எல்லா பக்கமும் கருப்பு மட்டும் தான்! இப்படியொரு காரை ரோட்டுக்கு கொண்டு போனால் எல்லார் பார்வையும் உங்க மேல தான்

ஜீப் (Jeep) நிறுவனம் அதன் பிரபலமான காம்பஸ் (Compass) காரில் 'நைட் ஈகிள்' (Night Eagle) என்கிற பெயரில் புதியதாக ஒரு ஸ்பெஷல் எடிசன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜீப் காம்பஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் இந்திய மார்கெட்டில் தனக்கான நிலையான இடத்தை பிடிக்க கடந்த சில வருடங்களாகவே மிகவும் போராடி வருகிறது. ஜீப் நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் ஓரளவிற்கு சுமாராக விற்பனை செய்யப்படும் கார் என்றால், அது காம்பஸ் ஆகும். இது ஓர் 5 இருக்கைகளை கொண்ட எஸ்யூவி கார் ஆகும்.

jeep compass night eagle edition

இந்த காரில் புதியதாக நைட் ஈகிள் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.25.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஸ்பெஷல் எடிசன் என சொல்வதை காட்டிலும், லிமிடெட் எடிசன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், குறுகிய காலத்திற்கு மட்டுமே காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

பெயருக்கு ஏற்ப இந்த நைட் ஈகிள் எடிசன் கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் கிடைக்கும். காரில் இருந்து தனியாக தெரியும் வகையில், காரின் மேற்கூரை கிரில், ரூஃப் ரெயில்கள், 'நைட் ஈகிள் எடிசன்' லோகோக்கள் மற்றும் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் இந்த ஸ்பெஷல் எடிசன் காரை வெள்ளை மற்றும் சிவப்பு நிற பெயிண்ட் ஆப்ஷனிலும் வாங்கலாம்.

இந்த பெயிண்ட் ஆப்ஷன்களில் காரின் மேற்கூரை கருப்பு நிறத்தில் கிடைக்கும். புதிய காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் காரின் உள்ளே முக்கிய அம்சமாக டேஸ்போர்டு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுப்போக்கு திரையையும் இந்த சிறப்பு பதிப்பு காம்பஸ் காரில் ஸ்டாண்டர்ட் அம்சமாக பெறலாம்.

jeep compass night eagle edition

இவற்றுடன், பனோராமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி, பிரீமியம் கார்பெட் தரைப்பாய்கள், காருக்கு அடியில் விளக்குகள், காருக்குள் பல்வேறு வண்ணங்களில் விளக்குகள் மற்றும் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்டவற்றையும் காம்பஸ் நைட் ஈகிள் எடிசனில் பெறலாம். புதிய காம்பஸ் நைட் ஈகிள் எடிசன் காரை 2 லிட்டர் டீசல் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடியும்.

அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த டீசல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் உடன் இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பெறலாம். 6-ஸ்பீடு மேனுவல் & 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்பன அந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் ஆகும். இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் காம்பஸ் நைட் ஈகிள் எடிசனின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை குறைவான கார்கள் மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கு இடைப்பட்ட விலையில் ஜீப் காம்பஸ் விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால், சொகுசான வசதிகளை பெறும் அதேநேரம் காம்பஸ் காரில் மைலேஜையும் சிறப்பானதாக பெற முடியும். காம்பஸ் காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக புதிய நைட் ஈகிள் எடிசனை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 11:53 [IST]
English summary
Jeep introduces all black compass night eagle edition check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+