சிட்ரோன் பசால்ட் மொத்த மார்க்கெட்டையுமே வளச்சு போட்டுவிடும் போலையே! உள் பக்கம் மிரள விட்ருச்சு!

பிரபல பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான (Citroen) இந்தியாவில் தனது ஐந்தாவது தயாரிப்பான பசால்ட் (Basalt) கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே நேற்றைய தினம் (ஆகஸ்ட் 2) இந்த காரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு செய்தது, சிட்ரோன். விரைவில் இந்த காரின் புக்கிங் மற்றும் விற்பனை பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பசால்ட் ஓர் கூபே எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

இந்த கார் மாடலை அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் வாகனமாகவே சிட்ரோன் தயாரித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தியர்கள் மத்தியில் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனத்திற்கு மிக சிறப்பான விற்பனைக்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உணர்ந்தே பசால்ட்டை அதிகம் சிறப்புகளை தாங்கிய வாகனமாக சிட்ரோன் தயார் செய்துள்ளது.

Citroen basalt interior features

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இந்த கார்குறித்த ஓர் டீசர் வீடியோவை சிட்ரோன் வெளியிட்டது. இந்த வீடியோவில் இடம் பெற்றிருப்பது பசால்ட்டின் உயர்நிலை தேர்வாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஏனெனில், அந்த அளவிற்கே மிக அதிக அம்சங்களைத் தாங்கியதாக அதன் கேபின் இருக்கின்றது.

குறிப்பாக, பின்னிருக்கையாளர்கள் மிகவும் சொகுசான பயண அனுபவத்தை பெறும் நோக்கில் ஏகப்பட்ட அம்சங்களை சிட்ரோன் வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, மிகவும் மிருதுவான இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, லேசாக நகர்த்தி கொள்ளும் வசதியும் இந்த காரின் பின்னிருக்கைக்கு வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதுதவிர, பயணிகள் எளிதில் அணுகும் விதமாக சில கன்ட்ரோல்களை டோரிலேயே சிட்ரோன் வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, பின்னிருக்கையாளர்களுக்கு குளிர்ச்சியான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக காரின் தரை பகுதியில் ஏசி துவாரங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பொதுவாக, ஏசி துவாரங்கள் காரின் ரூஃபிலேயே வழங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பின் இருக்கை பயணிகளுக்கு மட்டுமே அதிக வசதிகள் வழங்கப்படும் என நினைத்துக் கொள்ள வேண்டாம் முன் பக்க இருக்கைகயாளர்களுக்கு ஏற்ற வசதியையும் இந்த காரில் சிட்ரோன் வழங்கி மிக தாராளமாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Citroen basalt arm rest

குறிப்பாக, நிறுவனத்தின் உயர் நிலை கார் மாடலான சி3 ஏர்கிராஸ் (C3 Aircross) மாடலைவிட பசால்ட் சில விஷயங்களில் மிக சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், பாசால்ட் கார் மாடலில் டோகிள் ஸ்விட்ச்சுடன் கூடிய ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட ஆர்ம்ரெஸ்ட், ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவையே இந்த காரில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

டீசர் படங்கள் வாயிலாகவே இது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த காரில் மிகுந்த வசதியான பயண அனுபவம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் டீர் படங்கள் வாயிலாக இந்த காரின் ஓட்டும் அனுபவமும் மிகுந்த வசதியானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. அந்தவகையில், 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பிரேட்டட் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆகிய ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.

இதில், நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்சின் 82 பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். கியர்பாக்ஸை பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. அதேவேளையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏடி ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த மோட்டார் 110 பிஎஸ் மற்றும் 205 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டது என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. மைலேஜை பொருத்த வரை இந்த கார் 18 கிமீ முதல் 19.5 கிமீ வரையில் வழங்கும். இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற சூழலில் சிட்ரோன் நிறுவனம் இந்த காரில் வெறும் பெட்ரோல் ஆப்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இது அதன் விற்பனையில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நம்பப்படுகின்றது. விலையை பொருத்த வரை இந்த காருக்கு ரூ.11 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையே நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடலுக்கு இப்போதைக்கு நேரடி போட்டி இல்லை. அதேவேளையில், விரைவில் டாடா கர்வ் (Tata Curvv) ரூபத்தில் பசால்ட்டுக்கு போட்டி மாடல் வர இருக்கின்றது. இது ஓர் கூபே எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் பசால்ட் காரில் இடம் பெற இருக்கும் அம்சங்களே அதற்கு இந்தியாவில் மிகப் பெரிய சந்தையை ஏற்படுத்திக் கொடுக்கப்போவதாக நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிறுவனம் மலிவு விலையில் விற்பனைச் செய்து வரும் சி3 கார் மாடலுக்கே மிக கணிசமான அளவிலேயே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 3, 2024, 15:02 [IST]
English summary
Inside the citroen basalt suv coupe exclusive look at top variants features
மேலும்... #citroen #Citroen Basalt #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X