மாருதியின் இந்த காருக்கு தான் மொத்த நாடும் வெயிட்டிங் - அறிமுக தேதி தெரிஞ்சாச்சு... புக் பண்ண ரெடியாகுங்க!!
இந்தியாவில் வருட இறுதி பண்டிகை நாட்கள் வர ஆரம்பித்துவிட்டன. வட இந்தியாவில் ஏற்கனவே தசரா கோலாகல கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. இதற்கிடையில் ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைகளும் வந்துவிட்டன. இதன்பின் வரும் தீபாவளி ஆனது நம் நாடு முழுக்க கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இவ்வாறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதால், அதற்கேற்ப வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும். ஏனெனில், இவ்வாறான பண்டிகை கால சமயத்தில்தான் நிறைய பேர் புதியதாக வாகனங்களை வாங்க விரும்புகின்றனர்.
இதை உணர்ந்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதியது புதியதாக வாகனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. அந்த வகையில், இந்திய சந்தையில் அடுத்ததாக ரூ.10 லட்சத்திற்குள் 3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதையும், அவற்றின் அறிமுகம் எப்போது இருக்கும் என்பதை குறித்தும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் மக்கள் பலர் விரும்பி வாங்கும் கார்களுள் ஒன்றாக இருப்பதால், டிசைர் காரின் அப்டேட் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நியூ ஜென்ரேஷன் டிசைர் காரின் அறிமுகம் நவம்பர் 4ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே புதிய டிசைர் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிடும்.
மாருதி சுஸுகியின் காம்பெக்ட்டான செடான் ரக காராக விளங்கும் டிசைர் அதன் நியூ ஜென்ரேஷனில் புதுமையான வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்துடன் முற்றிலும் புதிய தோற்றத்தை பெற்றுவர உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நியூ ஜென்ரேஷன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் இருந்து நிறைய விஷயங்கள் புதிய டிசைர் காரிலும் வழங்கப்படும்.

2. ஹோண்டா அமேஸ் (Honda Amaze): மேலே கண்ட மாருதி சுஸுகி டிசைர் காருக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் அமேஸ் காரும் விரைவில் நியூ ஜென்ரேஷனுக்கு அப்கிரேட் செய்யப்பட உள்ளது. புதிய ஹோண்டா அமேஸ் காரின் அறிமுகத்தை இந்த 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கிறோம்.
நியூ ஜென்ரேஷன் அமேஸ் காரின் முன்பக்க மற்றும் பின்பக்கங்களின் தோற்றம் மாற்றி வழங்கப்பட உள்ளது. அதேபோல், தொழிற்நுட்ப அம்சங்களும், பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் மேம்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. காரில் புதிய வசதிகள் வழங்கப்படும். மற்றப்படி, அமேஸ் காரின் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது.

3. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி (Mahindra XUV 3XO EV) : முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் காராக கடந்த மே மாதத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ அறிமுகம் செய்யப்பட்டது. இதன் புதிய எலக்ட்ரிக் வெர்சன் தான் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி ஆகும். இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் இந்த 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் அதே சிறிய அளவிலான பேட்டரி பேக் இந்த புதிய எலக்ட்ரிக் காரிலும் கொடுக்கப்படலாம். சிங்கிள்-சார்ஜில் அதிகப்பட்சமாக 400கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக இந்த பேட்டரி இருக்கும். டாடா நெக்ஸான் இவி மற்றும் டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக ரூ.10 லட்சத்தில் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவான கார்களுக்கே எப்போதும் நல்ல மார்க்கெட் உள்ளது. இதன் காரணமாகவே, குறைந்த விலையில் கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக, மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஸ்விஃப்ட் மற்றும் டிசைர் கார்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் அப்டேட் செய்துவிடுகிறது.


Click it and Unblock the Notifications









