உயிர் காக்கும் வாகனமா இல்ல ஆடம்பர காரா.. சந்து-பொந்துனு எங்க இருந்தாலும் நோயாளிகளை ஏத்திட்டு வந்திடலாம்!
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இசுஸூ மோட்டார்ஸ் (Isuzu Motors India), இந்தியாவில் சிறிய வகை உயிர் காக்கும் வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இசுஸு டி-மேக்ஸ் ஆம்புலன்ஸ் (ISUZU D-MAX Ambulance)-ஸையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. அவசர காலத்தில் உயிர்காக்கும் வகையில் செயல்படும் திறன் கொண்ட வாகனத்திற்கு அறிமுக விலையாக ரூ. 25.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் மட்டுமே இந்த வாகனத்தை இசுஸு மோட்டார்ஸ் தயார் செய்யவில்லை.
வேகம், பாதுகாப்பு மற்றும் கம்ஃபோர்ட் ஆகியவற்றை மனதில் வைத்தும் இந்த ஆம்புலன்ஸை இசுஸு மோட்டார்ஸ் தயார் செய்துள்ளது. மிக முக்கியமாக இந்தியாவின் அனைத்து விதமான நிலப்பரப்பிற்கு ஏற்ற வாகனமாகவும் இதனை இசுஸு தயார் செய்துள்ளது. மிகவும் கரடு-முரடான பாதையாக இருந்தாலும் இந்த ஆம்புலன்ஸ் சமாளித்துவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுமட்டுமில்லைங்க, சிறிய தோற்றம் கொண்டிருப்பதால் இந்த வாகனத்தை நகரத்தின் குறுகலான சாலையில் வைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால், பெரிய வகை ஆம்புலன்ஸ்களால் நுழைய முடியாத சாலைகளுக்கும் இது நுழைந்து உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் என தெரிகின்றது. மேலும், நெரிசல் மிகுந்த சாலைகளில் வைத்தும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சிறந்த இயக்க அனுபவத்திற்காக இந்த வாகனத்தில் ஹை-ரைடு சஸ்பென்ஷன், டபுள் விஷ்போன் செட்-அப் ஆகியவற்றை ஆம்புலன்ஸின் உருவாக்கத்தில் இசுஸு மோட்டார் பயன்படுத்தி இருக்கின்றது. இதே அமைப்பையே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எஸ்யூவி கார்கள் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் எஸ்யூவி கார்களுக்கு இணையானதாக இருக்கும் என்பது சந்தேகமே இல்லை.

குறிப்பாக, நோயாளி, மருத்துவ பணியாளர் மற்றும் ஓட்டுநர் அனைவருக்கும் இந்த வாகனம் மிக சிறந்த ரைடு அனுபவத்தையே வழங்கும். இதற்கேற்ப சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரிய டயர்கள், சிறிய திருப்பத்திற்கான சர்க்கிளை இந்த ஆம்புலன்ஸ் கொண்டிருக்கின்றது. எனவே தடையில்லா சேவையையும் இது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மிக முக்கியமான பயணிகள் பாதுகாப்பு அம்சங்களும் இந்த ஆம்புலன்ஸில் கொடுக்கப்பட்டு உள்ளன. டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், அவசர பிரேக் அசிஸ்ட் மறஅறும் பிரேக் ஓவர்-ரைடு சிஸ்டம் போன்ற நவீன கால கார்களில் வழங்கப்படும் பல்வேறு அம்சங்கள் இந்த ஆம்புலன்ஸில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்-ம் இசுஸு டி-மேக்ஸ் ஆம்புலன்ஸில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், அடிப்படை உயிர் காக்கும் கருவிகளும் இந்த ஆம்புலன்ஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக இது ஓர் ஆம்புலன்ஸ் என்பதால் வெளிப்புறத்தில் ஆம்புலன்ஸுக்கான லைட்டுகள், ஆம்புலன்ஸ் என்பதை பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
தொடர்ந்து, நோயாளிகளை சுலபமாக ஏற்றவும், இறக்குவதற்கும் ஏதுவாக அகலமாக திறக்கும் வசதிக் கொண்ட கதவுகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஸ்லைடிங் ஜன்னல் கண்ணாடிகளே இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு உள்ளன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த ஆம்புலன்ஸில் இசுஸு ஆர்இசட்4இ 1.9 லிட்டர் விஜிஎஸ் டர்போ இன்டர்கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 kW மற்றும் 360 என்எம் டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாகனம் ஆம்புலன்ஸாக இருந்தாலும், இதன் டிரைவர் கேபின் நவீன கார்களுக்கு டஃப் கொடுக்கக் கூடியதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இரட்டை காக்பிட் வகை இருக்கைகள், தரமான துணி கவரால் செய்யப்பட்டு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், குளிர்சாதன வசதி போன்றவையும் இதில் வழங்கப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications
