார்கள் மற்றும் ஒரேயொரு சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற எஸ்யூவி கார்களை போலவே, மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனையும் மாதத்திற்கு மாதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மஹிந்திரா ஸ்கார்பியோ ஆனது இந்தியாவில் மக்கள் நிறைய பேரது ஃபேவரட் காராக மாறி வருகிறது. இதில் ஆச்சிரியம் என்னவென்றால், ஸ்கார்பியோ கார் ஆனது சுமார் கடந்த 20 வருடங்களாக விற்பனையில் உள்ளது.


Click it and Unblock the Notifications









