எத்தன பேர் கண்ணாடியை உடைக்க போறாங்களோ... இதுதான் 2024 ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வமான காரா!
2024 ஐபிஎல் (2024 IPL) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதன் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த சூழலில் 2024 ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வமான கார் (Official Car Of The 2024 IPL) டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் கார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நிறைவடைந்த 2024 டபிள்யூபிஎல் (2024 WPL) தொடரின் அதிகாரப்பூர்வமான காராக டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார்தான் இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதை தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வமான கார் ஆகவும், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வமான கார் ஆக அறிவிக்கப்படும் 2வது எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த 2023 ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வமான காராக டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் கார் இருந்தது. இந்த எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, நடப்பு 2024ம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வமான காராக, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றின் டிரைவிங் ரேஞ்ச் 421 கிலோ மீட்டர்கள் எனவும், மற்றொன்றின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் என்பதுடன், பல்வேறு அதிநவீன வசதிகளும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமீபத்தில் நிறைவடைந்த டபிள்யூபிஎல் தொடரின் ஒரு போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரி (Ellyse Perry) விளாசிய ஒரு சிக்சர், மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஜன்னல் கண்ணாடிகளை பதம் பார்த்தது. இந்த உடைந்த கண்ணாடிகளை ஒரு ஃப்ரேமில் வைத்து எல்லீஸ் பெர்ரிக்கு பரிசளித்தது டாடா மோட்டார்ஸ்!
அதேபோல் அதிகாரப்பூர்வ கார் என்பதால், ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களிலும், டாடா பன்ச் இவி காட்சிக்கு நிறுத்தப்படும். இந்த தொடரில் எத்தனை பேட்ஸ்மேன்கள் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் கண்ணாடிகளை உடைக்க போகிறார்களோ? என சமூக வலை தளங்களில் ரசிகர்கள் நகைச்சுவையாக பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








