25கிமீ மைலேஜ் தரும் இந்த மாருதி காருக்கு இத்தனை கஸ்டமர்களா? தீபாவளிக்கு பட்டாசு வாங்குற மாதிரி வாங்குறாங்க!!

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களை வாங்குவதற்கு என்றே எப்போதும் ஒரு பெரிய கூட்டம் உள்ளது. இதனால், ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏனெனில், ஹேட்ச்பேக் கார்களே பெரும்பாலும் விலை குறைந்தவையாக உள்ளன. மாருதி சுஸுகியில் இருந்து பல்வேறு விதமான ஹேட்ச்பேக் ரக கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவைதான் நிறைய நேரங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இது கடந்த செப்டம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளதா என்பதையும், கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எஸ்யூவி ரக கார்களை போன்று உயரமானவைகளாகவும் இல்லாமல், அதேநேரம் செடான் ரக கார்களை போன்று தாழ்வானவைகளாகவும் இல்லாமல் இரண்டிற்கும் மத்தியில் இருப்பவை ஹேட்ச்பேக் கார்களாகும். இந்தியாவில் தற்போதைக்கு 16 விலை குறைவான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் கடந்த செப்டம்பர் மாத விற்பனையில் டாப்-10 இடங்களை பிடித்த முதல் 10 கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

india s top-10 hatchback cars

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் இருப்பது டாடா அல்ட்ராஸ் ஆகும். டாடா மோட்டார்ஸின் சற்று விலைமிக்க ஹேட்ச்பேக் காராக விளங்கும் அல்ட்ராஸ் கடந்த மாதத்தில் 2,758 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3,031 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், ஆகஸ்ட்டை காட்டிலும் செப்டம்பரில் 273 அல்ட்ராஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முந்தைய 9வது மற்றும் 8வது இடங்களில் மாருதி சுஸுகி செலெரியோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3,241 மற்றும் 3,246 ஆகும். அதுவே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவை முறையே 3,181 மற்றும் 4,624 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 7வது மற்றும் 6வது இடங்களில் டாடா டியாகோ/ இவி மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்கள் உள்ளன.

india s top-10 hatchback cars

இவை கடந்த செப்டம்பரில் முறையே 4,225 மற்றும் 4,428 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவை இரண்டின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கைகள் இதனை காட்டிலும் 500 அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் 5வது இடத்தில் ஹூண்டாய் ஐ10 நியோஸ் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 5,103 ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆகஸ்ட்டில் 5,365 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வரிசையில் முதல் 4 இடங்களில் தொடர்ச்சியாக 4 மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார்கள் உள்ளன. அவையாவன, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், பலேனோ, வேகன்ஆர் மற்றும் ஆல்டோ ஆகும். இதில் 4வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கடந்த மாதத்தில் 8,655 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் ஆல்டோ கார்கள் விற்பனை ஆனது கிட்டத்தட்ட இதே அளவில்தான் இருந்தது.

india s top-10 hatchback cars

மூன்றாவது இடத்தில் பெரிய இடைவெளி உடன் மாருதி சுஸுகி வேகன்ஆர் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் கார்களின் எண்ணிக்கை 13,339 ஆகும். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 16,450 வேகன்ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், வேகன்ஆர் கார்களின் விற்பனை எண்ணிக்கை 3,111 யூனிட்கள் குறைந்துள்ளது. 2வது இடத்தில் மாருதி சுஸுகி பலேனோ உள்ளது.

கடந்த மாதத்தில் 14,292 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆண்டின் ஆகஸ்ட்டில் 12,485 பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், 1,807 பலேனோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 16,241 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 12,844 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டில் முதல் 4 இடங்களில் மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார்கள் இருப்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இருப்பினும், இந்த டாப்-10 லிஸ்ட்டில் குறைந்தது 6 மாருதி சுஸுகி கார்கள் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், 5 மாருதி சுஸுகி கார்கள் மட்டும்தான் உள்ளன. வேகன்ஆர் காரை தவிர்த்து, மற்ற அனைத்து மாருதி ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை மட்டுமே இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடந்த ஆகஸ்ட்டை காட்டிலும் செப்டம்பரில் அதிகமாக பதிவாகி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 27, 2024, 23:58 [IST]
English summary
Indias top 10 hatchback cars in 2024 september check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X