மஹிந்திராவுக்கே இது பெரிய ஷாக் ஆக இருக்கும்... கார்கள் விற்பனை டாப் கியரில்!!

உலகளவில் மிக பெரிய கார் சந்தைகளுள் நம் இந்தியாவும் ஒன்று என சொன்னால் அது மிகையில்லை. இதன் காரணமாகவே, சமீப காலத்தில் சிட்ரோன், பிஒய்டி போன்ற நிறுவனங்கள் நம் இந்திய மார்க்கெட்டில் நுழைந்துள்ளன. மற்றப்படி, இந்தியாவில் கார்கள் விற்பனை எப்போதும் போல் ஏற்றமும் இறக்கமுமாய் இருந்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வழக்கம்போல், கடந்த 2024 செப்டம்பர் மாதத்திலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 44,962 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல் முதலிடத்தை பிடித்து இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பரை காட்டிலும் இந்த செப்டம்பரில் மாருதி சுஸுகி கார்கள் விற்பனை எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

India s Top-10 Car Brands

ஏனெனில், 2023ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 1.5 லட்சத்தை கடந்து இருந்தது. ஆனால், கடந்த 2024 ஆகஸ்ட்டில் 1 லட்சத்து 43,075 மாருதி சுஸுகி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, மாருதி சுஸுகி கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 1,887 அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் மோட்டார் உள்ளது.

ஹூண்டாய் மோட்டாரில் இருந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 51,101 ஆகும். 2023 செப்டம்பரில் 54,241 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், ஹூண்டாய் கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 3,140 குறைந்துள்ளது. இதற்கடுத்து 3வது இடத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக மஹிந்திரா பிடித்துள்ளது. பொதுவாக, 3வது இடத்தை டாடா மோட்டார்ஸ் தான் பிடிப்பது வழக்கம்.

மஹிந்திராவில் இருந்து கடந்த மாதத்தில் இதுவரையில் இல்லாத உச்சமாக 51,062 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய்க்கும் மஹிந்திராவுக்கும் இடையே வெறும் 39 கார்கள் மட்டுமே வித்தியாசம் ஆகும். அதுவே, 2023 செப்டம்பரில் 41,267 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்திலும் 43,277 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

இதற்கடுத்து 4வது இடத்தில்தான் டாடா மோட்டார்ஸ் உள்ளது. இதில் இருந்து டாடா கார்கள் விற்பனை ஆனது குறைந்துக் கொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது. கடந்த மாதத்தில் 41,065 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 செப்டம்பரில் 44,850 கார்களையும், 2024 ஆகஸ்ட்டில் 44,142 கார்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இவற்றிற்கு அடுத்து 5வது இடத்தில் 23,802 கார்கள் விற்பனை உடன் டொயோட்டா உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இது குறிப்பிடுகிறது. குறிப்பாக, மாருதி சுஸுகி கார்கள் விற்பனை ஆனது பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கேற்ப மஹிந்திரா கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. வரும் மாதங்களிலும் இது தொடருமா? ஹூண்டாயை மஹிந்திரா முந்துமா என்பது குறித்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 6, 2024, 13:00 [IST]
English summary
Indias top 10 car brands 2024 september check all details here
மேலும்... #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+