குளிர் மற்றும் மழை காலத்திற்கு ஏற்றது பெட்ரோல் வண்டியா?.. இல்ல எலெக்ட்ரிக் வாகனமா? தெரிஞ்சிக்க வேண்டிய தகவல்!
பேட்டரியால் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இவை பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் அதிகம் லாபம் ஈட்டித் தரக் கூடியவை, அதேவேளையில், சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும் அவை செயல்படும், இதுபோன்ற காரணங்களினாலேயே மின்சார வாகனங்களுக்கு இந்தியர்கள் தங்களின் பேராதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதுதவிர, அரசாங்கங்களும் அவர்கள் சார்பில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மானியம் மற்றும் வரி சலுகை உள்ளிட்டவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் மின்சார வாகன விற்பனை தற்போது பலமடங்கு சூடுபிடித்துக் காணப்படுகின்றது.
அதேவேளையில், மின்சார வாகனங்கள் சில தனித்துவமான பயன்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக, மழைக் காலத்தில் பயன்படுத்த மின்சார வாகனங்கள் உகந்தவை என கூறப்படுகின்றது. இது உண்மையா என்பதே பலரின் கேள்விக் குறியாக உள்ளது. இதற்கான பதிலையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம்.

மிக முக்கியமாக உள் எரிப்பு எந்திரம் (ICE) கொண்ட கார்களை விட மின்சார வாகனங்கள் எந்தவகையில் சிறந்தவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம். மின்சார வாகனம் மற்றும் ஐசிஇ வாகனம் இந்த இரண்டும் மழையை சமாளிக்கும் வகையிலேயே தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.
மழை மட்டுமல்ல இந்தியாவின் அதிகப்படியான வெயில் மற்றும் குளிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு இருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, பேட்டரி வாகனத்தின் மின்சார அமைப்பு நீர் புகா வண்ணம் மற்றும் நீரால் பாதிக்காத வண்ணம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இதனால், தான் அவை மழைக் காலத்திலும் பயன்படுத்த உகந்தவையாக காட்சியளிக்கின்றன. மேலும், அவை மழையினால் தடையேதும் சந்திப்பதும் இல்லை. மின்சார வாகனங்களின் இதயமாகக் கருதப்படும் பேட்டரி பேக்குகளும் தண்ணீரால் பாதுகாத்தாத வண்ணமே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுவே மழே நீரில் வாகனம் மூழ்கினாலும் அவை இயங்குவதற்கு அனுமதிக்கின்றது.
ஆனால், ஐசிஇ எஞ்சின் கொண்ட வாகனம், நீர் நிறைந்த சாலையில் இயங்கினால் சிறிது நேரத்தில் எஞ்சின் இயக்கத்தில் தடை ஏற்படக் கூடும். எக்சாஸ்ட்டில் இருந்து வெளியேறும் புகை வெளியேறுவதில் தடை ஏற்படுவதாலும், எஞ்சினுக்கு செல்லும் காற்று தடைப்படுவதாலும் விரைவில் அது இயங்குவது முழுமையாக நின்றுவிடும்.
இந்த நிலை காரணமாகவே ஐசிஇ எஞ்சின் கொண்ட வாகனங்கள் சில மீட்டர் தூரம் சென்ற உடன் நீருக்குள் சிக்கி பழுதாகிவிடுகின்றன. ஆனால், மின்சார வாகனங்கள் அப்படியாகுவது இல்லை. இதன் பேட்டரி அமைப்பு தண்ணீரால் மட்டுமல்ல தூசி மற்றும் பிற-இயற்கை சீற்றங்களாலும் பாதிக்காத வண்ணமே தயார் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், 30 நிமிடங்கள் வரை ஒரு மீட்டர் ஆழமுள்ள நீர்நிலையில் இருந்தாலும் அதற்கு எதுவுமே ஆகாது. சிறு துளி நீர்கூட உள்பக்கம் நுழையாது. இந்த தன்மையாலேயே சில எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் தங்களின் மின்சார வாகனங்களை நீர்மூழ்கி வாகனங்களைப் போல பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர்கூட ஓர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர் கடல் அலைகளுக்கு இடையே, அவரே மூழ்கும் அளவிற்கு ஆழத்தில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டினார். இருப்பினும், அந்த வாகனம் அங்கு இயங்கியது. இதுமட்டுமில்லைங்க, தண்ணீர் நிறைந்த சாலையில் ஓர் போர்ஷே எலெக்ட்ரிக் கார் நீர்மூழ்கி கப்பலை போல நீருக்குள் ஊடுருவி சென்ற வீடியோவும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியது.
இதேபோல், டெஸ்லா கார்களும் நீருக்குள் மூழ்கிய வண்ணம் பயணித்த சம்பவங்களும் இந்த உலகத்தில் அரங்கேறி இருக்கின்றன. பொதுவாக மின்சார வாகனத்தில் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் இன்ஸ்டான்ட் டார்க் திறனை வெளியேற்றக் கூடியவையாக இருக்கின்றன. அதன் இந்த திறனே வாகனத்திற்கு மிக சிறந்த டிராக்சன் கன்ட்ரோலை வழங்கி, அதை ஈராமான சாலையிலும் சிறந்து இயங்க அனுமதிக்கின்றன.
இதனாலும், மின்சார வாகனங்கள் மழைக் காலத்திற்கு உகந்தவையாகக் காட்சியளிக்கின்றன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. மழைக் காலத்தில் ஸ்மூத்தான மற்றும் கூடுதல் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தை வழங்குகிறது. அதேவேளையில், ஈரமான சாலைகளில் நிறுத்தும் தூரத்தையும் இது அதிகரிக்கச் செய்கின்றது. இதேபோல், ஐசிஇ வாகனங்களைவிட சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை குளிர்காலத்திலும் வழங்கும் திறன் கொண்டதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டு காலக்கட்டத்திலும் மின்சார வாகனங்களின் ரேஞ்ஜ் திறன் குறையக் கூடலாம். குறிப்பாக, குளிர்காலத்தில் நிலவும் அதிக குளர்ச்சியான சூழல் பேட்டரியில் ஏற்படும் வேதி வினையின் வேகத்தைக் குறைக்கச் செய்யும். இதுதவிர, கேபினை சூடாக்கவும் பேட்டரியின் திறனே பயன்படுத்தும். இதுமாதிரியான செயல்களின் காரணத்தினால் பேட்டரியின் திறன் குறைந்து, அது ரேஞ்ஜ் தருவதில் தடை ஏற்படுகின்றது.
இருப்பினும், அதன் இயக்கத்தில் தடை ஏற்படுவதில்லை. எதுவாக இருந்தாலும் மழைக் காலத்தில் வாகனத்தை இயக்குவது மிகவும் ஆபத்தானது. ஹைட்ரோபிளானிங் எனும் மிகவும் ஆபத்தான சூழல் மழைக் காலத்தில் நிலவும். ஆகையால், என்னதான் உங்கள் வாகனம் அதிக திறன்மிக்கதாக இருந்தாலும், கடுமையான மழை நேரத்தில் வாகனத்தை ஓட்டி எந்த ஆபத்திலும் சிக்க வேண்டாம் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.


Click it and Unblock the Notifications








