சிறுத்தைய இப்படி செதச்சிட்டாங்களே! ஜாக்குவார் புதிய லேகோவை பாத்தீங்களா?

ஜாகுவார் நிறுவனம் தனது பிராண்டின் புதிய அடையாளத்தை தற்போது முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வராத திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது தனது அடையாளத்தையும் புதுமைப்படுத்தி பல்வேறு அப்டேட்களை செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜாகுவார் நிறுவனம் உலகில் சொகுசு கார்களை தயாரிக்கும் முதன்மையான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தி வந்தாலே சமூகத்தில் பெரிய அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் அநநிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

jaguar logo

இதுவரை ஜாகுவார் நிறுவனம் மக்கள் மத்தியில் பெற்று வந்த பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக தனது அடையாளத்தையே புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஜாக்பாட் நிறுவனம் வரும் 2026ம் ஆண்டு முதல் வெறும் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரிக்கப் போவதாக முடிவு செய்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய முடிவாக பார்க்கப்படுகிறது.

இதற்காக ஜாகுவார் நிறுவனம் தன்னை தன்னை தற்போது தயார்படுத்தி வருகிறது. அந்நிறுவனம் தயாரித்து வரும் எஃப்-பேஸ் காரின் கடைசி கட்ட விற்பனையையும் தற்போது துவங்கியுள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த காரின் விற்பனை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கார்கள் இருந்தால் அது மட்டுமே 2025ம் ஆண்டில் விற்பனைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jaguar logo

இந்நிலையில் ஜாகுவார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக எலெக்ட்ரிக் ஜிடி என்ற கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தான் விரைவில் ஜாகுவார் முதல் எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஜாகுவார் நிறுவனம் தனது புதிய பரிணாமத்தை புதிய அடையாளத்துடன் துவங்க முடிவு செய்துள்ளது.

இதையடுத்து ஜாகுவார் நிறுவனம் தனது புதிய அடையாளமாக புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் லோகோ ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரிய பிரபலமாக இருந்த நிலையில், தற்போது அதில் அடிப்படை அடையாளங்களை மாற்றாமல் ஆனால் புதுமையான லுக்கில் இருக்கும் வகையில் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

jaguar logo

ஜாக்குவார் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த லோகோ பார்ப்பதற்கு தங்க நிறத்தில் இருக்கிறது. வழக்கமாக லோகோவில் இருக்கும் ஜாகுவார் மிருகம் இந்த லோகோவிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஜே என்ற வார்த்தையை வைத்து வட்டமான ஒரு லோகோவும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜாகுவார் நிறுவனம் இந்த லோகோவை தங்க நிறத்தில் வெளியிட்டுள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. இதே நிறத்தில் தான் கார்களிலும் பயன்படுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது குறித்த தகவல் எல்லாம் நான் நிறுவனத்தின் கான்செப்ட் கார் வெளியாகும் போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாகுவார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதி சர்வதேச அளவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு அப்டேட்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் எல்லாம் 2026-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் நிறுவனம் தனது அடையாளத்தை முற்றிலுமாக மாற்றி மக்கள் மத்தியில் புதிதாக நம்பிக்கையை ஏற்படுத்தவும் புதிய பரிணாமத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் இந்த அவதாரத்தை எடுத்துள்ளது இது நிச்சய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனது பார்க்கலாம் இந்நிறுவனத்தின் எலக்ட்ரிகாரர்களும் நல்ல எதிர்காலத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2024, 11:45 [IST]
English summary
Jaguar logo new brand identity ev unveil
மேலும்... #jaguar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X