தாய் நாடுனாலே கொஞ்சம் ஒசத்திதான் போல.. இந்தியாவுக்கான ஸ்விஃப்ட்டவிட ஜப்பானுக்கான ஸ்விஃப்டில் அம்சங்கள் நிறைய!

இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் நேற்றைய (மே 09) தினம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 6.49 லட்சம் விலையிலேயே இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக புதிய தலைமுறை ஸ்விஃப்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேவேளையில், சுஸுகி நிறுவனத்தின் தாய் நாடான ஜப்பானில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஸ்விஃப்டைக் காட்டிலும் சற்று குறைவான அம்சங்களே இந்தியாவிற்கான ஸ்விஃப்ட்-இல் இடம் பெற்றிருக்கின்றன.

Suzuki swift

ஆமாங்க, சுஸுகி நிறுவனம் தன்னுடைய தாய் நாட்டிற்காக தயார் செய்திருக்கும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் மாடலில் மிக சிறப்பான மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை தாராளமாக வழங்கி இருக்கின்றது. ஆனால், இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் கார் மாடலில் அதை மாருதி சுஸுகி வழங்கவில்லை. அந்தவகையில், இந்திய மாடலில் இடம் பெற தவறிய அந்த 6சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்கவுள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

சூடாகும் வசதி கொண்ட இருக்கைகள்: சுஸுகி நிறுவனம் ஜப்பானியர்களுக்காக சில கூடுதல் சிறப்பு வசதிகளை 2024 ஸ்விஃப்ட் கார் மாடலில் வழங்கி இருக்கின்றது. அதில் மிக முக்கியமான ஒன்றாக சூடாகும் வசதிக் கொண்ட இருக்கைகள் இருக்கின்றன. பயணிகள் வெளியில் நிலவும் குளிரான சூழலை கதகதப்பாக அனுபவித்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தை இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரில் மாருதி சுஸுகி வழங்கவில்லை.

Suzuki swift interior

பாதுகாப்பு அம்சம்: இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் கார் மாடலில் இம்முறை அதிக பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் வசதியுடன் கூடிய மும்முனை சீட் பெல்ட் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

அதேவேளையில், ஜப்பானுக்கான ஸ்விஃப்ட் கார் மாடலில் இந்த அம்சங்களுடன் சேர்த்து இன்னும் பல சிறப்பு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மிக முக்கியமாக அடாஸ் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவரை மானிட்டர் செய்தல் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் ஆகியவற்றைச் செய்துக் கொள்ள முடியும்.

Suzuki swift seat

இத்துடன், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய எலெக்ட்ரானிக் பிரேக் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் எதுவும் இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஜப்பானுக்கான ஸ்விஃப்ட் கார் 5க்கு நான்கு ஸ்டார்களையும் பெற்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

மைல்டு ஹைபிரிட் சிஸ்டம்: இந்தியாவிற்கான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 25 கிமீ வரையில் ஒரு லிட்டருக்கு மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இதைவிட சற்று அதிக மைலேஜை ஜப்பானியர்களுக்கான ஸ்விஃப்ட் வழங்கும் என தெரிகின்றது. மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் ஜப்பானுக்கான ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Suzuki swift top view

1.2 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின் உடன் சேர்த்தே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், சிவிடி கியர்பாக்ஸ் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமும், மைல்டு ஹைபிரிட் அம்சமும் இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கூடுதல் நிற தேர்வுகள்: இந்தியாவிற்கான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் மாருதி சுஸுகி இரண்டு புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்து இருக்கின்றது. லஸ்டர் ப்ளூ (Luster Blue) மற்றும் நோவல் ஆரஞ்சு (Novel Orange) என்கிற அட்டகாசமான நிறங்களே அவை ஆகும்.

Maruti suzuki swift

இத்துடன் சேர்த்து சிஸ்லிங் ரெட் (Sizzling Red), பியர்ல் ஆர்க்டிக் ஒயிட் (Pearl Arctic White), மேக்மா கிரே (Magma Grey), ஸ்பிலெண்டிட் சில்வர் (Splendid Silver) ஆகிய நிற தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இதுதவிர, இரட்டை நிற தேர்வுகளும் புதிய ஸ்விஃப்ட்-இல் வழங்கப்படுகின்றது. மூன்று விதமான ஆப்ஷன்கள் இதில் வழங்கப்படுகின்றது.

அவை, லஸ்டர் ப்ளூ - மிட்நைட் பிளாக் ரூஃப் (Luster Blue with Midnight Black Roof), சிஸ்லிங் ரெட்-மிட்நைட் பிளாக் ரூஃப் (Sizzling Red with Midnight Black Roof) மற்றும் பியர்ல் ஆர்க்டிக் ஒயிட்-மிட்நைட் பிளாக் ரூஃப் (Pearl Arctic White with Midnight Black Roof) ஆகும். ஜப்பானுக்கான ஸ்விஃப்ட் காரில் மேலே பார்த்த நிற தேர்வுகளுடன் சேர்த்து மேலும் சில நிற தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

Maruti suzuki swift side view

அந்தவகையில், ஒற்றை நிற தேர்வில் கூல் யெல்லோ மெட்டாலிக் (Cool Yellow Metallic), காரவன் ஐவோரி மெட்டாலிக் (Caravan Ivory Metallic) மற்றும் சூப்பர் பிளாக் பேர்ல் (Super Black Pearl)-ம், டூயல் டோன் நிற தேர்வுஆப்ஷனில் கூல் யெல்லோ -கருப்பு நிற ரூஃப் (Cool Yellow with a black roof) ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த நிற தேர்வுகள் இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படவில்லை.

அனைத்து வீல்களும் இயங்கும் திறன்: ஜப்பானுக்கான ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கும் மற்றும் ஓர் மிக முக்கியமான சிறப்பு வசதியாக அனைத்து வீல்களும் இயங்கும் திறன் இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்விஃப்ட் முன் வீல் இயக்கம் கொண்டது மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி தன்னுடைய தாய் நாட்டிற்காக 2024 ஸ்விஃப்ட் காரை பார்த்து பார்த்து ரெடி செய்திருப்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில் இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரிலும் அதிக சிறப்பம்சங்களை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. ஆகையால், முந்தைய தலைமுறையைப் போலவே புதிய ஸ்விஃப்ட் காரும் அதிக விற்பனை வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2024, 19:06 [IST]
English summary
Japan spec swift and india spec swift comparison details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X