முதலமைச்சர் முதல் உச்ச நடிகர்கள் வரை எல்லாரும் வாங்கியிருக்காங்க.. இந்த சாதனையைகூட செய்யலனா எப்படி!!

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கடந்த நிதியாண்டில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியட்டுள்ளது. அப்படி எத்தனை யூனிட்டுகளை அது சென்ற நிதியாண்டில் விற்பனைச் செய்திருக்கின்றது என்பது பற்றிய முழு விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை நடந்து முடிந்த 2023-24 ஆம் நிதியாண்டில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியிட்டு இருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியையே பதிவு செய்திருப்பதாக அது தெரிவித்து இருக்கின்றது.

Land rover discovery sport

நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமும் தற்போது ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றது. 2023-24 ஆம் நிதியாண்டில் லேண்ட் ரோவர் நிறுவனம் 4 ஆயிரத்து 436 யூனிட்டுகள் சொகுசு கார்களை விற்றிருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 81 சதவீதம் அதிகம் விற்பனையாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி ஒரு விற்பனை வளர்ச்சியை அந்நிறுவனம் சந்தித்ததில்லை என்பது இங்கே மீண்டும் கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, சென்ற நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் 854 சொகுசு கார் மாடல்களை ஜாகுவார் விற்றிருக்கின்றது. இது மிக சிறந்த விற்பனை எண்ணிக்கை ஆகும்.

Jaguar f pace

இப்போதைய நிலவரப்படி ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் லேண்ட் ரோவர் (Land Rover) பிராண்டின்கீழ் ரேஞ்ஜ் ரோவர் (Range Rover), டிஃபெண்டர் (Defender), டிஸ்கவரி (Discover) ஆகிய கார் மாடல்களையும், ஜாகுவார் (Jaquar) பிராண்டின் கீழ் எஃப்-பேஸ் (F-Pace) மற்றும் ஐ-பேஸ் (I-Pace) ஆகிய கார் மாடல்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றில் ரேஞ்ஜ் ரோவர் மற்றும் டிஃபெண்டர் ஆகிய கார் மாடல்களுக்கே இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ரேஞ்ஜ் ரோவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு மிக மிக அதிகம் ஆகும். இந்தியாவில் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் இந்த சொகுசு கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஏன் சில பணக்கார அரசியல்வாதிகள்கூட இந்த கார் மாடலின் தீவிர ஃபேனாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், பிரதமர் மோடி, எம்டிபி நாகராஜ், மேகாலயாவைச் சேர்ந்த என் தர் மற்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த பிராண்டின் சொகுசு கார்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, முதலமைச்சர் முக ஸ்டாலின் லேண்ட் ரோவரின் ரெண்டு முக்கிய தயாரிப்புகளையும் கடந்த காலத்தில் பயன்படுத்தியதை நம்மால் காண முடிகின்றது. ரேஞ்ஜ் ரோவர் மற்றும் டிஃபெண்டர் இரண்டும் அவருடைய கான்வாயில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், திரை உலகைச் சேர்ந்த உச்ச நடிகர்களும் ரேஞ்ஜ் ரோவர் காரை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஹ்ரித்திக் ரோஷன் (ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூ), அணிமல் திரைப்பட நடிகை த்ரிப்தி டிம்ரி (ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட்), கார்த்திக் ஆர்யன் (ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி), சல்மான் கான் (ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி எல்டபிள்யூ), மலையாள நடிகை லக்ஷ்மி (ரேஞ்ஜ் ரோவர் எவோக்), பூஜா ஹெக்டே (ரேஞ்ஜ் ரோவர்) உள்ளிட்டோரே ரேஞ்ஜ் ரோவர் கார் மாடலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களைப் போன்றோர்களினாலேயே தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றது. லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ்ஜ் ரோவர் கார் மாடலில் எவோக் (Evoque), வெலார் (Velar), ஸ்போர்ட் (Sport) மற்றும் ரேஞ்ஜ் ரோவர் (Range Rover) ஆகிய தேர்வுகளை விற்பனைக்கு வழங்குகின்றது.

இதேபோல், டிஃபெண்டரில், டிஃபெண்டர் 130 (Defender 130), டிஃபெண்டரில் 110 (Defender 110) மற்றும் டிஃபெண்டர் 90 (Defender 90) ஆகிய மூன்று விதமான தேர்வுகளையும் லேண்ட் ரோவர் வழங்குகின்றது. டிஸ்கவரி மாடலில் டிஸ்கவரி (Discovery) மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் (Discovery Sport) எனும் இரண்டு தேர்வுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் ரேஞ்ஜ் ரோவர் ரூ. 67.90 லட்சம் தொடங்கி 2.39 கோடி ரூபாய் வரையிலும், டிஃபெண்டர் 97 லட்சம் ரூபாய் தொடங்கி 1.38 கோடி ரூபாய் வரையிலான விற்கப்படுகின்றது. இதேபோல், டிஸ்கவரி 67 லட்சம் ரூபாய் தொடங்கி 97 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

இதுபோன்ற அதிக விலையில் இந்த பிராண்டின் கார்கள் விற்கப்படுவதாலேயே பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாக அவை உள்ளன. இந்த அனைத்து மாடல்களும் இந்திய பணக்காரர்களின் ஃபேவரிட் கார் மாடல்களே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப்போலவே ஜாகுவார் பிராண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பே இந்திய செல்வந்தர்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் மட்டுமில்லைங்க இன்னும் பல சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை வளர்ச்சியை சென்ற நிதியாண்டில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ஒன்றாகவும், முக்கிய பிராண்டாகவும் ஜாகுவார் லேண்ட் ரோவர் தற்போது மாறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2024, 20:11 [IST]
English summary
Jaguar land rover hits new sales milestone in fy 2024 in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+