ஒரே மாசத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிக பேர் வாங்கியிருக்காங்க! இந்த மாருதி காரில் மட்டும் அப்படி என்னங்க இருக்கு

இந்தியாவில் செடான் ரக கார்களுக்கு மார்க்கெட் குறைந்து கொண்டே வருவதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. ஏனெனில், சாலையில் செடான் ரக கார்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை நீங்களே கண்கூடாக பார்க்க முடியும். இருப்பினும், மாருதி சுஸுகி மட்டும் அதிக எண்ணிக்கையில் செடான் கார்களை விற்பனை செய்து வருகிறது. மற்ற நிறுவனங்களின் செடான் கார்கள் விற்பனை பெரிய அளவில் இல்லை. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செடான் ரக கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செடான் கார் மாடல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் சாலையில் தென்படுபவை எல்லாம் தாழ்வான செடான் கார்களாக இருந்தன. ஆனால், உயரமான மற்றும் கம்பீரமான எஸ்யூவி கார்களை மக்கள் அதிகம் வாங்க ஆரம்பித்த பின் செடான் கார்களின் விற்பனை அப்படியே குறைந்துவிட்டது.

india s top-10 sedan cars

கார் நிறுவனங்களும் புதியதாக செடான் கார்களை அறிமுகப்படுத்த தயங்குகின்றன. தற்போதைக்கு இந்தியாவில் பட்ஜெட் விலையில் 11 செடான் ரக கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சில செடான் கார்களின் விலைகள் ரூ.40- 50 லட்சம் வரையில் கூட உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 941 செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பரை காட்டிலும் இது 2,939 கார்கள் அதிகமாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 25 ஆயிரத்து 2 செடான் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. வழக்கம்போல் கடந்த அக்டோபர் மாதத்திலும் அதிகம் விற்பனையான செடான் காராக முதலிடத்தில் மாருதி சுஸுகி டிசைர் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 698 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் 10 ஆயிரத்து 853 டிசைர் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

india s top-10 sedan cars

இந்த வகையில் பார்த்தால், செப்டம்பரை காட்டிலும் அக்டோபரில் ஆயிரத்து 845 டிசைர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைருக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் அவ்ரா உள்ளது. ஆனால், டிசைருக்கும், அவ்ராவுக்கும் விற்பனை எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. எந்த அளவிற்கு என்றால், டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவ்ரா கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அப்படியிருந்தும் அவ்ரா 2வது இடத்தை பிடித்துள்ளது என்றால், மற்ற செடான் கார்களின் விற்பனை எண்ணிக்கையை யோசித்து பாருங்கள். கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 805 அவ்ரா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. அதுவே, செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட அவ்ரா கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 462 ஆகும். இதற்கடுத்து 3வது இடத்தில் ஹோண்டாவின் அமேஸ் செடான் கார் 2 ஆயிரத்து 393 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

india s top-10 sedan cars

செப்டம்பரில் 2 ஆயிரத்து 820 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் விற்பனை எண்ணிக்கை செப்டம்பரை காட்டிலும் 654 யூனிட்கள் அதிகரித்து கடந்த அக்டோபரில் 2 ஆயிரத்து 351 விர்டுஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விர்டுஸ் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது.

கடந்த மாதத்தில் 1,637 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது மற்றும் 7வது இடங்களில் ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,272 மற்றும் 1,004 ஆகும். 8வது இடத்தில் டாடா டிகோர் 926 யூனிட்கள் விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. 9வது மற்றும் 10வது இடங்களில் மாருதி சுஸுகி சியாஸ் (659) மற்றும் டொயோட்டா காம்ரி (176) கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், கடந்த மாதத்தில் 20 ஸ்கோடா சூப்பர்ப் கார்களும் விற்பனையாகி உள்ளன. செடான் கார்கள் விற்பனை குறைந்து வருகிறது என கூறினாலும், செப்டம்பரை காட்டிலும் அக்டோபரில் அதிக எண்ணிக்கையிலான செடான் கார்கள் மார்க்கெட்டில் விற்பனையாகி உள்ளன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி டிசைர் காரின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய டிசைர் கார் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2024, 17:29 [IST]
English summary
Indias top 10 sedan cars in october 2024 maruti suzuki dzire hyundai aura honda amaze
மேலும்... #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X