கார் வாங்கும்முன் இந்த லிஸ்ட்டை பார்க்காம தப்பு பண்ணிடாதீங்க! உலக அரங்கில் நம்ம ஊர் மானத்தை காப்பாற்றிய கார்ஸ்
2022 புள்ளி விபரத்தின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 1 லட்சத்தில் சராசரியாக 9.5 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இந்த விகிதம் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதனாலேயே, கார்களை மக்கள் மைலேஜ் மற்றும் விலையை பார்த்து வாங்கிய காலம் போய், இப்போதெல்லாம் வாங்கும் கார் எந்த அளவிற்கு பாதுகாப்பானது, அவற்றில் எந்த மாதிரியான பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன என்பதை பொறுத்துதான் புதிய காரையே தேர்வு செய்கின்றனர்.
இதன் காரணமாக, மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் கார்களை மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தி அவற்றிற்கான தர நிலைகளை வழங்கும் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (NCAP Crash Test) அமைப்புகளின் மதிப்பெண்கள் சமீப காலமாக முக்கியமானவைகளாக மாறி உள்ளன. அந்த வகையில், இந்த 2024ஆம் வருடத்தில் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் அதிக மதிப்பெண்கள் உடன் டாப்-10 இடங்களில் உள்ள கார்களை நமது டிரைவ்ஸ்பார்க் குழு இறுதி செய்துள்ளது. வாருங்கள், அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

இந்த வரிசையில் முதலிடத்தில் இரு விலைமிக்க டாடா (Tata) கார்கள் உள்ளன. அவை, ஹெரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகும். 5 கதவுகளை கொண்ட எஸ்யூவி கார்களான இவை இரண்டும் பெரியவர்கள் பாதுகாப்பில் 5க்கு முழு 5 நட்சத்திரங்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 5க்கு 5 நட்சத்திரங்களையும் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மோதல் சோதனையில் பெற்று அசத்தின.
டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி இரண்டுமே பெரியவர்கள் பாதுகாப்பில் 34க்கு 33.05 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களையும் பெற்று ஆச்சிரியப்படுத்தின. இவற்றிற்கு அடுத்து 2வது இடத்திலும் டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி கார் தான் உள்ளது. பிரபலமான டாடா எஸ்யூவி காரான நெக்ஸான் (Nexon) தான் அந்த எஸ்யூவி கார் ஆகும். ஹெரியர் & சஃபாரியை போன்று நெக்ஸானும் 5க்கு முழு 5 நட்சத்திரங்களை பெற்றது.

ஆனால், மதிப்பெண்கள் கொஞ்சம் குறைவாகும். பெரியவர்கள் பாதுகாப்பில் 34க்கு 32.22 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 44.52 மதிப்பெண்களையும் டாடா நெக்ஸானுக்கு க்ளோபல் என்சிஏபி அமைப்பு வழங்கியது. இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ள நியூ-ஜென்ரேஷன் மாருதி சுஸுகி டிசைர் கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் முழு 5 ஸ்டார்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 5க்கு 4 ஸ்டார்களையும் பெற்றுள்ளது.
4வது இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்கள் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் பாதுகாப்பிலும் முழு 5 ஸ்டார்களை பெற்றுள்ளன. இருப்பினும், மதிப்பெண்களை பொறுத்து இவற்றிற்கு 4வது இடத்தை வழங்கியுள்ளோம். அதேபோல், 5வது இடத்தில் உள்ள ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களும் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன.

ஆனால், பெரியவர்களின் பாதுகாப்புக்கான இந்த கார்களின் மதிப்பெண் இன்னும் குறைவாகும். 6வது இடத்தில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றிருப்பினும், சிறியவர்களின் பாதுகாப்பில் 5க்கு 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. 7வது இடத்தில் உள்ள ஹூண்டாய் வெர்னா பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவரது பாதுகாப்பிலும் 5க்கு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில், கடைசி 3 இடங்களில் டாடா பஞ்ச், டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை இறுதி செய்துள்ளோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப்-10 தர வரிசையை கார்களின் பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பெண்களை பொறுத்து வரிசைப்படுத்தி உள்ளோம். இதனால்தான், மாருதி சுஸுகி டிசைர் கார் சிறியவர்கள் பாதுகாப்பில் 5க்கு 4 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றிருப்பினும் 3வது இடத்தில் உள்ளது. சிறுவர், சிறுமியர்களுக்கான பாதுகாப்பு தான் முக்கியம் என்றாலும், அதிக நேரம் காரில் செலவிடுவது பெரியவர்கள் தான் என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.


Click it and Unblock the Notifications









