இதை விட யாராலும் விலையை குறைக்க முடியாது!! அப்புறம் என்ன... இப்போதே காரை புக் பண்ணுங்க!
ஜீப் (Jeep), பிரபலமான அமெரிக்க கார் நிறுவனம். உலகின் பல நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் கார்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகின்றன. நம் நாட்டில் இந்த அமெரிக்க கார் நிறுவனத்தின் காம்பஸ் 5-சீட்டர் எஸ்யூவி கார் பிரபலமானதாக, அதிக பேரால் வாங்கப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜீப் கார்களிலேயே விலை குறைவானதாக காம்பஸ் விளங்குகிறது. இந்த நிலையில், காம்பஸ் காரின் விலையை மேலும் குறைக்கும் விதமாக இந்த காரின் விலையை ஜீப் நிறுவனம் இந்தியாவில் அதிரடியாக குறைத்துள்ளது. இதன்படி, எவ்வளவு குறைவான விலையில் இந்த காரை வாங்கலாம் என்பதையும், இந்த ஜீப் காரை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மார்க்கெட்டில் விற்பனை செய்யும் கார்களின் விலைகளை மிகவும் சில கார் நிறுவனங்கள் மட்டுமே குறைப்பது வழக்கம். அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றுதான் ஜீப் ஆகும். குறிப்பாக, காம்பஸ் காரின் விலையை அவ்வப்போது ஜீப் நிறுவனம் குறைப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஜீப் காம்பஸின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த முறை காம்பஸ் காரின் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் குறைக்கப்படவில்லை. ஸ்போர்ட், லாங்கிட்யூட், நைட் ஈகிள், லிமிடெட், பிளாக் ஷார்க் மற்றும் மாடல் எஸ் என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் இந்தியாவில் காம்பஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, காம்பஸ் காரின் ஆரம்ப விலை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
முன்பு, ஜீப் காம்பஸின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.69 லட்சமாக இருந்தது. தற்போது அது ரூ.1.70 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.18.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது விலை குறைக்கப்பட்டுள்ள ஜீப் காம்பஸின் பேஸ் வேரியண்ட்டில் 8.4-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 17-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் எல்இடி ஹெட்லைட்களை பெறலாம்.

ஜீப் காம்பஸில் டீசல் என்ஜின் மட்டுமே வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் இந்த கார் கிடைப்பதில்லை. காம்பஸில் பொருத்தப்படும் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 167 பிஎச்பி மற்றும் 350 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த டீசல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் பெறலாம்.
ஆனால், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ள காம்பஸ் ஸ்போர்ட் கார் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. காம்பஸ் காரில் என்ஜின் ஆற்றல் ஆனது காரின் முன் சக்கரங்களுக்கு செல்கிறது. அதேநேரம், அனைத்து 4 சக்கரங்களுக்கு செல்லும் வகையிலான ஆப்ஷனிலும் இந்த காரை வாங்கலாம். ஆனால், இந்த ஆப்ஷனுக்கு நீங்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் காம்பஸ் காரை வாங்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமெரிக்கன் ஸ்டைலில் கார் வாங்க வேண்டும் என நம்மில் நிறைய பேருக்கு ஆசை இருக்கும். ஏனெனில், அமெரிக்கன் ஸ்டைல் கார் என்றாலே நன்கு நிமிர்ந்த உடலமைப்பில் பார்ப்பதற்கே கம்பீரமான தோற்றத்தில் இருக்கும். அதற்கு, ஜீப் காம்பஸ் சரியான சாய்ஸ் ஆகும். தற்போது விலை குறைக்கப்பட்டு இருப்பதினால், ஜீப் காம்பஸை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் ஆகும்.
ஜீப் இந்தியா நிறுவனம் அடுத்ததாக, மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. காம்பஸ் 5-சீட்டர் காரின் லாங்-வீல்பேஸ் வெர்சனாக மெரிடியன் விளங்குகிறது. அதாவது, காம்பஸை காட்டிலும் நீளமானதாக, அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியதாக மெரிடியன் விளங்குகிறது. மெரிடியன் கார் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை இந்தியாவில் பெற உள்ளது.


Click it and Unblock the Notifications









