மிச்சப்படுத்தும் பணத்தில் ஒரு பைக்கை வாங்கிவிடலாம்... சலுகையை இப்போது தவறவிட்டால் அப்புறம் ரொம்ப கஷ்டம்!!
ஜீப் (Jeep), உலகளவில் பிரபலமான அமெரிக்க கார் நிறுவனம். இந்தியாவில் இந்த நிறுவனம் மிக முக்கியமான மைல்கல்லை கடந்துள்ளது. அதன் வெளிப்பாடாக, ஜீப் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக அட்டகாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ள இந்த சலுகையின் மூலம் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களை எந்த அளவிற்கு குறைவான விலையில் வாங்கலாம் என்பதையும், இந்த ஜீப் கார்களை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கடந்த காலங்களில் இருந்து இந்தியாவில் பல்வேறு அமெரிக்க கார் நிறுவனங்கள் தங்களது வணிகத்தை மேற்கொண்டுள்ளன. பின்னர், இந்திய கார் சந்தையில் உள்ள சவால்களை சமாளிக்க முடியாமல் நடையை கட்டியுள்ளன. சமீபத்தில் கூட, ஃபோர்டு மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். பல நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் டெஸ்லா நம் இந்தியாவில் நுழைவதற்கு கடந்த பல வருடங்களாக யோசித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம், நம் நாட்டில் குறைந்த விலையில் கார் வாங்குபவர்களே அதிகம் உள்ளனர். இருப்பினும், இன்னமும் நம் நாட்டில் தாக்குப்பிடித்து கொண்டிருக்கும் அமெரிக்க கார் நிறுவனம் என்றால், அது ஜீப் ஆகும். கிட்டத்தட்ட கடந்த 8 வருடங்களாக இந்தியாவில் ஜீப் நிறுவனம் அதன் கார்களை விற்பனை செய்து வருகிறது. 8ஆம் வருட நிறைவை கொண்டாடும் விதமாகவே தற்போது ஜீப் இந்தியா நிறுவனம் சில கவர்ச்சிக்கரமான சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, ஜீப் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களை ரூ.2.50 லட்சம் வரையில் மதிப்பிலான சலுகைகள் உடன் வாங்கலாம். 'சுதந்திர சலுகைகள்' (Freedom Benefits) என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளில் எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயலிட்டி மற்றும் கார்ப்பிரேட் தள்ளுபடிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த சலுகைகளின் மூலமாக, ஜீப் காம்பஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2.50 லட்சம் வரையிலான பணம் தள்ளுபடியை பெறலாம்.
அதேபோல், ஜீப் மெரிடியன் காரை வாங்குபவர்கள் ரூ.2 லட்சம் வரையிலான சலுகைகளை பெறலாம். இந்த சலுகைகள் இந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம், காம்பஸ், மெரிடியன், வ்ராங்க்லர் மற்றும் கிராண்ட் செரோக்கி என மொத்தம் 4 விதமான கார்களை ஜீப் நிறுவனம் விற்பனை செய்கிறது.

இதில், காம்பஸ் மற்றும் மெரிடியனுக்கு மட்டுமே சலுகைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன, மற்றவைகளுக்கு இல்லையா? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ஜீப் வ்ராங்க்லர் மற்றும் கிராண்ட் செரோக்கியை வாங்குபவர்களும் சலுகைகளை பெறலாம். ஆனால், வ்ராங்க்லர் மற்றும் கிராண்ட் செரோக்கி கார்களின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கு மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த வேரியண்ட்கள் அவை? அவற்றிற்கான சலுகைகள் என்ன? என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆதலால், அதுகுறித்து அறிய அருகில் உள்ள ஜீப் டீலர்ஷிப் ஷோரூம் மையத்தை அணுகவும். மேலும், புதியதாக ஜீப் கார்களை வாங்குபவர்களுக்கு மட்டுமல்லாமல், ஏற்கனவே வாங்கியவர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜீப் கார் உரிமையாளர்கள் சர்வீஸ் செய்யும்போது சலுகைகளை பெறலாம். கார் சர்வீஸில் பணியாளர்களுக்கான கட்டணம், கார் ட்ரீட்மெண்ட்ஸ் மற்றும் பாடி ரிப்பேர்களில் 7.8% வரையில் தள்ளுபடி கிடைக்கும். ஆனால், இந்த சர்வீஸ் தள்ளுபடி ஆனது ஆகஸ்ட் 17ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜீப் காம்பஸ் காருக்கு மட்டுமே ஓரளவிற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. ஜீப் மெரிடியன், கிராண்ட் செரோக்கி மற்றும் வ்ராங்க்லர் கார்களை சில பணக்காரர்கள் மட்டுமே வாங்குகின்றனர். அப்படியிருந்தும், 8 வருடங்களாக இந்திய மார்க்கெட்டில் தாக்குப்பிடித்து இருப்பது ஜீப் இந்தியா நிறுவனத்தின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








