பட்ஜெட் போட்டு கார் வாங்குபவர்கள் கூட மாருதி சுஸுகியை தான் தேடுறாங்க... சேல்ஸ் நம்பர்ஸ் என்ன சொல்லுது?

இந்தியாவில் பட்ஜெட் போட்டு கார் வாங்குபவர்களில் பெரும்பாலானவர்களின் சாய்ஸ் ஹேட்ச்பேக் ரக கார்களாக உள்ளன. அதாவது, கார் மிகவும் உயரமாகவும் இல்லாமல், அதேநேரம் தாழ்வானதாகவும் இல்லாமல் நடுத்தரத்தில் இருக்கும். குறிப்பாக, ஹேட்ச்பேக் கார்களில் பின் இருக்கை வரிசை பயணிகளுக்கு நன்கு விசாலமான இடவசதி கிடைக்கிறது. ஹேட்ச்பேக் ரக கார்களை அதிகளவில் விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அதன் ஹேட்ச்பேக் கார்களை தான் பெரிதும் சார்ந்துள்ளது.

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2024 ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஹேட்ச்பேக் கார்களில் 5 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதல் 4 இடங்களை மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார்கள் பிடித்துள்ளன. இந்த வகையில் முதலிடத்தில் இருப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும்.

top-10 most sold hatchback cars

ஸ்விஃப்ட் காரை கடந்த மே மாதத்தில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் நியூ ஜென்ரேஷனுக்கு அப்டேட் செய்து இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 16,854 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஜூலை மாதத்தில் 17,896 ஸ்விஃப்ட் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை ஆனது 1,042 குறைந்துள்ளது.

இருப்பினும், கடந்த ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவிக்கு அடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் உள்ளது. ஸ்விஃப்ட்க்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காராக 2வது இடத்தில் மாருதி சுஸுகி வேகன்ஆர் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 16,191 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

top-10 most sold hatchback cars

2023 ஜூலையில் 12,970 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதாவது, கடந்த ஆண்டு ஜூலையை காட்டிலும் இந்த ஆண்டு ஜூலையில் 3,221 வேகன்ஆர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெரிய இடைவெளி உடன் இதற்கடுத்து 3வது இடத்தில் மாருதி சுஸுகி பலேனோ உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பலேனோ கார்களின் எண்ணிக்கை 9,309 ஆகும். ஆனால், 2023 ஜூலையில் சுமார் 16,725 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பலேனோ கார்களின் விற்பனை எண்ணிக்கை 7,416 குறைந்துள்ளது. இதற்கடுத்து இந்த வரிசையில் 4வது இடத்தை மாருதி சுஸுகி ஆல்டோ 7,353 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையிலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான ஆல்டோ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ள டாடா டியாகோ கடந்த மாதத்தில் 5,665 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

top-10 most sold hatchback cars

2023 ஜூலையில் இதனை காட்டிலும் 3,317 கார்கள் அதிகமாக 8,982 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் 6வது மற்றும் 7வது இடங்களை ஹூண்டாயின் ஹேட்ச்பேக் கார்களான ஐ20 மற்றும் ஐ10 நியோஸ் உள்ளன. இவை இரண்டும் கடந்த ஜூலை மாதத்தில் முறையே 4,937 மற்றும் 4,922 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் 5 ஆயிரத்தை கடந்து இருந்தது.

8வது இடத்தில் டொயோட்டா க்ளான்ஸா உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட க்ளான்ஸா கார்கள் கடந்த மாதத்தில் 4,836 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் டாடா அல்ட்ராஸ் மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ உள்ளன. இவற்றின் கடந்த ஜூலை மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3,444 மற்றும் 2,607 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. குறிப்பாக, ஒரு சமயத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் காராக இருந்த மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. உயரமான எஸ்யூவி கார்களை சமீப காலமாக மக்கள் ஆர்வமாக வாங்குவது இதற்கு ஒரு காரணம் என சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 17, 2024, 8:00 [IST]
English summary
Indias top 10 most sold hatchback cars in july maruti suzuki swift wagonr
மேலும்... #car sales #india car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X