ஃபார்ச்சூனரை ஓரங்கட்டி இந்த காரை தான் இனி அரசியல்வாதிகள் வாங்க போறாங்க! விலையும் ரூ2 லட்சம் குறைஞ்சிடுச்சு!

ஜீப் நிறுவனம் தனது மெரிடியன் காரின் விலையை ரூபாய் 2 லட்சம் வரை குறைத்துள்ளது. இதன் மூலம் இந்த காருக்கு போட்டியாக இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை விட இந்த கார் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதனால் இனி டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் அந்த காருக்கு பதிலாக இந்த காரை கூட வாங்குவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

அமெரிக்க நிறுவனமான ஜீப் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் முழு சைஸ் எஸ்யூவி காராக ஜீப் மெரிடியன் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன் இந்த ஆண்டு இறுதியில் வரப்போவதால் தற்போது இருக்கும் ஸ்டாக்கை கிளியர் செய்வதற்காக காரின் விலையை ரூபாய் 2 லட்சம் வரை குறைந்துள்ளது.

Jeep Meridian price cut

இதுவரை ஜீப் மெரிடியன் கார் மார்க்கெட்டில் ரூபாய் 31.23 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இனி இந்த காரின் விலை 29.49 லட்சம் என்று ஆரம்ப விலையில் இருந்து விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் இந்த காருக்கு போட்டியாக அதிகமாக விற்பனையாகி வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பொருத்தவரை ரூபாய் 33.43 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

ஜீப் நிறுவனம் இந்த விலை குறைப்பை ஓவர்லேண்ட் மற்றும் லிமிடெட் (ஓ) ஆகிய இரண்டு பேரியண்ட்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஸ்பெஷல் மெரிடியன் எக்ஸ் என்ற பேக்கேஜையும் பெற முடியும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் பிரீமியம் மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார்கள் எல்லாம் விற்பனையாகி வருகின்றன.

Jeep Meridian price cut

ஜீப் நிறுவனம் தனது மெரிடியன் காரின் விலையை குறைப்பதற்கு மிக முக்கிய காரணம் இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்த ஆண்டு இறுதியில் வரப்போவதுதான். ஏற்கனவே மெரிடியன் 2.0 என்ற இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கார் அடாஸ் தொழிற்நுட்பத்துடன் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஜீப் நிறுவனம் போஷ் நிறுவனத்துடன் பார்ட்னர் வைத்து இந்த காரை அப்டேட்டை செய்துள்ளது.

இந்த காரின் வருகைக்கு முன்னர் இருக்கும் ஸ்டாக்குகளை எல்லாம் கிளியர் செய்யும் பட்சத்தில் புதிய காரை பிரஷ்ஷாக விற்பனை செய்யலாம் என்ற நோக்கத்தில் தற்போது குறைந்த விலையில் இந்த காரை விற்பனை செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படியாக வரப்போகும் ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் கார்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கப் போகிறது என்ற விபரங்களை பார்ப்போம்.

Jeep Meridian price cut

ஜீப் மெரிடியன் 2.0 காரில் முக்கியமாக அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது. இதில் அடாப்டிங் க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்க கொலிஷன் பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும். இதுபோக காருக்குள்ளே 10.1 இன்ச் கொண்ட ப்லோட்டிங் இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் 10.25 கொண்ட இன்ஃபோடைமென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளன. காரின் உட்புற மெட்டீரியல் மற்றும் கலர்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.

மேலும் இந்த காரில் முன்பக்கமும் பின்பக்கமும் டேஷ் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. காருக்குள்ளே ஏர் பியூரிஃபையர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இஞ்சினில் எந்த விதமான மாற்றமும் இல்லை. தற்போது உள்ள அதே இன்ஜின் தான் வழங்கப்படுகிறது. வாங்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 168 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் 4X 4 சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜீப் நிறுவனம் தனது மெரிடியன் காரின் விலையை குறைத்துள்ளதால், இந்த காரின் ஸ்டாக்குகள் எல்லாம் அடுத்தடுத்த மாதங்களில் விற்று தீருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பார்ச்சூனர் காரை வாங்க நினைக்கும் பலர் தங்களது எண்ணத்தை மாற்றி ஜீப் மெரிடியன் காரை வாங்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த காரும் லுக்கில் சிறப்பான காராக தான் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 13:56 [IST]
English summary
Jeep meridian price cut prices slashed rs 2 lakh
மேலும்... #jeep #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X