கார், ஆம்புலன்ஸ் என ஆலையில் இருந்து வெளியே வந்துக்கிட்டே இருக்கு! ஆந்திராவில் முழு வேகத்தில் இயங்கும் இசுஸு!!

இசுஸு மோட்டார்ஸ் (Isuzu Motors), ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகளவில் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று. கார்களை மட்டுமின்றி, கனரக வாகனங்களையும் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு மிக பெரும் நிறுவனமாக இசுஸு விளங்குகிறது. இந்த ஜப்பானிய நிறுவனம் இந்தியாவிலும் செயல்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீசிட்டி (Andhara, Sri City)-இல் இசுஸு நிறுவனத்திற்கு அதிநவீன தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில் 12 வருடங்களாக செயல்பட்டுவரும் இசுஸு நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்வதில் தற்போது பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஜப்பானுக்கும், ஆட்டோமொபைல் (Automobile) துறைக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு உண்டு. சுஸுகி, டொயோட்டா, நிஸான், டட்சன், இசுஸு என பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஜப்பானில் இருந்து உருவாகி உள்ளன. அதேபோல், இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயும் ஓர் நெருங்கிய பிணைப்பு உள்ளது. மேற்கூறப்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் கால்பதித்துள்ளன.

isuzu crossed 1 lakh production

இசுஸு நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் பெரியதாக வரவேற்பு கிடைக்காவிடினும், கனரக வாகனங்களுக்கு தொடர்ந்து கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர். இதன் மூலமாக, இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்வதில் புதிய மைல்கல்லை இசுஸு நிறுவனம் கடந்துள்ளது. அது என்னவென்றால், இந்தியாவில் உற்பத்தி செய்த வாகனங்களின் எண்ணிக்கையில் 1 லட்சம் என்கிற பிரம்மாண்ட சாதனை மைல்கல்லை இசுஸு கடந்துள்ளது.

ஸ்ரீசிட்டியில் உள்ள இசுஸு தொழிற்சாலையில் இருந்து 1 லட்சமாவது வாகனமாக இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் (D-MAX V-Cross) என்கிற பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. கடின உழைப்புக்கும், நீண்ட ஆயுட்காலத்திற்கும் பெயர்போன டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்-அப் டிரக் வாகனத்தை 2016ஆம் ஆண்டில் முதல்முறையாக இந்தியாவில் இசுஸு அறிமுகம் செய்தது.

isuzu crossed 1 lakh production

2016 ஏப்ரல் 27ஆம் தேதி ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் தனது உற்பத்தி தொழிற்சாலையை திறந்த இசுஸு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், அதனை தொடர்ந்து 2016 மே மாதத்தில் டி-மேக்ஸ் வி-கிராஸ் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இசுஸு உற்பத்தி செய்த முதல் வாகனம், டி-மேக்ஸ் வி-கிராஸ் எனலாம். தற்போது 1 லட்சமாவது வாகனமும் டி-மேக்ஸ் வி-கிராஸ் ஆக அமைந்திருப்பது சிறப்பான விஷயமாகும்.

2016இல் தொழிற்சாலையின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே இசுஸு பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது. தொழிற்சாலையின் 2ஆம் கட்ட செயல்பாடுகள் 2020ஆம் ஆண்டில் துவங்கப்பட்டன. இந்த தொழிற்சாலையில் இசுஸு வாகனங்களுக்கான என்ஜின்களும் அசெம்பிள் (Assemble) செய்யப்படுகின்றன. மேலும், இசுஸுவின் தொழிற்சாலையில் 14 லட்சத்திற்கும் அதிகமான, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட பாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

isuzu crossed 1 lakh production

இந்தியாவில் கடந்த 2 வருடங்களில் வாகன மற்றும் என்ஜின் உற்பத்தியை இசுஸு டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. இசுஸு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 22 சதவீதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இசுஸு நிறுவனத்தின் சிறப்பு என்னவென்றால், உலக தரத்திலான வாகனங்களையே இந்தியாவிலும் கொடுக்க விரும்புகிறது.

ஜப்பான், ஐரோப்பாவில் சிறப்பான விற்பனையில் உள்ள இசுஸு வாகனங்கள் தான் இந்தியாவில் பெரும்பாலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இசுஸு நிறுவனத்தில் இருந்து தற்சமயம் கார் பிரிவில் டி-மேக்ஸ் வி-கிராஸ் மற்றும் எம்யு-எக்ஸ் (MU-X) என இரு வாகனங்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்ரீசிட்டி தொழிற்சாலையில் தற்போது இசுஸு புரிந்திருக்கும் சாதனை ஆனது இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியை காட்டுகிறது. அதேநேரம், இந்தியாவில் இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட 1 லட்சம் இசுஸு வாகனங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவை வாகனங்கள் உற்பத்தி இடமாக பார்க்கும் வெளிநாட்டு நிறுவனங்களுள் இசுஸு மோட்டார்ஸ் ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2024, 7:00 [IST]
English summary
Isuzu crossed 1 lakh vehicles production milestone in india
மேலும்... #isuzu #car manufacturing #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X