11 ஆண்டு கால பயணத்திற்கு ஃபுல் ஸ்டாப் வைத்த ஜாகுவார்.. இனி இந்த காரை உற்பத்தி பண்ண மாட்டாங்களா!!
ஜாகுவார் (Jaguar) நிறுவனம் கடந்த 11 ஆண்டு காலமாக தயாரித்து வந்த கார் மாடல் ஒன்றின் உற்பத்தி பணிகளை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எஃப்-டைப் (F-Type) எனும் மாடலின் உற்பத்தி பணிகளையே நிறுத்த திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக எஃப்-டைப் இருக்கின்றது. இதன் உற்பத்தி பணிகளை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது ஜாகுவார் கார் காதலர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, எஃப்-டைப் லவ்வர்களை இந்த தகவல் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
கடைசி ஜாகுவார் எஃப்-டைப் காசில் ப்ரோம்விச் (Castle Bromwich) உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. நிறுவனம், விரைவில் மின்சார சொகுசு கார்கள் உற்பத்தியை கையில் எடுக்க இருக்கின்றது. இந்த திட்டத்தின் முன்னோட்டமாகவே நிறுவனம் எஃப்-டைப் கார் மாடலின் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றது.

இந்த காரின் உற்பத்தியை முதன் முதலில் 2013 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. இதுவரை 87,731 யூனிட்டுகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே எஃப்-டைப் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது கடைசியாக தயாரிக்கப்பட்டு இருக்கும் எஃப்-டைப் காரானது கெய்டனில் உள்ள ஜாகுவார் டெய்ம்லர் ஹெரிடேஜ் டிரஸ்ட்-இன் கார் சேகரிப்பில் சேர்க்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேநேரத்தில் இந்த காரை உலக நாடுகள் சிலவற்றில் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை விற்பனையில் இருக்கும் என ஜாகுவார் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, இங்கிலாந்து சந்தையில் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதி வரை விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அங்கு வரவேற்பு சற்று அதிகம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான இ-டைப் விட சற்று அதிக எண்ணிக்கையிலேயே இந்த மாடல் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. சுமார் 15 ஆயிரம் அதிக யூனிட்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சரியாக 2013 உலக வெளியீட்டிற்கு பின்னர் ஓராண்டு கழித்தே இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ரூ. 1.37 கோடிக்கு இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. வி6 எஸ் (V6 S) மற்றும் வி8 எஸ் (V8 S) என இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
கன்வெர்டபிள் மாடலாகவே அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, கூபே வெர்ஷனும் நாட்டில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. 2018-லேயே இதன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. ஜாகுவார் வெகுவிரைவில் மின்சார வாகனங்களையே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்க இருக்கின்றது.
அதாவது, எஃப்-டைப் மாடலின் உற்பத்தியைக் கை விட்டதைப் போலவே நிறுவனம் மற்ற அனைத்து எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியையும் நிறுத்த இருக்கின்றது. மேலும், இந்த நிறுவனம் ஏற்கனவே உலக அளவில் மின்சார வாகனங்களின் விற்பனையைத் தொடங்கிவிட்டது. இது அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார்களாக மட்டுமல்ல அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் எலெக்ட்ரிக் காராகவும் ஜாகுவார் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் நிறுவனம் உலக அளவில் மின்சார கார் உற்பத்தியை மட்டுமே முக்கிய குறிக்கோளாக இயங்க இருக்கின்றது. ஆகையால், இப்போது விற்பனைக்குக் கிடைக்கும் நிறுவனத்தின் அனைத்து எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்தையும் ஜாகுவார் திட்டமிட்டு இருக்கின்றது. இதற்கு தொடக்கமாகவே எஃப்-டைப் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








