இன்னும் எவ்ளோ நாளைக்கு விற்பனைக்கு கிடைக்குமோ.. செம்ம அழகா அலங்கரிச்சு விற்பனைக்கு கொண்டாந்திருக்காங்க!

ஜீப் (Jeep) நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 8 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக அந்நிறுவனம் நாட்டில் ஓர் சிறப்பு பதிப்பு கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. காம்பஸ் எஸ்யூவி (Compass SUV) கார் மாடலையே சிறப்பு பதிப்பாக தயார் செய்து அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இது காம்பஸ் அனிவர்சரி எடிசன் (Compass Anniversary Edition) எனும் பெயரில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். வழக்கமான காம்பஸ் எஸ்யூவி-யைக் காட்டிலும் மிக அழகான தோற்றத்தில் இது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

வேற ஒன்னும் இல்லைங்க வழக்கமான காம்பஸ் எஸ்யூவி-யை அலங்கரித்திருப்பதை விட இது சற்று கூடுதல் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக, பான்னெட்டைக் கூறலாம். இந்த சிறப்பு பதிப்பின் பான்னெட்டின் மேற்பகுதியில் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் மையப் பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Jeep compass anniversary edition interior design

இது அந்த பான்னெட்டின் கட்டுமஸ்தான லுக்கிற்கு கூடுதல் முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த தனித்துவமான நிற அலங்கரிப்பை காரின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல உட்பக்கத்திலும் ஜீப் மேற்கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த பிரீமியம் கார் கூடுதல் பிரீமியமானதாக மாறி இருக்கின்றது.

இந்த மாதிரியான வேலைப்பாடுகளுடன் மட்டுமே ஜீப் காம்பஸ் அனிவர்சரி எடிசன் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. மெக்கானிக்கல் விஷயத்தில் எந்தவொரு மாற்றத்தையும் அது மேற்கொள்ளவில்லை. எனவே, எஞ்சின், கியர்பாக்ஸ், தொழில்நுட்பம் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப் அனைத்திலும் வழக்கமான காம்பஸ் கார் மாடலைப் போலவே அது காட்சியளிக்கின்றது.

Jeep compass anniversary edition out look

குறிப்பாக, இந்த காரின் உட்பக்கத்தை ஜீப் மெருகேற்றியிருக்கும் விதமாக மிகவும் கவரக் கூடியதாக உள்ளது. வெல்வெட் சிவப்பு நிற இன்செர்ட்டுகளை காருக்குள் அதிக அளவில் பார்க்க முடிகின்றது. அது நிச்சயம் காரில் பயணிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். குறிப்பாக, காரின் இருக்கை சிவப்பு நிறத்தில் இருப்பது வேற லெலவில் இருக்கின்றது.

இத்துடன், டேஷ்கேமிரா, ஆம்பியன்ட் லைட் மற்றும் பல சிறப்பு கருவிகளையும் இந்த காரில் ஜீப் வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக கூடுதல் வாடிக்கையாளர்களை இந்த கார் மாடல் இந்தியாவில் பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வர இருக்கின்றன.

இந்த பண்டிகை நாட்களில் வழக்கமானதை விட வாகன விற்பனைச் சற்றே சூடுபிடித்துக் காட்சியளிக்கும். இந்த மாதிரியான சூழலிலேயே ஜீப் இந்த சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், இந்த சிறப்பு பதிப்பு கார் மாடலுக்கு ரூ. 25.26 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த அதிகபட்ச விலைக்கு ஏற்ப ஏகப்பட்ட சிறப்பம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், எல்இடி ஹெட்லைட், 17 அங்குல சில்வர் நிற அலாய் வீல்கள், கார்னரிங் வசதிக் கொண்ட பனி மின் விளக்குகள், இன்டிகேட்டர் லைட்டுடன் கூடிய பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 10.1 அங்குல தொடுதிரை சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளுடன் கொடுக்கப்பட்டு உள்ளது. இத்துடன், 7 அங்குல டிரைவருக்கான திரை, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டூயல் ஜோன் ஏசி, டூயல் ஏர் பேக், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜீப் காம்பஸ் இந்தியாவில் பலதரப்பட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக உள்ளது. குறிப்பாக, ஹூண்டாய் டக்சன், டாடா ஹாரியர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் போன்ற கார் மாடல்களுக்கே போட்டியாக உள்ளது. இவற்றிற்கான போட்டியை இரட்டிப்பாக்கும் வகையிலேயே புதிய சிறப்பு பதிப்பை ஜீப் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2024, 10:45 [IST]
English summary
Jeep compass anniversary edition now available in india rs 25 26 lakh discover the features
மேலும்... #jeep #jeep compass #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+