எவ்வளவு பெரிய ஃபேமலியாக இருந்தாலும் சரி... 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு மார்க்கெட்டில் பஞ்சமே இல்லை!!

புதியதாக கார் வாங்கும்போது மைலேஜ், விலை பார்த்து வாங்குவதோடு, காரின் பாதுகாப்பு அம்சங்களுக்கு எத்தனை மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பார்த்து வாங்கும் பழக்கமும் நம் மக்களிடையே சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 6- 7 நபர்களுடன் குடும்பமாக பயணிக்க விரும்புபவர்களின் முதல் கவனம் காரின் பாதுகாப்பு மீதுதான் விழுகிறது. அத்தகையவர்களுக்காகவே இந்தியாவில் 5 ஸ்டார் ரேட்டிங் உடன் கிடைக்கக்கூடிய அளவில் பெரியதான ஃபேமலி எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N): இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா காராக ஸ்கார்பியோ விளங்குகிறது. ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான வெர்சன்களில் ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மாடர்ன் ஸ்கார்பியோ காராக விளங்கும் ஸ்கார்பியோ-என் பாதுகாப்பு அம்சங்களில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

india s safest family suv cars

2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் ஸ்கார்பியோ-என் கார் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டுடனும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 6- 7 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கும் ஸ்கார்பியோ-என் காரில் பெரிய அளவில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

டாடா சஃபாரி (Tata Safari): இந்தியாவின் மற்றொரு முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார் சஃபாரி ஆகும். உலகளாவிய க்ளோபல் என்சிஏபி மற்றும் இந்தியாவின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் 5க்கு முழு 5 நட்சத்திரங்களை சஃபாரி பெற்றுள்ளது.

india s safest family suv cars

இதுவும் 6- 7 இருக்கைகளை கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். சஃபாரி காரில் 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 3,750 ஆர்பிஎம்-இல் 167.6 பிஎச்பி மற்றும் 1,750 - 2,500 ஆர்பிஎம்-இல் 350 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை வாங்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700): சமீப காலத்தில் மஹிந்திராவில் இருந்து வெளிவந்த தரமான கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 ஆகும். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காரின் நியூ ஜென்ரேஷன் காராக எக்ஸ்யூவி700 அறிமுகம் செய்யப்பட்டது. க்ளோபல் என்சிஏபி-இல் பெரியவர்கள் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது.

india s safest family suv cars

மேற்கூறப்பட்ட கார்களை போல் இல்லாமல், எக்ஸ்யூவி700 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. எம்.எக்ஸ் மற்றும் ஏ.எக்ஸ் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்யூவி700 காரில் ஸ்கார்பியோ-என் -இல் வழங்கப்படும் அதே டீசல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வாங்கும்போது, அவை என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் எத்தனை மதிப்பெண்களை பெற்றுள்ளன என்பதை அறிவது முக்கியமாகும். இதற்காகவே இந்திய அரசு பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டை கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தது. குடும்பத்துடன் பயணிக்கும்போது காரின் பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2024, 8:00 [IST]
English summary
Indias safest family suv cars mahindra scorpio n tata safari mahindra xuv700
மேலும்... #suv car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X