டெலிவரி கொடுத்து ஓரிரு நாட்களே ஆகுது அதுக்குள்ள இப்படியா!.. முழுக்க முழுக்க மங்களகரமாக மாறிய தார் ராக்ஸ்!

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மடாலே மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) ஆகும். இது 3 டோர் தார் (3 Door Thar) கார் மாடலின் 5 டோர் வெர்ஷன் ஆகும். 3 டோர் தார் காரின் அறிமுகத்தின்போதே 5 டோர் வெர்ஷன் மீதான எதிர்பார்ப்பு என்பது இந்தியர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையிலேயே கடந்த ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி இந்த காரை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்னர் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட்டன. அக்டோபர் 12 அன்றே தார் ராக்ஸ் காரின் டெலிவரி பணிகள் தொடங்கின. இந்த நிலையிலேயே டெலிவரி வழங்கப்பட்டு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே ஆகின்றநிலையில் புதிய தார் ராக்ஸ் காரை அதன் உரிமையாளர் ஒருவர் முற்றிலும் மாறுபட்ட நிறத்திற்கு மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mahindra thar roxx with yellow theme

மங்களகரமான நிறமாக அறியப்படும் மஞ்சள் நிறத்திற்கு அக்கார் மாற்றப்பட்டு இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் நிறம் ஆகும். இந்த நிறத்தை பெரும்பாலும் உயர்வகை கார்களில் மட்டுமே காண முடியும். இத்தகைய நிறத்தையே தார் ராக்ஸ் காருக்கு பூசப்பட்டு இருக்கின்றது. ஸ்வரன்ஜித் எனும் நபருக்கு சொந்தமானதே இந்த தார் ராக்ஸ் என கூறப்படுகின்றது.

இந்த நபர் மிகப் பெரிய மஞ்சள் நிற பிரியர் என தெரிகின்றது. ஏனெனில் அவருடைய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் மற்றும் ஆடி கார் ஒன்றும் அதே மஞ்சள் நிறத்திலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே தற்போது தார் ராக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரின் வெளிப்புறம் மட்டுமில்லைங்க உட்பக்கமும் மஞ்சள் நிறத்திற்கே மாற்றப்பட்டு இருக்கின்றது. காரின் இருக்கை, கைப்பிடி மற்றும் டோர் பேனல்கள் என பெரும்பாலான பாகங்களுக்கு மஞ்சள் நிறமே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பைப் பெறும் கார் மாடலாகவே தார் ராக்ஸ் மாறியிருக்கின்றது.

இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த வாகனமாக இதனை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே 4x4 தொழில்நுட்பம் வசதி இந்த காரில் புதிதாக சமீபத்தில் இணைக்கப்பட்டது. இந்த அம்சம் இணைப்பதற்கு முன்னரே இதற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் புக்கிங் கிடைத்தது என்பது கவனிக்கத்தகுந்தது.

அக்டோபர் 3 ஆம் தேதி அன்றே இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கின. தொடங்கன முதல் 60 நிமிடங்களிலேயே இந்த காருக்கு சுமார் 1.76 புக்கிங்குகள் கிடைத்தன. இத்தகைய தரமான வரவேற்பே தார் ராக்ஸ் கார் மாடலுக்கு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் இந்த கார் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டர்போ டீசல் எஞ்சினே அவை ஆகும். இதில் முதல் எஞ்சின் 162 பிஎஸ் - 177 பிஎஸ் மற்றும் 330 என்எம் - 380 என்எம் டார்க் வரை வெளியேற்றும்.

கியர்பாக்ஸைப் பொருத்து இதன் எஞ்சின் திறன் மாறுபடும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், டீசல் மோட்டார் அதிகபட்சமாக 163 பிஎஸ் - 175 பிஎஸ் மற்றும் 330 என்எம் - 370 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறனைக் கொண்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்த வரை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. மஹிந்திரா தார் ராக்ஸ் இந்தியாவில் ரூ. 12.99 லட்சம் தொடங்கி ரூ. 22.49 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் 3 டோர் வெர்ஷனுக்குக் கிடைத்ததைப் போலவே 5 டோர் வெர்ஷன் தார் ராக்ஸ்-க்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு வழங்க ஓர் நிறத்தை அதன் உரிமையாளர் ஒருவர் தற்போது பிரத்யேகமாக வழங்கி இருக்கின்றார்.

மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உட்பக்கத்திற்கு ரெண்டு விதமன நிற தேர்வும், வெளிப்பக்கத்திற்கு ஏழு விதமான நிற தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. டேங்கோ ரெட், டீப் ஃபாரஸ்ட், நெபுலா ப்ளூ, ஸ்டீல்த் பிளாக், பேட்டில் ஷிஃப்ட் கிரே, எவரெஸ்ட் ஒயிட் மற்றும் பர்ன்ட் சியன்னா ஆகியவையே அவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 18:05 [IST]
English summary
Indias first mahindra thar roxx with striking yellow modifications inside and out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+