இந்தியாவில் எங்கே தேடினாலும் இப்படியொரு காரை பார்க்க முடியாது!! கார் ஓனருக்கு எப்படி தான் தோணுச்சு தெரியலயே!

இந்தியாவிலேயே முதல்முறையாக ஸ்கோடா ராபிட் (Skoda Rapid) கார் ஒன்று லம்போர்கினி-ஸ்டைல் கத்திரிக்கோல் வடிவ கதவுகள் உடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ் ஸ்கோடா ராபிட் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லம்போர்கினி கார்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில், அந்த அளவிற்கு உலகளவில் பிரபலமானவைகளாக லம்போர்கினி கார்கள் விளங்குகின்றன. இருப்பினும், எல்லாராலும் லம்போர்கினி கார்களை வாங்க முடிவதில்லை. இதன் காரணமாகவே, நிறைய பேர் தங்களது கார்களை லம்போர்கினி கார் போன்று கஸ்டமைஸ் செய்துக் கொள்கின்றனர்.

skoda rapid with scissor doors

குறிப்பாக, லம்போர்கினியின் அடையாளமான கத்திரிக்கோல் வடிவ கதவுகள் உலகளவில் புகழ்பெற்றவை ஆகும். இதனால், கார் உரிமையாளர்கள் தங்களது காரின் கதவுகளை அவ்வாறு மாற்றிக் கொண்டதை சிலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், ஸ்கோடா ராபிட் கார் உரிமையாளர் ஒருவர் தனது காரில் சிஸர் டோர்களை பொருத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் இவ்வாறான கதவுகளை கொண்ட ஸ்கோடா ராபிட் காரை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை. இத்தகைய கதவுகள் மட்டுமின்றி, தனது காரில் வேறு சில மாற்றங்களையும் இந்த ஸ்கோடா கார் ஓனர் கொண்டுவந்துள்ளார். இந்த கஸ்டமைஸ் ராபிட் கார் தொடர்பான வீடியோ மிஹிர் காலட் என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

skoda rapid with scissor doors

பொதுவாக, ஸ்கோடா கார்களில் இவ்வாறான சிஸர் கார்களை பொருத்த முடியாது என கார் மெக்கானிக்குகள் கூறுவர். ஏனெனில், ஸ்கோடா கார்களின் உடலமைப்பு அவ்வாறானது ஆகும். ஆனால், இந்த கார் கஸ்டமைஸ் நிறுவனம் அது எல்லாத்தையும் உடைந்தெறிந்து, ஸ்கோடா ராபிட் காரில் சிஸர் கதவுகளை பொருத்தி அசத்தியுள்ளார்.

இந்த ராபிட் காரின் பவர்டிரெயினிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராபிட் காரில் பொருத்தப்படும் என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மும்பையில் கோட்6 ட்யூனர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் காரின் என்ஜின் ஸ்டேஜ் 2-க்கு ட்யூன் செய்யப்பட்டதினால், கூடுதலாக 35 பிஎச்பி இயக்க ஆற்றலை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

skoda rapid with scissor doors

இன்னும் முழுமையாக சோதனை செய்யதால், இந்த மாடிஃபை ராபிட் காரில் இருந்து கிடைக்கக்கூடிய டார்க் திறன் குறித்த விபரங்கள் இல்லை. இந்த காரின் வெளிப்பக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான மாடிஃபிகேஷன் என்னவென்று பார்த்தால், 10 ஸ்போக்குகளை கொண்ட புதுமையான டிசைனிலான அலாய் சக்கரங்கள் ஆகும். இந்த சக்கரங்களுக்கு மட்டும் ரூ.38,000 செலவாகியுள்ளது.

காரின் முன்பக்கத்தில் வெள்ளை நிற பின்ஸ்ட்ரிப்கள் உடன் ஃபைபர் ஸ்பிளிட்டர் உள்ளது. அதேபோல், பின்பக்கத்தில் போல்ட்-ஆன் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன், காரின் எக்ஸாஸ்ட் குழாய் சிஸ்டத்தையும் மாற்றியுள்ளனர். இவை எல்லாவற்றையும் விட இந்த காரின் முக்கிய அம்சமான சிஸர் கதவுகளை டெல்லியில் இருந்து இவர்கள் வரவழைத்துள்ளனர். இந்த கதவுகளின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த கதவுகளை கார் நகரும்போதும் திறந்து வைக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு காரை இயக்கலாம் என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயமாகும். ஏனெனில், இத்தகைய அம்சம் லம்போர்கினி காரில் கூட வழங்கப்படுவது இல்லை. மொத்தத்தில் இந்த ஸ்கோடா ராபிட் கார் பார்ப்பதற்கு அசத்தலாக உள்ளது. இருப்பினும், இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆதலால், இவ்வாறான மாற்றங்களை செய்யும் முன் முறையாக விசாரிப்பது நல்லது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2024, 19:51 [IST]
English summary
Indias first skoda rapid car with lambo scissor doors check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X