வாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த பஸ்ல டிராவல் பண்ணிடனும்.. ஸ்டார் ஹோட்டல்களையே இது தூக்கி சாப்பிட்ருச்சு!

பேருந்தை டிராவலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த காலம் விரைவில் மாற இருக்கின்றது. எதிர்காலத்தில் பேருந்துகளே பலருக்கு வீடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான சூழலே இப்போது உருவாகி உள்ளது. இதை உறுதிப்படுத்துகின்ற ஓர் சம்பவமே தற்போது அரங்கேறி இருக்கின்றது. ஆமாங்க, பேருந்து ஒன்று அழகிய மற்றும் சகல வசதிகள் தாங்கிய மோட்டார்ஹோமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மோட்டார்ஹோம் (MotorHome) அல்லது கேம்பிங் வேன் (Camping Van) என்றழைக்கப்படும் இந்த வகை வாகனங்கள் சமீப காலமாக இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து காணப்படுகின்றன. பெரிய பெரிய பணக்காரர்கள் மற்றும் நடிகர்களின் பயன்பாட்டில் மட்டுமே இந்த வகை வாகனங்கள் முன்பெல்லாம் காணப்பட்டு வந்தன. ஆனால், இப்போது வெகுஜன பயன்பாட்டிற்கு இந்த வகை வாகனங்கள் வர தொடங்கி இருக்கின்றன.

Jcbl signature motorhomes

சொல்லப்போனால், சிலர் குடும்பத்துடன் வெளியூர் மற்றும் சுற்றுலா செல்ல வேண்டி தங்களின் வழக்கமான கார் மற்றும் மினி வேன்களையே மோட்டார்ஹோமாக மாற்றி பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். தங்களுடைய இந்த வாகனத்துடன் டிராவலை யுட்யூபில் பதிவிட்டு காசும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இம்மாதிரியான சூழலிலேயே ஆமை வேகத்தில் வளர்ந்து வரும் இந்த கல்சரை சூடுபிடிக்கச் செய்யும் விதமாக பிரபல நிறுவனம் ஒன்று பேருந்தை சொகுசு வீட்டிற்கு இணையாக மாற்றி அதனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

சண்டிகரைச் சேர்ந்த ஜேசிபிஎல் குழுமமே (JCBL Group) அது ஆகும். இந்த நிறுவனம் பாரத் பென்ஸ் (Bharat Benz) பிராண்டின் முன்னணி பேருந்து மாடலையே ரீகிரியேஷனல் வாகனமாக மாற்றி இருக்கின்றது. அதாவது, பேருந்தை ஆடம்பர வீட்டிற்கு இணையான அம்சங்கள் கொண்டதாக மாற்றி இருக்கின்றது.

Jcbl signature motorhomes front view

இதுவே நிறுவனத்தின் முதல் தனிநபர் பயன்பாட்டிற்கான மோட்டார்ஹோம் ஆகும். நீண்ட தூர பயணம் மற்றும் கேம்ப் செய்யும் நோக்கில் பயணிப்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சகல வசதிகளை இந்த பேருந்தில் ஜேசிபிஎல் வழங்கி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் வீட்டில் என்ன மாதிரியான அடிப்படை வசதிகள் எல்லாம் இருக்குமோ அந்த அம்சங்கள் அனைத்தும் இந்த பேருந்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், சமையலறை (சமைப்பதற்கான அனைத்து வசதிகளும் இதில் இடம் பெற்றிருக்கும்), குளியல் அறை (சவருடன் கூடிய குளியலறை மற்றும் கழிவறை இருக்கும்) மற்றும் பெரிய பெட்ரூம் (ஓர் கிங் சைஸ் மெத்தை, டெலிஸ்கோபிக் லேடர், காஃபி மேக்கர் உள்ளிட்டவை இதில் இருக்கும்) ஆகிய வசதிகளே இந்த பேருந்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Jcbl signature motorhomes side view

இதுதவிர, பேருந்திற்குள் பிரீமியம் வசதிகள் பலவற்றையும் இந்த நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில், ஏசி, ரிமோட் கன்ட்ரோல் வசதிக் கொண்ட பிளைன்ட்ஸ், பர்சனல் ஏரியா, கார்க்வுட் ஃப்ளூரிங் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், கேம்ப் செய்யும்போது பேருந்திற்கு வெளியே இருந்தபடி கேம்பை என்ஜாய் செய்வதற்கான வசதிகளும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதன்படி விரிவாக்கம் செய்யக் கூடிய பாடி, எலெக்ட்ரிக் ஆவ்னிங், லைட்டிங் செட்-அப், என்ட்ரீ கதவுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர பொழுதுபோக்கு அம்சங்கள் பலவும் இந்த மோட்டார்ஹோமில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 42 அங்குல டிவி, பிரீமியம் 5.1 சவுண்ட் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், ஒய்-ஃபை இணைப்பு வசதி, சார்ஜிங் பாயிண்ட், ஓவர்ஹெட் ஸ்டோரேஜ், மடக்கி-விரித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட டேபிள் டாப்ஸ் ஆகியவையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமா பெரிய சோஃபா மற்றும் 4 லேசி பாய் சோபா செட்டும் இந்த பேருந்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேருந்தை மட்டுமல்ல சிலர் கார்களைகூட கேம்பர் வாகனமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். ஏன் ஒரு சிலர் ஆட்டோரிக்ஷாவைகூட கேம்பர் வானமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்று கேம்பர் வாகன கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்து வருவதைப் பார்த்தால் விரைவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில கேம்பர் வாகனங்களை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 1, 2024, 14:06 [IST]
English summary
Jcbl unveils signature motorhomes luxury on wheels
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X