ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல... மொத்தமா 6 கார்களை விற்பனையிலிருந்து வெளியேத்த போறாங்க! டாடாவுக்கா இந்த நிலைமை!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கு சொந்தமான கார் உற்பத்தி நிறுவனம் ஜேஎல்ஆர் குழுமம் (Jaguar Land Rover). இது ஓர் சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த பிராண்டையே மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையிலேயே ஒரு சில பழைய மாடல்களை சந்தையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜாகுவார் (Jaguar), நிறுவனம் அனைத்து தயாரிப்புகளையும் எதிர்காலத்திற்கு ஏற்ப மின்சார (EV) மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு இருக்கின்றது.
இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே அந்த ஆறு கார் மாடல்களும் விற்பனையில் இருந்து அகற்றப்பட இருக்கின்றன. உலக அளவிலேயே இந்த நடவடிக்கையை அது மேற்கொள்ள இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஜாகுவார் பிராண்டின்கீழ் 7 கார் மாடல்கள் மட்டுமே உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இவற்றில் ஆறு கார் மாடல்களை அது அகற்ற இருப்பதாக அறிவித்து இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஜாகுவார் தற்போது அதன் போட்டியாளர்களினால் மிகக் கடுமையான போட்டி சூழலைச் சந்தித்து வருகின்றது. குறிப்பாக, லெக்சஸ், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி ஆகியோரால் அது சந்தித்து வரும் போட்டி மிகவும் சவாலானதாக உள்ளது.
இந்தமாதிரியான சூழலிலேயே தன்னுடைய ஆறு கார் மாடல்களை அகற்ற அது திட்டமிட்டுள்ளது. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி எஃப்-பேஸ் (F-Pace) கார் மாடல் விற்பனையில் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், இந்த காரும் நீண்ட காலத்திற்கு விற்பனையில் இருக்காது. அதுவும் வெளியேற்றப்படும் என்றே தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இந்த வெளியேற்றப்படும் வாகனங்களுக்கு பதிலாக அவற்றின் எலெக்ட்ரிக் அவதாரங்கள் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த வெளியேற்றம் பணிகள் தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளராக ஜாகுவார் மாற இருப்பதாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே சீக்கிரமே ஜாகுவாரும், டெஸ்லாவைபோ முழு நேர மின்சார வாகன உற்பத்தியாளராக மாறும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஜாகுவார் பிராண்டின்கீழ் எக்ஸ்இ (XE), எக்ஸ்எஃப் வேகன் (XF Wagon), எக்ஸ்எஃப் செடான் (XF Sedan), ஐ-பேஸ் (I-Pace), இ-பேஸ் (E-Pace) மற்றும் எஃப்-டைப் (F-Type) ஆகிய மாடல்களே விற்பனையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவற்றில் எஃப்-டைப்பே நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல் ஆகும். உலக சந்தையில் இந்த காருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இதை தற்சமயம் தக்க வைத்துக் கொள்ள ஜாகுவார் திட்டமிட்டு இருக்கின்றது. ஜாகுவார் அதன் எதிர்கால கார்களை ஜேஇஏ (JEA) எலக்ட்ரிக் வாகன மேடையில் வைத்து உருவாக்க இருக்கின்றது.
இது ஓர் லாங் வீல் பேஸ் பிளாட்பாரம் ஆகும். இந்த பிளாட்ஃபார்ம் வாயிலாக வேகமான சார்ஜிங் மற்றும் டூயல்-மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் போன்ற அம்சங்களைக் கொண்ட வாகனங்களை தயாரிக்கவும் முடியும். ஆகையால், சொகுசு மின்சார கார் பிரிவில் மிக சிறந்த போட்டியாளனாக இந்த கார் மாடல் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் சொகுசு கார் சந்தையில் அதன் இடத்தை மறுவரையறை செய்ய முயல்வதால், இந்த மூலோபாய மறுசீரமைப்பை மேற்கொள்ள முன் வந்திருக்கின்றது. இது ஒரு மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். அதேவேளையில், இது அது வெற்றியைக் காணும் என்றே பலரால் நம்பப்படுகின்றது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதிக லாபம் ஈட்டும் மாடல்களிலேயே அது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த யுக்தி அதற்கு லாபகரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








