தீபாவளிக்கு பட்டாசை விட மாருதி கார்களை தான் எல்லாரும் வாங்கியிருக்காங்க!! இந்த 3 காருக்கு தான் செம்ம டிமாண்ட்!

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது. இதற்கு காரணம், இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து நிறைய ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், அவை தான் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் ரக கார்களாக விளங்குகின்றன. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

செடான் ரக கார்களுக்கும், எஸ்யூவி ரக கார்களுக்கும் இடையில் இருப்பவை ஹேட்ச்பேக் ரக கார்களாகும். இந்திய சந்தையில் தற்சமயம் மொத்தம் 16 ஹேட்ச்பேக் கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள ஹேட்ச்பேக் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

india s top-10 hatchback cars

கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 89 ஆயிரத்து 369 ஹேட்ச்பேக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 665 ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை ஆனது 23 ஆயிரத்து 296 யூனிட்கள் குறைந்துள்ளது.

ஆனால், இந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் வெறும் 82 ஆயிரத்து 37 ஹேட்ச்பேக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஹேட்ச்பேக் கார்களுள் 6 மாருதி சுஸுகி கார்கள் அடங்குகின்றன. இன்னும் சொல்லப்போனால், முதல் 4 இடங்களை மாருதி சுஸுகி கார்கள் தான் பிடித்துள்ளன. அவற்றுள் முதல் இடத்தை பிடித்திருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும்.

india s top-10 hatchback cars

கடந்த மாதத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 539 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை ஆனது 3 ஆயிரத்து 59 யூனிட்கள் குறைந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரில் 16 ஆயிரத்து 241 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில், செப்டம்பரை காட்டிலும் அக்டோபரில் 1,298 ஸ்விஃப்ட் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஸ்விஃப்ட்டிற்கு அடுத்து 2வது இடத்திலும் மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார் தான் உள்ளது. முதல் இரு இடங்களில் மட்டுமின்றி, ஏற்கனவே கூறியதுபோல் இந்த லிஸ்ட்டில் 3வது மற்றும் 4வது இடங்களிலும் மாருதி சுஸுகி கார்கள் தான் உள்ளன. இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார், பலேனோ ஆகும்.

india s top-10 hatchback cars

கடந்த மாதத்தில் 16 ஆயிரத்து 82 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 அக்டோபரில் இதனை காட்டிலும் 500 பலேனோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்தில் மாருதி சுஸுகி வேகன்ஆர் 13 ஆயிரத்து 922 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

4வது இடத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ 8,548 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 5வது மற்றும் 6வது இடங்களில் ஹூண்டாயின் ஹேட்ச்பேக் கார்களான ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 6,235 மற்றும் 5,354 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 4 இடங்களில் டாடா டியாகோ (4,682), டொயோட்டா க்ளான்ஸா (4,273), மாருதி சுஸுகி செலேரியோ (3,044) மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் (2,663) கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையை கூட குறைத்து வருவதை பார்க்க முடிகிறது. ஏனெனில், கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும் இந்த ஆண்டு அக்டோபரில் சுமார் 23 ஆயிரம் ஹேட்ச்பேக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபரில் அதிக எண்ணிக்கையிலான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2024, 0:00 [IST]
English summary
Indias top 10 hatchback cars of october 2024 maruti suzuki swift at number one position
மேலும்... #car sales #hatchback car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X